விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு99

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தேகம்[தொகு]

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் விரைந்து நீக்கப்படும் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளை தற்போது காணமுடியவில்லை, அனைத்து கட்டுரைகளும் விரிவாக்கம் செய்தாயிற்றா ?? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:48, 8 சூன் 2014 (UTC)[பதில் அளி]

ஐப்ரல் 15 - மே 15, 2014 காலத்தில், மேம்படுத்தும் நோக்குடன் குறித்த கால வார்ப்புரு இடப்பட்ட பெரும்பாலான கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டு விட்டதால், அண்மைய மாற்ற அறிவிப்புகளை நிறுத்தி வைத்திருக்கிறேன். --இரவி (பேச்சு) 13:56, 14 சூன் 2014 (UTC)[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

எனது பேச்சுப் பக்கத்திலும் இன்னும் சில பயனர்களின் பேச்சுப் பக்கத்திலும் Muthuppandy pandian பதித்த கருத்தினை இங்கு பதிவு செய்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 18 சூன் 2014 (UTC)[பதில் அளி]

2014 ஜனவரி 11ஆம் தேதி தி இந்து தமிழ் நாளிதழின் துணை பதிப்பில் 4ஆம் பக்கத்தில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியா இந்திய மொழிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் குறைந்த அளவாவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்று செய்யப்படுவதில்லை என்பது ஒரு வருத்தம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் (Disease) என்ற நோய் இதில் ஆங்கிலத்தில் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழில் சொர்ப்ப அளவே தமிழ் படுத்தப்பட்டுள்ளது. இந்த விசயம் பற்றி எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 06:25, 18 சூன் 2014 (UTC)[பதில் அளி]

இணையத்தில் தேடியபோது இந்தப் பக்கம் கிடைத்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 18 சூன் 2014 (UTC)[பதில் அளி]
Muthuppandy pandian உங்களின் பதிவைப் படித்ததும், அந்தப் பத்திரிகைதான் வருந்தியிருந்தது என நினைத்தேன். அது உங்களின் வருத்தம் என்பதனை இப்போது அறிந்தேன். வருந்தாதீர்கள், உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த விசயத்தில் ஆங்கில விக்கியுடன் ஒப்பிடுதல் பொருத்தமற்றது என நான் கருதுகிறேன். அங்குள்ள பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை நாம் பார்க்கவேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இல்லாத எவ்வளவோ நல்ல கட்டுரைகள் தமிழில்மட்டுமே உள்ளன என்பதும் உண்மை! உங்களைப் போன்ற தன்னார்வலர்களின் பங்களிப்பினால் தமிழ் மேலும் வளரும்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:46, 18 சூன் 2014 (UTC)[பதில் அளி]

நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனாலும் இதில் ஒன்றை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும். ஆங்கில விக்கிக்கு இருப்பதுபோல் தமிழ் விக்கிக்கு பயனர் குறைவுதான் என்றாலும், முக்கியம் என்று மனதில் படும் விசயத்தையாவது தமிழ் படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுதான் என் ஆதங்கம்.--Muthuppandy pandian (பேச்சு) 07:52, 18 சூன் 2014 (UTC)[பதில் அளி]

== # தலைப்பு

 1. தலைப்பு எழுத்துக்கள் ==

Media Viewer is now live on this wiki[தொகு]


Media Viewer lets you see images in larger size

Greetings— and sorry for writing in English, please translate if it will help your community,

The Wikimedia Foundation's Multimedia team is happy to announce that Media Viewer was just released on this site today.

Media Viewer displays images in larger size when you click on their thumbnails, to provide a better viewing experience. Users can now view images faster and more clearly, without having to jump to separate pages — and its user interface is more intuitive, offering easy access to full-resolution images and information, with links to the file repository for editing. The tool has been tested extensively across all Wikimedia wikis over the past six months as a Beta Feature and has been released to the largest Wikipedias, all language Wikisources, and the English Wikivoyage already.

If you do not like this feature, you can easily turn it off by clicking on "Disable Media Viewer" at the bottom of the screen, pulling up the information panel (or in your your preferences) whether you have an account or not. Learn more in this Media Viewer Help page.

Please let us know if you have any questions or comments about Media Viewer. You are invited to share your feedback in this discussion on MediaWiki.org in any language, to help improve this feature. You are also welcome to take this quick survey in English, en français, o español.

We hope you enjoy Media Viewer. Many thanks to all the community members who helped make it possible. - Fabrice Florin (WMF) (talk) 21:54, 19 சூன் 2014 (UTC)[பதில் அளி]

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

கருத்துக்கள் தேவை[தொகு]

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை பற்றிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் வலைவாசல்:துடுப்பாட்டம் பக்கத்தை தொடங்கி உள்ளேன் இதன் நோக்கம் தற்போதுள்ள துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளை விரிவாக்கி ஒன்றிணைக்க வேண்டும் எமது தமிழ் விக்கிபிடியாவில் துடுப்பாட்டக்காரர்கள் பற்றி பல அருமையான கட்டுரைகளைக் கொண்டுள்ளது அதன் அடிப்படையில் வலைவாசல்:துடுப்பாட்டம் பக்கத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கிறேன் அதற்காக வலைவாசல்:துடுப்பாட்ட பக்கத்தை வடிவமைத்து வருகிறேன் அதன் வலைவாசல் துடுப்பாட்டம் பக்க வடிவமைப்பு திட்டம் இங்கு உள்ளது இப்பக்கத்தை மேலும் சிறப்பாக அமைக்க என்ன செய்ய வேண்டும் அனுபவமுள்ள விக்கிப்பீடியர்கலின் ஆலோசனை வழிகாட்டல் ,கருத்துக்களும் தேவை நன்றி --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 08:40, 21 சூன் 2014 (UTC)[பதில் அளி]

