விக்கிப்பீடியா பேச்சு:சமுதாய முறையீட்டுக் கூடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்தாண்டுக் கொண்டாட்டத்தை (!) அடுத்து ஏற்பட்டச் சிக்கல் இப்போது ஒருவழியாக முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது கொள்கை, வழிகாட்டல், பிணக்குத் தீர்வுக் கட்டமைப்பை வளர்க்க வேண்டிய தேவையை உணர்ந்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகத் தொடங்கியுள்ள பிணக்குத் தீர்வுமுறையின் கட்டங்களைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். முதற்கட்டமான பேச்சுப்பக்க உரையாடல் வழியாகத் தீர்வை எட்டுவது நமக்கு வழக்கமான ஒன்றுதான். அடுத்த கட்டத்தில்தான் நம்மிடம் சரியான வழிமுறை இல்லை. ஆலமரத்தடியிலும் பிற விசயம் சார்ந்த பேச்சுப் பக்கங்களிலும் உரையாடி, இணக்க முடிவை எட்டி வந்துள்ளோம். ஆனால் முடிவின்போது தொடர்புடைய நபர்கள் வருத்தம் தெரிவிப்பது, கட்டுரை உள்ளடக்கத்தை கோரிக்கை விடுத்தவர் குறிப்பிட்டவாறு மாற்ற அனுமதிப்பது போன்றவை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இவையல்லாமல் யாராவது மூன்றாம் நபர் விக்கி சமூகத்தின் சார்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தேவை இருப்பின் எப்படிச் செய்வது என வகுக்கப்படவில்லை. அதனாலேயே பலரும் கருத்துத் தெரிவித்திருந்தாலும் யார் எப்போது செயல்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு92#நடவடிக்கை என்ற இழையில் இணக்க முடிவு ஏற்பட்டிருந்தும் யாரும் செயல்படுத்தவில்லை என்று இரவி சுட்டிக் காட்டியுள்ளார். பொதுவாக உரையாடல்களை நாம் கருத்தறிவிப்பதற்கே பயன்படுத்துவதால் நான் உட்பட பலரும் கருத்தை இட்டுவிட்டு நிறுத்திக் கொண்டோம். பின்னர் சில நாட்களில் வேறு சிக்கலில் அந்த இழை பரணேறியுள்ளது. (நடுவில் பலரும் களைத்துப் போனது, சொந்த வேலையால் விடுப்பில் சென்றது ஆகியவை இணைந்து கொண்டன.) இந்த இடத்தில் முடிவை தொடர்புடையவரே செயல்படுத்துவதிலோ, யாராவது ஒரு பயனரின் பேச்சுப் பக்கத்தில் போய் இதைச் செயல்படுத்துங்கள் எனக் கேட்பதிலோ தயக்கம் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆகையால், உரையாடற்காலம், முடிவு, செயல்பாட்டாளர் என உரையாடலின் தொடக்கத்திலேயே வகுத்துக் கொண்டோம் எனில் நிருவாகியணுக்கத் தேர்வு போல தானாக நடக்கும். அதனால் கருத்தறிதல் உரையாடல்களைத் தாண்டி முறையீடுகளை வைக்கப் பின்வருவது போல ஒரு வார்ப்பைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.


கோரிக்கை எண்/தலைப்பு[தொகு]

முறையீட்டாளர்: ஒப்பம்
விளக்கம்: முதற்கட்டமாக பேச்சுப்பக்க உரையாடல்களில் பயனர்களிடையே தீர்வு எட்டப்படவில்லை என்பதற்குச் சான்றுடன் விளக்கமளிக்க வேண்டும்.

கருத்துகள்[தொகு]

கூட்டு முடிவு[தொகு]

<இதை சிக்கலுக்குத் தொடர்பில்லாத பயனர் ஒருவர் நிரப்ப வேண்டும். குறித்த காலத்தில் யாரும் நிரப்பாவிட்டால் முறையீட்டாளர் எந்தவொரு பயனரின் பேச்சுப் பக்கத்திலும் நினைவூட்டலாம்.>

மேலே குறிப்பிடத்தக்க புள்ளிகளில் முடிவு எட்டப்படாவிட்டால் தேர்ந்தெடுத்த புள்ளிகளில் வாக்கெடுப்பு நடக்கும்.

