வலைவாசல்:துடுப்பாட்டம்
தொகு
அறிமுகம்துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும். துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன. தொகு
சிறப்புக் கட்டுரைசகீப் அல் அசன் (Shakib Al Hasan, வங்காள மொழி: সাকিব আল হাসান, பிறப்பு: மார்ச் 24 1987) ஒரு வங்காளதேச துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐசிசியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் பன்முக ஆட்டக்காரர்கள்(All-rounders) தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பன்முக ஆட்டக்காரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 2015ஆம் ஆண்டு ஐசிசியின் தேர்வு, பன்னாட்டு மற்றும் இருபது20 ஆகிய மூன்று தரவரிசைகளிலும் முதலிடம் பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 13 ஜனவரி 2017 அன்று, தேர்வுப் போட்டியில் வங்காளதேச மட்டையாளர்களில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் (217) பதிவு செய்தார். நவம்பர் 2018 இல், தேர்வுப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை வீழ்த்திய வங்காளதேசத்தின் முதல் பந்துவீச்சாளர் ஆனார். ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 199 ஆட்டங்களில் 6,000 ஓட்டங்கள் எடுத்து 200 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிவேக பன்முக ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் உலககிண்ண வரலாற்றில் 1000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் இவர் மட்டுமே.
தொகு
உங்களுக்குத் தெரியுமா?தொகு
துடுப்பாட்ட முக்கிய செய்திகள்செப்டம்பர் நடப்புத் தொடர்கள்:
தொகு
இன்றைய நாளில்...தொகு
சிறப்புப் படம்
|