வலைவாசல் உருவாக்கத்தில் எவ்வித உதவி வேண்டும் என்றாலும் என்னறிவிற்கெட்டிய அளவிற்கு என்னால் உதவ முடியும். கட்டுரைகள் விரிவாக்கம் எனில் விக்கித்திட்டம்:துடுப்பாட்டம் என்பதை உருவாக்கலாம். அதில் இணைந்து பலர் பங்களிப்பர். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:28, 21 சூன் 2014 (UTC)[பதில் அளி]
என்னாலான தொழிநுட்ப உதவிகளையும் உங்களுக்கு வழங்கி உதவலாம் என நினைக்கின்றேன். முடியும்போதெல்லாம் உதவக் காத்திருக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:54, 21 சூன் 2014 (UTC)[பதில் அளி]

நானும் கூட வலவாசலில் expert தங்கள் வலைவாசலின் நிறத்திலும் கூட வலைவாசல்:விளையாட்டில் யான் அறிமுகப்படுத்திய நிறத்தையும் வலைவாசல் வானியலில் யான் அறிமுகப்படுத்திய box headerஐயும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். தேவையான உதவிகளை என்னிடமும் நாடலாம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:47, 22 சூன் 2014 (UTC)[பதில் அளி]

பிறகென்ன? வென்று விடுங்கள்.--Kanags \உரையாடுக 06:15, 22 சூன் 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:14, 23 சூன் 2014 (UTC)[பதில் அளி]
துடுப்பாட்டத்தில் ஆர்வமுடைய எனக்கும் இதில் பங்களிக்க விருப்பமே. விக்கியின் அண்மைக்கால துடிப்பான பங்களிப்பாளர்கள் ஒன்றிணைந்திருப்பது இத்திட்டம் வெற்றியளிக்க வித்திடும். எனினும், ஒரு சிறு தயக்கம். ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 50,000க்கு மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழ் சேர்க்கப்படாமைக்கான காரணங்களில் ஒன்றாக, தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக அளவில் துடுப்பாட்டக்காரர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இந்த இளைஞரணி துடுப்பாட்டக் கட்டுரைகளில் அதிக நேரம் செலவிடாமல் ஏனைய துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்த வேண்டுகிறேன். எவ்வாறாயினும் துடுப்பாட்ட வலைவாசலை உற்சாகமாக உருவாக்குங்கள். முடிந்தவரை உதவுகிறேன்! --சிவகோசரன் (பேச்சு) 09:50, 23 சூன் 2014 (UTC)[பதில் அளி]
நன்றி திரு சிவகோசரன் நிச்சயமாக இந்த திட்டத்தின் மூலம் துடுப்பாட்டக் கட்டுரைகளை மேம்படுத்தி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம் எதிர் நீச்சல் அடித்து கிடைக்கும் வெற்றிக்கு தனி சுகம் உண்டு --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 10:10, 23 சூன் 2014 (UTC)[பதில் அளி]

நான் ஒரு வருடம் முன்பு ஏன் தமிழ் விக்கிப்பீடியா 50,000 பட்டியலில் இடம்பெறவில்லை என வினவிய போது, தமிழ் விக்கிப்பீடியாவில் மிகக்குறைந்தளவானவையே கட்டுரை என சொல்லக்கூடியதாக உள்ளன எனக் குறிப்பிட்டனர். அதற்காக அவர்கள் ஓர் ஆய்வையும் வெளியிட்டனர். நான் ஏதாவது ஒரு கட்டுரையைப் பயன்படுத்தி ஆராய்ந்த 73 கட்டுரைகளில் 7 கட்டுரைகள் மாத்திரமே கட்டுரை எனச் சொல்லக்கூடியவாறு இருந்தன. எனவே இந்நிலைமை பற்றி விரைவில் நாம் ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை உருவாக்க வேண்டும். நான் ஆராய்ந்ததில் 3 சிறிய துடுப்பாட்டக்காரர் பற்றிய கட்டுரைகளும் இருந்தன. எனவே இவ்விடயம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளல் அவசியமாகும்.--G.Kiruthikan (பேச்சு) 12:10, 24 சூன் 2014 (UTC)[பதில் அளி]

சிவகோசரன், https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#Some_statistics பக்கத்தில் உள்ள ஆய்வு நம்மைப் போன்ற ஒரு பயனர் செய்தது. கூடுதலாக துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள் இருக்கின்றன என்ற சுட்டிக் காட்டுகிறார். ஆனால், முதற்பக்க பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#Further_discussion பகுதியில் வருகிறது. அங்கு தான் ஆங்கில விக்கிப்பீடியாவைச் சேர்ந்த நிருவாகி ஒருவர் தமிழைப் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு விளக்கம் அளிக்கிறார். எத்துறையைச் சேர்ந்த கட்டுரைகளும் இருப்பது சிக்கல் இல்லை. ஆனால், அவை குறுங்கட்டுரைகளாக (குறிப்பாக, ஒரே மாதிரியான ஓரிரு வரிக் கட்டுரைகள்) இருப்பது தான் சிக்கல். இவை தானியக்கமாகவோ இல்லை இலகுவாகவோ எழுதப்படுவன என்று கருதுகிறார்கள். https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#Some_statistics பகுதியில் உள்ள ஆய்வின் படி தமிழ் விக்கிப்பீடியாவின் 50,000 கட்டுரைகளில் ஓரளவாவது கட்டுரை என்று கருதப்படக்கூடியன 7,500 மட்டுமே என்று குறிப்பிடுகிறார்கள். இதனால் தான் பல்வேறு வகையிலும் பல துறை சார்ந்த குறுங்கட்டுரைகளையும் மேம்படுத்த முனைந்து வருகிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 11:30, 25 சூன் 2014 (UTC)[பதில் அளி]

ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்துப் பட்டியலில் இருந்து தமிழை நீக்கியமைக்கான காரணம் துடுப்பாட்ட வீரர்கள் குறித்த கட்டுரைகள் அதிகம் இருந்தது அல்ல. குறிப்பிடப்பட்ட காரணம் “decent” ஆன கட்டுரைகளின் அளவு குறைவு என்பதும், பொதுவாகவே குறுங்கட்டுரைகள் பெருமளவில் இருக்கின்றன என்பதும்தான். எது எப்படியிருப்பினும், என்னைப் பொறுத்தவரை ஆங்கில விக்கிப் பட்டியலில் இடம்பெறுவதையோ, இடம்பெறாமல் விடுவதையோ நாம் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. ஒரு தரமானதும் பயனுள்ளதுமான தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்குவதை மனதில் கொண்டு செயற்பட்டால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.
புள்ளிவிபரங்கள் ஒவ்வொரு பிரிவினரதும் விருப்பங்களுக்கும் ஏற்றபடி விதம் விதமாக உள்ளன. வேண்டியபடி விளக்கம் கொடுத்துக்கொள்ளலாம். 0.5கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகள் தமிழ் விக்கியில் மொத்த எண்ணிக்கையில் 80%க்கும் மேல் (இந்தியில் இது 66% தான்). 2.0 கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகள் தவியில் 29% (இந்தியில் 13%). அதே வேளை ஒரு காலத்தில் தமிழைவிடக் குறைவாக இருந்த வங்காள, கன்னட விக்கிப்பீடியாக்களின் 2.0 கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகளின் அளவு 35%க்கும் மேல் வளர்ந்திருப்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். தமிழைப் பொறுத்தவரை துடுப்பாட்டக்காரர்களைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திலும் இந்தப் புள்ளிவிபரம் பாதிக்கப்படவில்லை. துடுப்பாட்டக்காரர் கட்டுரைகளிற் பல ஓரிரு வரிகள் கொண்ட கட்டுரைகளாக இருந்தாலும், பொதுவாக மேற்படி கட்டுரைகளில் தகவல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான கட்டுரைகள் 2.0கிபைக்கு மேற்பட இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்றைய நிலையில் தமிழில் துடுப்பாடக்காரர்கள் தொடர்பான கட்டுரைகள் 10%க்கும் மேல் உள்ளன. இதனால் "ஏதாவது கட்டுரையை" அழுத்தித் தேடும்போது 50க்கு 5 இக்கட்டுரைகள் வரும் என்பது தெளிவு. மொத்தக் கட்டுரைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது இது குறையும். ஆனாலும் மேற்படி கட்டுரைகளில் விரிவாக்கக்கூடிய கட்டுரைகளை விரிவாக்குவது நல்ல முயற்சி என்றே நானும் கருதுகிறேன். பயனுள்ளவையாக இருக்கக்கூடிய கட்டுரைகளைத் தெரிவு செய்து விரிவாக்குவது நல்லது. இதனால், பயனர்களின் நேரம் தேவையில்லாமல் விரயமாவதைத் தடுக்கலாம். விரிவாக்குவதில் அதிகம் பயன் இல்லை எனத் தோன்றும் கட்டுரைகளை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம். விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகள் இருப்பது குற்றம் அல்ல. அவற்றை எல்லாம் நீக்கியே ஆகவேண்டும் என்ற கருத்து மிகவும் தவறானது.
விக்கிப்பீடியாவில் புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகளும் ஒவ்வாத் தன்மைகளும் உள்ளன என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். ஆங்கில விக்கிப் பட்டியலில் தமிழ் இடம் பெற்றது தொடர்பில் தரச் சோதனை செய்த ஒருவர் சோதனையின் போது தமிழ் விக்கியில் எதிர்ப்பட்ட ஒரே நீளமான கட்டுரையும் கூகிள் மூலம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அதைத் தமிழ் விக்கிக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளார். உண்மையில், இந்தியிலும் வேறு சில மொழிகளிலும் தமிழை விடக் கூடுதலான கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளன. தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருபடி மேலே சென்று குறிப்பு இட்டதால் தவியின் தரம் குறைவானதாகவும், தரம் பற்றிக் கவலைப்படாமல் குறிப்பு இடாமல் விட்டதால் மற்ற மொழிகளின் தரம் அதைவிடக் கூடியதாகவும் காட்டப்படுகிறது. எனவே இது போன்ற பகுப்பாய்வுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.
இதனால், புள்ளி விபரங்கள் பயனற்றவை என்றோ, தமிழ் விக்கிப்பீடியா போதிய அளவுக்குத் தரம் கொண்டதாக உள்ளது என்றோ நான் கூறவரவில்லை. தமிழ் விக்கியின் தரத்தை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்த, திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக குறைந்த பட்சக் கட்டுரை நிலைக்கான தகுதி, நல்ல கட்டுரைகளுக்கான தகுதிகள், குறுங்கட்டுரை வார்ப்புரு இடுவதற்கான நிபந்தனைகள், நீக்கல் வார்ப்புரு இடுவதற்கான நிபந்தனைகள், கட்டுரைகளை நீக்குவதற்கான நிபந்தனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து முறையாகக் கலந்துரையாடி ஒருமித்த கருத்து எட்டப்படுவது அவசியம்.