ஆதரவு[தொகு]

எதிர்ப்பு[தொகு]

செயல்பாடு[தொகு]

Y ஆயிற்று -- செயற்படுத்துனர் ஒப்பம்


இத்தகைய முறையீட்டை சமுதாய முறையீட்டுக் கூடத்தில் வைத்து ஆலமரத்தடியில் இருந்து இணைப்புத் தருமாறு செய்யலாமா? -- சுந்தர் \பேச்சு 08:27, 28 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

முதலில் முறையீட்டின்போதே வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என்பதால் சற்று வரிசையை மாற்றிவைத்துள்ளேன். ஏனெனில் அந்நேரம் இணக்கமுடிவு எவற்றில் உள்ளன என்று பார்த்து எஞ்சியவற்றை மட்டும் புள்ளிகளாக வாக்கெடுப்புக்கு விடலாம். -- சுந்தர் \பேச்சு 11:09, 28 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

முடிவெடுக்கவேண்டிய நாள் என்பதையும் கோரிக்கை வைப்பவரே முடிவு செய்யவேண்டுமா? கோரிக்கை வைத்ததில் இருந்து இத்தனை நாள் அதாவது 1 மாதம், 5 வாரம்,.... என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சமுதாய முறையீட்டுக் கூடத்தில் இருக்கும் 10 நாள் என்பது குறைவு என்பது என் கருத்து--குறும்பன் (பேச்சு) 20:23, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நல்ல கருத்து குறும்பன். நீங்கள் சொல்வதுபோல கோரிக்கை வைத்து இத்தனை நாட்கள் என்று இருப்பதுதான் சரி. இப்போது அதை வார்ப்பிலிருந்து நீக்கியுள்ளேன். கோரிக்கை வைப்பவர் ஒப்பமிடுவதிலிருந்து தானாக முடிவுறும் நாள் வந்தமரும்படி செய்தால் நன்று. இதுபோன்ற முக்கிய கோரிக்கைகளுக்குப் மூன்று வாரங்கள் வைத்துக் கொள்ளலாமா? -- சுந்தர் \பேச்சு 02:57, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கூட்டு முடிவு அறிவித்தலையும் செயற்பாட்டையும் விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு பயனர் ஒவ்வொரு பயனர் பக்கமாக முறையிட வேண்டும் என்பது போலவும் அது வரை மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள் என்பது போலவும் இருக்கக்கூடாது. ஒரு முறையீடு குறித்த விசாரணையில் பலரும் இறங்குவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதற்காக ஓரிருவர் மட்டும் முதலில் தலையிடத் தொடங்குவது நன்று. ஆனால், வழிமுறைகளை மறந்து முற்று முழுதாக ஓரிருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளும் நிலையோ விக்கி நெறிமுறைகளை ஒதுக்கி விட்டு முற்று முழுதாக ஓரிருவரின் விருப்ப அடிப்படையில் முடிவுகளை முன்வைக்கும் நிலையோ வரக்கூடாது. அதே போல, நெடுநாள் பயனர்கள் - புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும் திறந்த செயற்பாடும் தேவை. பிணக்குத் தீர்வுக்கான பக்குவத்தை வெளிப்படுத்தும் யாரும் தானே முன்வந்து செயற்படுவதற்கான இடம் இருக்க வேண்டும். --இரவி (பேச்சு) 16:58, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இந்த சமுதாய முறையீட்டுக் கூடத்தை ஏன் கலைக்கக்கூடாது?[தொகு]

நடவடிக்கை எடுக்க ஆள் இல்லாத இந்த சமுதாய முறையீட்டுக் கூடத்தை ஏன் கலைக்கக்கூடாது?--இரவி (பேச்சு) 11:13, 21 சனவரி 2014 (UTC) 👍 விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 12:45, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சமுதாய முறையீட்டுக் கூடத்தின் செயல்பாட்டாளர்கள் யாரென தக்க வரையரை செய்தால் இச்சிக்கல் இருக்காது. நிர்வாகிகளைப் பற்றி முறையிடும் இடமாததால், சக நிர்வாகிகளுக்குப் பதில் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் இருத்தல் சரியாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:32, 28 மார்ச் 2015 (UTC)
இது எந்த ஒரு பயனர் குறித்தும் முறையிடும் இடமே. பிணக்குகளுக்குத் தீர்வு காண விரும்பும் யாரும் இங்கு பொறுப்பெடுத்துச் செயற்படலாம். இதில் நிருவாகிகள், அதிகாரிகள் என்ற அதிகாரப் படிநிலை தேவையில்லை. நிறை தகுதி உடைய பலர் இப்பொறுப்புகளை ஏற்காமல் வழமையான பங்களிப்புகளைத் தருகிறார்கள். அவர்களும் உதவலாம். நிருவாகப் பயனர்களின் நிருவாக அணுக்கம் ஊடான செயற்பாடுகள் குறித்த முறையீடுகள் குறித்து இங்கு தெரிவிக்கலாம். --இரவி (பேச்சு) 09:38, 28 மார்ச் 2015 (UTC)

Hi there, I created a logo for you. It is part of a series of logos for all arbitration committees. Please use it as you wish. Kind regards, --Sebastian Wallroth (பேச்சு) 16:17, 23 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]