விக்கிப்பீடியா:சமுதாய முறையீட்டுக் கூடம்
விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படும்போது கடைப்பிடிக்கும் முறையில் முதற்கட்டமாக பங்களிப்பாளர்கள் உரையாடித் தீர்ப்பது தோல்வி காணும் நிலையில் முறையீடு செய்யும் தளம் சமுதாய முறையீட்டுக் கூடம். இங்கு பிணக்கின் முக்கிய பகுதிகளை மட்டும் உணர்வடிப்படையிலல்லாமல் புள்ளிகளாகப் பதிவு செய்தால் சமூகத்தினர் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகி முடிவெடுக்க முடியும். அதற்குக் குறைந்தது பத்து நாட்கள் தேவைப்படும்.
தேனி சுப்பிரமணி தொடர்பான முறையீடுகள்
[தொகு]1. புன்னியாமின் பங்களிப்பு நிலை தொடர்பான அவதூறு
[தொகு]முறையீட்டாளர்: இரவி
விளக்கம்: புன்னியாமின் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாமல் இருப்பதற்கு நானும் இன்னொரு பயனரும் காரணம் என்று தேனி சுப்பிரமணி கூறியுள்ளார். அந்த இரண்டாவது பயனர் யார்? அ) இதற்கு ஆதாரமாக அவர் முன்வைத்த புன்னியாமின் கடிதத்தை செல்லுபடியாகாத ஆதாரமாக அறிவிக்க வேண்டும். ஆ) இந்த அவதூறு தொடர்பான முறையான கண்டிப்பை விக்கிச் சமூகத்தின் சார்பில் எவரேனும் ஒருவர் தேனி சுப்பிரமணியின் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இ) புன்னியாமின் பங்களிப்பு நிலை குறித்த தெளிவையும் அதற்கும் மற்ற பயனர்களுக்கும் உள்ள தொடர்பின்மையையும் உறுதிப்படுத்த வேண்டும். பார்க்க: தொடர்புடைய உரையாடல் --இரவி (பேச்சு) 06:17, 19 திசம்பர் 2013 (UTC)
கருத்துகள்
[தொகு]- ஏற்கனவே அந்தப்பேச்சுப்பக்க உரையாடலில் வழிமொழிந்திருந்தேன். மேலேயுள்ள புள்ளிகளில் ஆவன்னா குறியிட்ட புள்ளியில் உள்ள கடிதத்தை நான் பார்த்ததாக நினைவில்லை. அதுபற்றி இப்போது கருத்துக் கூறவில்லை. மற்றபடி அனைத்து புள்ளிகளையும் வழிமொழிகிறேன். என் நினைவில் புன்னியாமீன் விலகியதற்கு யாருடைய தனிப்பட்ட காழ்ப்பும் காரணமாக இருக்கவில்லை. அவர் பல நபர்களைத் தனது கணக்கிலிருந்து இயக்கும் வகையில் செய்திருந்த ஏற்பாட்டை ஏற்காததால்தான் வெளியேறியதாக நினைவு. -- சுந்தர் \பேச்சு 10:06, 3 சனவரி 2014 (UTC)
கூட்டு முடிவு
[தொகு]செயல்பாடு
[தொகு]2. அரசுடான தொடர்பாடல் குறித்து விளக்கம் தராமை
[தொகு]முறையீட்டாளர்: இரவி
விளக்கம்: தேனி சுப்பிரமணியின் அரசுடனான தொடர்பாடல்கள் குறித்த கேள்விக்கு இது வரை விடை இல்லை. பார்க்க: தொடர்புடைய உரையாடல் --இரவி (பேச்சு) 06:21, 19 திசம்பர் 2013 (UTC)
கருத்துகள்
[தொகு]- ஏற்கனவே இதுபற்றி விளக்குமாறு நானும் அந்தப்பேச்சுப்பக்க உரையாடலில் கேட்டுள்ளேன். மற்ற பயனர்களும் அழுத்திக் கேட்கலாம். -- சுந்தர் \பேச்சு 10:09, 3 சனவரி 2014 (UTC)