---மயூரநாதன் (பேச்சு) 08:57, 27 சூன் 2014 (UTC)[பதில் அளி]

 1. 👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 10:58, 27 சூன் 2014 (UTC)[பதில் அளி]
 2. 👍 விருப்பம்--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 11:26, 27 சூன் 2014 (UTC)[பதில் அளி]
குறுங்கட்டுரைகளை விரிவாக்கும் திட்டத்தின் ஒரு படியாக அண்மைய மாற்றங்கள் பகுதியில் காட்சிப்படுத்திய திட்டம் ஓரளவு நல்ல பயனைத் தந்தததாகவே கருதுகிறேன். இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:53, 27 சூன் 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 00:43, 28 சூன் 2014 (UTC)[பதில் அளி]
இரவி மற்றும் மயூரநாதனின் கருத்துக்களுக்கு நன்றி! தேவை, முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் குறுங்கட்டுரைகளை இயன்றளவு விரிவாக்குவோம். --சிவகோசரன் (பேச்சு) 09:13, 29 சூன் 2014 (UTC)[பதில் அளி]

விக்கி மின்மினிகள் பயிற்சி[தொகு]

விக்கிப்பீடியாவுக்குப் புதிதாக வருபவர்களுக்கு எளிய பயிற்சிகள் தந்து வழிகாட்டிட விக்கி மின்மினிகள் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு நாளும் முகநூல் குழுவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுப் புதிய பங்களிப்பாளர்களைப் பெற முடிகிறதா என்று பார்க்கிறோம். இதற்கான பயிற்சிகளைப் பற்றி கருத்து தேவை. பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 1#சில கருத்துகள். பயிற்சி உரை, படங்கள் எல்லாம் உடனடியாக உருவாக்க வேண்டியுள்ளதால் விரைந்து கருத்துகளைத் தருமாறு வேண்டுகிறேன். இப்பயிற்சியை மெருகூட்டி திரும்பத் திரும்ப பல்வேறு களங்களில் பயன்படுத்தலாம். --இரவி (பேச்சு) 17:56, 3 சூலை 2014 (UTC)[பதில் அளி]

உதவித் தொகை திட்டம்[தொகு]

பார்க்க: விக்கிப்பீடியா:உதவித்தொகை. முதல் முறை ஒருவருக்கு முறையாக பங்களிப்பு உதவித் தொகை வழங்க முற்படுகிறோம் என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற வேண்டி இங்கு இடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 22:43, 6 சூலை 2014 (UTC)[பதில் அளி]

AWB CheckPage[தொகு]

I just made a mistake. I intended to create a CheckPage on Tamil Wiktionary, but created a page here. Please delete விக்கிப்பீடியா:AutoWikiBrowser/CheckPage. Sorry, Ganeshk (பேச்சு) 04:09, 14 சூலை 2014 (UTC)[பதில் அளி]

Yes check.svgY ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:40, 14 சூலை 2014 (UTC)[பதில் அளி]
 • நீங்கள் வந்தமைக்கு நன்றி. இங்கும் அது இருப்பதால் நன்மையே. இருக்கப் பரிந்துரைக்கிறேன். வேண்டிய மாற்றங்கள், தேவைப்படின் செய்யவும். --≈ உழவன் ( கூறுக ) 05:42, 14 சூலை 2014 (UTC)[பதில் அளி]

10 ஆண்டு விழா அறிக்கையின் இறுதித் திகதி கடந்த சூலை 30, 2014 இல் முடிவடைகிறது[தொகு]

"This is just a reminder that your report is due 30 July 2014. If you will not be able to submit your report on time, it is important that you let us know now so we can work with you to make sure the report is submitted as close to the deadline as possible." என்று awang@wikimedia.org இருந்து கடிந்தம் ரவிக்கும் எனக்கும் வந்துள்ளது. இது ஒரு நினைவு மின்னஞ்சல் ஆகும். --Natkeeran (பேச்சு) 13:49, 17 சூலை 2014 (UTC)[பதில் அளி]

இங்கு சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, நற்கீரன். இறுதித் திகதி நினைவில் இருந்தது. அதற்கான பின்னணி வேலைகளையும் செய்து வந்தேன். ஆனால், இந்த மடல் என் கண்ணில் சிக்காமல் போயிருந்தது. விக்கிமீடியா குழுவினருக்குப் பதில் அனுப்பியுள்ளேன்.--இரவி (பேச்சு) 13:58, 17 சூலை 2014 (UTC)[பதில் அளி]

தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் ஒப்புதல் மடல்[தொகு]

தமிழ்வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பெற்ற தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுதிகள் பத்தினையும், குழந்தைகள் கலைக்களஞ்சியங்கள் பத்தினையும் கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் விக்கிமீடியாவின் உறவுத்திட்டங்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கழகம் வழங்க முடிவுசெய்த மடலைப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ அவர்களின் வழியாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்கியிருக்கின்றார்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பில் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும், பேராசிரியர் பொன்னவைக்கோ அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கழகத்தாருக்கும் நம் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர்கள் வழங்கிய மடலைப் பகிர்கின்றேன்.

தமிழ்வளர்ச்சிக்கழகத்தின் ஒப்புதல் மடல்

விரைவில் இதனை முன்னெடுத்துச்செல்வோமாக.--செல்வா (பேச்சு) 04:17, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]

