விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Green check.png இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


1. குறிப்பிட்ட நிருவாகியின் பேச்சுப் பக்கத்திலோ தொடர்புடைய பிற பெயர்வெளிப் பேச்சுப் பக்கங்களிலோ நேரடியாக உரையாடுங்கள்.

இது பயன் அளிக்காவிட்டால்,

2. நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகையில் முறையிடுங்கள். மற்ற நிருவாகிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

தொடர்ந்து பல்வேறு பக்கங்களில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் எழுந்த வண்ணம் இருந்தாலோ குறிப்பிட்ட நிருவாகி ஒத்துழைக்க மறுத்தாலோ

3. சமுதாய முறையீட்டுக் கூடத்தில் முறையிடுங்கள்.

இதற்குப் பிறகும் குறிப்பிட்ட நிருவாகி ஒத்துழைக்க மறுத்தால், விக்கிச்சமூகம் இது தொடர்பாக நேரடியாக கலந்துரையாடி வாக்கெடுப்பின் மூலம் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுவதற்கான நடைமுறையைத் தொடங்கலாம்.

4. நிருவாக அணுக்கம் மீளப் பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவை இங்கு பதியுங்கள். இவ்வாறு இடுவதற்கு முன் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். எடுத்த எடுப்பில் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுவதற்கான முன்மொழிவை இடக்கூடாது.

நிருவாக அணுக்கம் நீக்குவதற்கான கோரிக்கையை முன்வைப்பவருக்கான குறைந்தபட்ச தகுதி:

குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். இதற்குக் குறைவான தகுதி கொண்ட ஆனால் பதிவு செய்த பயனர் யாராவது குற்றச்சாட்டு வைத்தால் அவ்வாறு குற்றச் சாட்டு வைத்து ஏழு நாட்களுக்குள் முன் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட இன்னொரு பயனர் அதை வழிமொழிந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது ஏழு நாட்களுக்குப்பின் குற்றச்சாட்டுத் தானகவே காலாவதி ஆகிவிடும்.

கோரிக்கை பதிந்து,

முதல் 14 நாட்கள் - கோரிக்கை தொடர்பாக குறிப்பிட்ட நிருவாகி மறுமொழி அளிப்பதற்கான நேரம். நியாயமான காரணத்துக்காக, முறையாக வேண்டினால் இன்னும் ஏழு நாட்கள் நீட்டிப்பு வழங்கப்படும்.

அடுத்த 14 நாட்கள் - பயனர்கள் முதலில் கலந்துரையாடத் தொடங்குவார்கள். வெறும் ஆம், இல்லை, வேண்டாம், விருப்பம் போடாமல் விரிவாக, தெளிவாக பயன் இடர்களை முன்வைத்து உரையாட வேண்டும்.

அடுத்த ஏழு நாட்கள் - மேற்கண்ட உரையாடலைத் தொகுத்து "ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்கக் கூடாது", "ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும்" என்று இரு நோக்குகளிலும் கருத்துகள் தொகுத்து எழுதப்படும். இத்தொகுப்புச் சுருக்கத்தை கூட்டாக எழுதும் பொறுப்பை ஓரிருவர் முன்வந்து மேற்கொள்ளலாம். இச்சுருக்கத்தை எழுதும் காலத்தில் உரையாடல்கள் ஏதும் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்த ஏழு நாட்கள் - வாக்கெடுப்பு தொடங்கும் நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பயனர் கணக்கு பதிந்து 150+ தொகுப்புகள் கொண்டிருப்போரின் வாக்குகள் மட்டும் செல்லும். வாக்கிடும் அனைவரும் தாங்கள் ஏன் அவ்வாறு வாக்கிடுகிறோம் என்பதை விளக்கும் வகையில் குறைந்தது ஐந்து வரி அளவு கருத்திட வேண்டும். முடிவு பிணக்குத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் நிலையில், வெறும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இன்றி விக்கிச்சமூகத்தின் மனநிலை, கருத்து அறிந்து முடிவை அறிவிக்க இவ்வாறு கருத்திடுவது உதவும். குறிப்பிட்ட நிருவாகியும் மீளப் பெறும் கோரிக்கையை முன்வைத்தவரும் இங்கு வாக்கிட முடியாது.

முடிவு:

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் நிருவாகியை நீக்க ஆதரவு தந்தால், நிருவாகியை நீக்குவதற்கான பணியை அதிகாரி நிலை பயனர்கள் எவரும் முன்னெடுக்கலாம்.

மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான ஆதரவு என்றால், விக்கிச்சமூகத்தின் கருத்துகளை ஆய்ந்து உரிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு பிணக்குத் தீர்வாயத்தின் முன் வைக்கப்படும். (பிணகுத் தீர்வாயம் உருவாக்குவது குறித்து தனி கொள்கை, நடைமுறை முன்மொழிய வேண்டியுள்ளது).

பிணக்குத் தீர்வாயத்தின் முடிவு இறுதியாக இருக்கும். மேல் முறையீடுகள் கிடையாது. பிணக்குத் தீர்வாயத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது அனைத்து விக்கிப்பீடியர் கடமை.

இந்த நடைமுறை மூலம் தனது நிருவாகப் பொறுப்பைத் தக்க வைக்கும் நிருவாகி ஒருவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு வேறு யாரும் நிருவாக அணுக்கம் நீக்கல் கோரிக்கை கொண்டு வர முடியாது. குறிப்பிட்ட நிருவாகி தொடர்ந்து தவறாகச் செயல்படுகிறார் என்று கருத இடம் இருக்குமானால், நிருவாகிகள் அறிவிப்புப் பலகையில் முறையிடலாம். மற்ற நிருவாகிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.