மிகவும் இனிப்பான செய்தி !! இதற்காக முனைந்து செயற்பட்ட அனைவருக்கும் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் முற்போக்கான முடிவுகளுக்கும் துணைநின்ற பேரா. செல்வா, பேரா.வா.செ.குழந்தைசாமி, பேரா.பொன்னவைக்கோ ஆகியோருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் !! இவற்றை நன்முறையில் முன்னெடுத்து தமிழ் விக்கியை வளப்படுத்துவது ஒவ்வொரு விக்கிப்பீடியரின் பொறுப்பாகும். --மணியன் (பேச்சு) 04:46, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் முன்னெடுத்துள்ள அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி! வாழ்த்துகளும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:58, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]
மிக்க மகிழ்ச்சி, செல்வா. நீங்கள் சென்னையில் இருக்கும் காலத்திலேயே இது தொடர்பான அறிவிப்புக்கு என ஒரு சிறு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும் என்றால் ஊடகங்களிலும் மற்ற கல்வி, அரசு நிறுவனங்களிலும் கிரியேட்டிவ் காமன்சு, விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வுக்கு உதவும். த. இ. க. அல்லது த. வ. க. வளாகத்திலேயே ஓரிரு மணி நேரத்தில் இந்நிகழ்வைச் செய்யலாம். பேரா. பொன்னவைக்கோ, பேரா. வா. செ. கு, பேரா. நற்கீரன் முதலியோரே இந்த அறிவிப்பை முன்னின்று செய்வது சாலப்பொருந்தும்.--இரவி (பேச்சு) 05:41, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 07:23, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]
நல்ல செய்தி. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறேன். இதற்காக உழைத்த செல்வா, மற்றும் அனைவருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. இதனைத் தகுந்த முறையில் விக்கிப்பீடியர்கள் பயன்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 07:52, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் மிகவும் மகிழ்வான செய்தி. தொடரும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 09:25, 22 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 06:16, 23 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:46, 23 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:01, 23 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 16:43, 23 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 01:43, 25 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்
உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் இணையத்தில் பயனுள்ள தமிழ் உள்ளடக்கங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியிலும், குறிப்பாகத் தமிழ் விக்கித் திட்டங்களை மேலும் பயனுள்ளதாக்கும் முயற்சியிலும் இது ஒரு முக்கியமான மைல் கல் எனலாம். இதற்காகத் தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் சார்பாக முன் முயற்சிகளை எடுத்த பேரா. செல்வாவுக்கு நன்றிகள். இதைச் சாத்தியமாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் பேரா. நக்கீரன். அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் விக்கிக் குழுமத்தின் கோரிக்கை மீது அக்கறை எடுத்துக்கொண்டு கலைக் களஞ்சியங்களைக் கிரியேட்டிவ் காமென்சு பகிர்வுரிமத்தின் கீழ் வழங்கிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும், குறிப்பாக, பேரா. வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்களும், பேரா. பொன்னவைக்கோ அவர்களும் நமது நன்றிக்கு உரியவர்கள். அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவோம். ---மயூரநாதன் (பேச்சு) 15:51, 25 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்---ரத்தின சபாபதி (பேச்சு) 18:31, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 06:55, 30 சூலை 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் இந்த சந்தோசம் தரும் தகவல் குறித்து, தி இந்து நாளிதழில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதனை இங்கு படியுங்கள்:
Tamil Wikipedia to publish two seminal works --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 3 செப்டம்பர் 2014 (UTC)[பதில் அளி]

கட்டுரைகளில் தனியார் நிறுவனங்கள்[தொகு]

முன்பைக் காட்டிலும் தமிழ் விக்கியில் கட்டுரைகளின் ஆழம் அதிகரித்திருக்கிறது. உள்ளூர் வரையிலான தகவல்களை பலர் சேர்த்து வருகின்றனர். ஒரு சிற்றூரிலோ, நகரத்திலோ உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், அடிப்படை வசதி.ஆடம்பரம் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள், அமைப்புகளின் பெயர்களையும் சேர்க்கின்றனர். இவற்றை விளம்பரம் எனக் கருதலாமா? இருக்கட்டுமா, நீக்க வேண்டுமா? பின்குறிப்பு: கட்டுரையில் தனியார் நிறுவனப் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. விரிவான விளக்கம் இல்லை. தெளிவாக விளக்குங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:38, 25 சூலை 2014 (UTC)[பதில் அளி]

எடுத்துக்காட்டுக்கு, சில தொகுப்புகளைக் குறிப்பிட முடியுமா?--இரவி (பேச்சு) 19:54, 25 சூலை 2014 (UTC)[பதில் அளி]
தமிழ்க்குரிசில் ,இரவி பார்க்க. இவ்வாறு நிறுவனங்கள் பயனர் பக்கம் உள்ளன .--Commons sibi (பேச்சு) 06:51, 20 செப்டம்பர் 2014 (UTC) .[பதில் அளி]

குறுங்கட்டுரைகள் தொடர்பில் புதிய நடைமுறை உள்ளதா?[தொகு]

குறுங்கட்டுரைகள் தொடர்பில் புதிய நடைமுறை ஏதும் உள்ளதா? கானேசன் கட்டுரை உருவாக்கப்பட்டதும் குறித்தகால நீக்கல் வார்ப்புரு சிறிதரனால் இடப்பட்டுள்ளது. இவர் இட்டது சரிதான் என்றால், வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் ஆகிய கட்டுரைகளுக்கும் இடத்தானே வேண்டும் என்ற நோக்கில் இட்டுள்ளேன். மேலும், தவனூர் சட்டமன்றத் தொகுதி போன்ற கட்டுரைகள் கானேசன் கட்டுரைக்கு முன்னமே உருவாக்கப்பட்டு கு.கா.நீ. வார்ப்புரு இன்றி காணப்படுகின்றன. சமீப காலங்களில் 3 வரிக்குக் குறைவாக அதாவது 2 வரிக் கட்டுரைகளுக்கே கு.கா.நீ. வார்ப்புரு இடாமல் தவிர்க்கப்பட்டும் அல்லது வார்ப்புரு நீக்கப்பட்டும் வந்தது. எ.கா: பனிமனிதன். இவ்வாறான செயற்பாடுகள், கொள்கையாற்று சில நிருவாகிகள் செயற்படுவதாகவும், அல்லது சார்ப்புப் போக்குடன் செயற்படுவதாகவும் கருத இடமளிக்கிறது. எனவே கருத்துகளுக்கு அப்பால் இது தொடர்பில் த.வி.யின் கொள்கையினை தெரிவிக்குமாறு கேட்கிறேன். 2 அல்லது 3 வரிக்கட்டுரைகள் நீக்கப்பட வேண்டுமா? ஆம் எனின் பாரபட்சமின்றி நீக்குவோம். நான் தொடங்கிய கட்டுரையினையும் முதலில் என்னால் நீக்கவும், த.வி.யின் கொள்கைக்கு கட்டுப்பட்டு மதிப்பளிக்கவும் என்னால் முடியும். இல்லையெனின் நான் உட்பட பலர் உருவாக்கப்போகும் 2 அல்லது 3 வரிக்கட்டுரைகளுக்கு கு.கா.நீ. வார்ப்புரு இடுவதை மற்றவர்கள் தவிக்க வேண்டும். --AntonTalk 02:26, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

ஆமாம், மற்றவர்களை விடுத்து உங்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். நான் உங்கள் கட்டுரைக்கு நீக்கல் வார்ப்புரு இட்டதும், ஏட்டிக்குப்போட்டியாக நீங்கள் சில கட்டுரைகளுக்கு நீக்கல் வார்ப்புரு இட்டது குறித்து உங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தந்தமைக்கு நன்றி. நிருவாகியாக இருந்து கொண்டு இவ்வாறு உங்கள் மேலாண்மையைக் காட்டுவது அழகல்ல. உங்கள் புதிய கட்டுரையில் இரண்டு வரிகளே உள்ளன. அதனால் நீக்கல் வார்ப்புருவை சேர்த்தேன். இதில் என்ன தவறு? மற்றைய இரண்டு கட்டுரைகளுக்கும் நீங்கள் எதற்காக நீக்கல் வார்ப்புரு சேர்த்தீர்கள் என்பதைத் தெளிவு படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 02:40, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
அவ்விரு கட்டுரைகளுக்கும் கு.கா.நீ. வர்ர்ப்புருவை நீங்கள் இடாதது ஏன்? நீங்கள் வார்ப்புருவை எக்காரணத்தில் இட்டீர்களோ அக்காரணமே எனக்கும் உள்ளது. நிற்க, இவ்வுரையாடலின் நோக்கம் தீர்க்கமான கொள்கை நோக்கியே. எனவே அது தொடர்பில் உரையாடுங்கள்.--AntonTalk 02:49, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
தவனூர் சட்டமன்றத் தொகுதி அல்லது ஏனைய இரண்டு கட்டுரைக்கும் எதற்காக நீக்கல் வார்ப்புரு இடப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள், அன்ரன். குறைந்தது 3 வரிகள் உள்ளன தானே? அது தானே குறுங்கட்டுரைக்கான குறைந்தபட்ச அளவுகோள். நீங்கள் வேறு எதற்காக வார்ப்புரு இட்டீர்கள் என்பதைத் தெளிவு படுத்துங்கள். மேலும், கட்டுரைகள் அனைத்தையும் நூற்றுக்கு நூறு நிருவாகி ஒருவர் கண்காணிக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போலும். இது நிருவாக அறிவுறுத்தல்களில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 02:51, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

கானேசன் கட்டுரையும் 3 வரிகளைக் கொண்டும், வார்ப்புரு, பகுப்பு, உசாத்துணை என்பவற்றைக் கொண்டும் உள்ளனவே. பனிமனிதன் கட்டுரையினயும் கவனியுங்கள். --AntonTalk 02:56, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

அப்படியா? பனிமனிதனுக்கென்ன, நன்றாகத்தானே இருக்கிறான்:)--Kanags \உரையாடுக 03:00, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
சிறிதரன், உங்களுடன் அரட்டையடிக்க விரும்பவில்லை. மற்ற நிருவாகிகள் கவனிக்க. --AntonTalk 03:03, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
குறுங்கட்டுரைக்கு குறைந்தது மூன்று வசனங்கள் இருக்க வேண்டும். (வரி எனக் குறிப்பிடுவது வசனங்களையே).--Kanags \உரையாடுக 03:25, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
நீங்கள் இருவரும் சண்டையிடுவதால் என்னை ஏன் பழிவாங்குகிறீர்?? :( :( தவனூர் சட்டமன்றத் தொகுதி என்னும் கட்டுரை பார்ப்பதற்கு மூன்று வரி போல காட்சியளித்தாலும், அது ஒரு கட்டுரைக்கான தகுதிகளைப் பெறுகிறது.
 • மலையாளக் கட்டுரைக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • கட்டுரை 1,500 பைட்டுகளை தாண்டியுள்ளது. தகவற்பெட்டி வார்ப்புரு இல்லாமல்!
 • போதிய சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது.
 • தேவையான உள்ளிணைப்புகளையும் வழங்கியிருக்கிறேன். (குறைந்தது எட்டு உள்ளிணைப்புகள்)
 • தொடர்புடைய வார்ப்புருவும் இணைக்கப்பட்டிருக்கிறது. தொடர்புடைய கட்டுரை ஒன்றையாவது உடனே

உருவாக்கியிருக்கிறேன்.

 • கட்டுரைக்கு கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இருக்கிறது. பகுப்பும் சேர்த்திருக்கிறேன்.
மேற்கண்ட தகவல்களின் மூலம், இனி வளர்வதற்குப் போதுமான தகுதிகளையும் பெற்றிருக்கிறது என அறியலாம். மூன்று வரி என்பது வெறும் ’மூன்று வரி’ அல்ல. தகவல் அளவில் போதிய தகுதியைப் பெறுகிறதா என்பதே! பதினைந்து இருபது வரிகளைக் கொண்டிருந்தும் தகவல் இல்லாமல் இருந்தாலும் அது கட்டுரை அல்ல. மூன்று வரியில் இருந்தாலும் போதிய தகவல் இருந்தால் அது கட்டுரையே! மூன்று வரியாக இருந்து, பகுப்பு, படம், வார்ப்புரு, உள்ளிணைப்புகள், தொடர்புடைய தலைப்புகள், சான்றுகள் என இவற்றில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் தான் அதற்கு நீக்கல் வார்ப்புரு இட வேண்டும் என நான் கருதுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:41, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

தமிழ்க்குரிசில், உங்களை பழிவாங்க உங்களுடன் விரோதம் இல்லையே. அண்மைய உருவாக்க கட்டுரைகளில் அக்கட்டுரை சிறியதாக இருந்ததால் எ.கா.க்காக பயன்படுத்தினேன். நீங்கள் குறிப்பிட்டவற்றுடன் உடன்படுகிறேன். ஆனால், பாரபட்சமாக செயற்படுதலே தடுக்க கொள்கை இருப்பதை வலியுறுத்துகிறேன். கானேசன் என்னும் கட்டுரை பார்ப்பதற்கு மூன்று வரி கொண்டு காட்சியளித்தாலும், அது ஒரு கட்டுரைக்கான தகுதிகளைப் பெறுகிறது.

 • 3 வரிகள் அல்லது வசனங்கள் உள்ளன.
 • பல மொழி கட்டுரைக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • கட்டுரை 2,000 பைட்டுகளை தாண்டியுள்ளது.
 • போதிய சான்றும் வழங்கப்பட்டிருக்கிறது.
 • தேவையான உள்ளிணைப்புகளையும் வழங்கப்பட்டிக்கின்றன.
 • தொடர்புடைய வார்ப்புருவும் இணைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, கு.கா.நீ. வார்ப்பு இடப்படுவதன் அடிப்படை என்ன? கொள்கை இல்லாததால் அல்லவா? அல்லது வேறு காரணம் உள்ளதா? 735 பைட்டுகள் கொண்ட, உசாத்துணையற்ற (ஆதாரமற்ற) பனிமனிதன் போன்ற கட்டுரைகள் பல உள்ளன. இவற்றின் மட்டில் விக்கி கொள்கை என்ன? கொள்கை அல்லது வழிகாட்டி இன்றி பொதுப்பரப்பில் செயற்படுவது கடினம். --AntonTalk 05:07, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

நீங்கள் எப்படிக் கணக்கிடுகிறீர்களோ தெரியவில்லை. கானேசனில் மூன்று வரிகளை நான் காணவில்லை. வெறும் இரண்டு வரிகளையும் ஒரு தகவல்சட்டத்தையும் கொண்டு இரண்டாயிரம் கட்டுரைகளை ஒரு நாளைக்குள் (தானியங்கியில்லாமல்) என்னால் உருவாக்கிட முடியும்.--Kanags \உரையாடுக 05:46, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

என்னாலும் முடியும். கணிணித் திரையின் பொதுவான அளவிற்கு மாற்றிவிட்டுப் பாருங்கள். பனிமனிதன் போன்ற கட்டுரைகளில் எத்தனை வரி தெரிகிறது?--AntonTalk 07:56, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

நீங்கள் இன்னும் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. வசனம் என்றால் ஒரு முழுமையான சொற்றொடர். அப்படிப் பார்க்கும் போது பனிமனிதனில் எத்தனை வசனங்கள் உள்ளன? சிறுபிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவது போல் இருந்தால் மன்னிக்க வேண்டும். ஆனாலும், பனிமனிதன் கட்டுரையை மேம்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அழிக்க வேண்டுமென நீங்கள் நினைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கணினித் திரைக்கேற்ப வரிகளின் எண்ணிக்கை மாறுபடும். யானையும் குருடர்களும் கதை போல் கட்டுரைகள் ஆகி விடக்கூடாது.--Kanags \உரையாடுக 08:09, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
உங்களுக்கு விளக்கக் குறைவு உள்ளது என நினைக்கிறேன். வரி (line), வசனம் (sentence) ஆகிய இரண்டும் ஒன்றல்ல. ஆரம்பத்தில் 3 வரி என்ற பதமே பயன்படுத்தப்பட்டது. தற்போது வரி வசனமாக திரிபுபடுத்தப்பட்டுள்ளது. வரியும் வசனமும் ஒன்றா? சிறுபிள்ளைக்கு சொல்வது போல் கேட்கிறேன். கொள்கைளை உருவாக்குங்கள். இல்லாவிட்டால் வரிக்கும் வசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவீர்கள். //அழிக்க வேண்டுமென நீங்கள் நினைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்// கானேசன் கட்டுரை அழிப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள் போலும். //யானையும் குருடர்களும் கதை போல் கட்டுரைகள்// உங்களுக்குப் புரிந்தால் சரி--AntonTalk 08:54, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:21, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
எனக்கு விளக்கம் குறைவாக இருப்பதால் நிருவாகியாக இருப்பதற்கு எனக்குத் தகுதி உள்ளதா என்று சந்தேகமாக உள்ளது. எனவே நிருவாகப் பொறுப்புகளில் இருந்து விலகுவது அல்லது நிருவாக அணுக்கத்தை இனி மேல் பயன்படுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.--Kanags \உரையாடுக 11:08, 29 சூலை 2014 (UTC)[பதில் அளி]
ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு நாட்டின் அரசியல் சாசனம் அளவுக்கு ஏராளமான விதிமுறைகளை எழுதி வைத்திருகிறார்கள். அவையே சில இடங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் படித்துப் புரிந்து கொள்ளவும் சிரமமாக உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பன மிகச் சில விதிகள் தாம். அவற்றிலும் குழப்பம் வரும் இடங்களில் பங்களிப்பாளர்கள், நிருவாகிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்படுவதை நல்லெண்ண நோக்கில் வரவேற்கிறோம். மாற்றுக் கருத்து உள்ள போது சுட்டிக் காட்டி உரையாடுகிறோம். இந்த உரையாடல்கள் தனிப்பட இல்லாமலும் தனிப்பட எடுத்துக்கொள்ளப்படாமலும் இருந்தால் போதுமானது. அதே போல, பொதுக் கருத்துக்கு ஏற்ப நமது செயற்பாடுகளை மீளப் பெற்றுக் கொள்ளவும் தயங்க வேண்டாம். நிருவாக அணுக்க நீக்கல் நடைமுறைகளை எவரேனும் முன்னெடுக்காத வரை, கருத்துகளைத் தத்தம் நிருவாக அணுக்கத் திறத்தின் மீதான விமரிசனமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. குறிப்பாக, இத்தகைய பராமரிப்பு வார்ப்புருக்களை அனைத்துப் பயனர்களும் இடலாம் என்பதால் இது நிருவாகிகளுக்கே உரித்தான சிக்கலும் இல்லை. இந்த உரையாடலின் நோக்கம் ஒரு தரமான குறுங்கட்டுரையின் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு என்ன என்பதை வரையறுப்பதே. 3 வரிகள் ஆனாலும் சரி, 3 சொற்றொடர்கள் என்றாலும் சரி ஒரு கட்டுரையின் அடிப்படை தகவல் என்ன என்பதை வரையறுக்க போதுமானதாக இல்லை. இது குறித்து ஏற்கனவே நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல் பக்கத்தில் உரையாட வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:50, 30 சூலை 2014 (UTC)[பதில் அளி]
இந்த உரையாடலும், இதற்கு முன்னர் பல தடவைகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களும், நீக்கல் வார்ப்புருவுக்குத் தகுதியுள்ள கட்டுரைகள் எவை என்ற பிரச்சினையைவிட தீர்வு காண வேண்டிய வேறு பிரச்சினைகளும் உள்ளன என்பதை உணர்த்துகின்றன. பிற பயனர்களுக்கு உரிய மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது. விக்கிப்பீடியாவில் எல்லோரும் சமம் என்பதை யாரையும் எந்தமாதிரியும் நடத்தலாம் என்று பொருள் கொள்வது தவறானது. தயவு செய்து இந்தமாதிரியான கலாச்சாரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவில் வளர விடவேண்டாம் என்று எல்லாப் பயனர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 20:06, 30 சூலை 2014 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 01:36, 31 சூலை 2014 (UTC)[பதில் அளி]

எனது கருத்துகள்: (1) வயதிலும் கல்வியிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள், இளையோரிடம் நயம்பட உரைத்து அவர்களை மெருகேற்ற வேண்டும். (2) இளையோரும் ego பாராது, சுட்டிக்காட்டலை நன்மையாகக் கருதி, தம்மைத் திருத்திக்கொள்ளல் வேண்டும். (3) தேவையற்ற குத்தல்களையும், கேலிப் பேச்சுக்களையும் விடுத்து தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காக ஒருமித்தக் கருத்துகளை எட்டவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. (4) 2011ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் தமிழ் விக்கியில் நான் சிறுகச் சிறுக இணைந்தபோது, கிடைத்த இனிமையான ஆதரவும்., நல்ல புரிந்துணர்வுகளும் மீண்டும் இங்கு நிலவாதா என்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:17, 31 சூலை 2014 (UTC)[பதில் அளி]

வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்[தொகு]

வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுவது தமிழ் விக்கிப்பீடியாவில் தடை செய்யப்பட வேண்டும் என முன்மொழிகிறேன். விக்கிப்பீடியா ஒரு விளம்பர மேடை அல்ல. அதுமட்டுமல்ல இவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ளன.--Kanags \உரையாடுக

எந்த ஒரு குறிப்பிட்ட துறைக்கும் என்று தனிப்பட தடை தேவையில்லை. வெளிவருவதற்கு முன்பே முக்கியத்துவம், எதிர்பார்ப்பு பெறும் திரைப்படங்கள், நூல்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகள் உள்ளன. வழக்கமான விக்கி நெறிமுறைகளின் படி போதிய உள்ளடக்கம், தரம் இல்லையென்றால் குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடலாம். பல ஆண்டுகளாக இவ்வாறு தேங்கியிருக்கும் கட்டுரைகளுக்கு பொருத்தமான மேம்பாட்டு வார்ப்புருவோ குறித்த கால நீக்கல் வார்ப்புருவோ இடலாம். --இரவி (பேச்சு) 10:23, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

ஓய்வில் உள்ள நிருவாகிகளின் நிருவாக அணுக்கம் குறித்த கொள்கை[தொகு]

ஓய்வில் உள்ள நிருவாகிகளின் நிருவாக அணுக்கம் குறித்த கொள்கை அறிவிப்பு தொழினுட்ப ஆலமரத்தடியில் வந்துள்ளது. ஆனால், நிறைய பேர் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். சுருக்கமாக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில் உள்ள நிருவாகிகளிடம் விளக்கம் கேட்டு நிருவாக அணுக்கத்தை விலக்கிக் கொள்ள உலக அளவில் முடிவெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு மொழி விக்கித் திட்டத்திலும் இதற்கென தனிக் கொள்கை இல்லையெனில், அவர்களின் நடைமுறை கடைபிடிக்கப்படும். ஒன்று, நாம் இதனை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, நமக்கான நடைமுறையை உருவாக்கி விட்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 10:37, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]

நாமே ஒரு கொள்கையை வகுத்துக்கொள்ளலாம். உலக அளவிலான கொள்கையில் இருந்து அதிகம் வேறுபடத் தேவையில்லை. ஆனால், நமது கையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 18:25, 27 சூலை 2014 (UTC)[பதில் அளி]
சரி, விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/பல ஆண்டுகளாக பங்களிக்காத நிர்வாகிகள் பக்கத்தில் உரையாடலைத் தொடர்வோம்.--இரவி (பேச்சு) 16:33, 29 சூலை 2014 (UTC)[பதில் அளி]