பொன்னவைக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்னவைக்கோ

பொன்னவைக்கோ (பிறப்பு 1946, மார்ச்சு 7) எஸ். ஆர். எம். தமிழ்ப் பேராயத்தின் தலைவர். தமிழின்மீது தண்டாக் காதல் கொண்ட இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பொறுப்பேற்று விளங்கியபோது தமிழ்-வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இளமை[தொகு]

தமிழ்நாடு, இப்போதுள்ள கடலூர் மாவட்டம், வானூர் வட்டம், செங்கமேடு என்னும் ஊரில் முருகேச உடையார், பொன்னிக்கண்ணம்மையான் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ‘இரத்தின சபாபதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இவர் தனித்தமிழ்ப் பற்று வேரூன்றியபோது தன் தாயாரின் பெயரை இணைத்துத் தன் பெயரைப் ‘பொன்னவைக் கோ’ என மாற்றிக்கொண்டார். இந்தப் பெயர் சபாபதி என்னும் பெயரின் தனித்தமிழ் ஆக்கமாகவும் அமைந்துள்ளது.

உள்ளூர்த் தொடக்கப்பள்ளியிலும், வெளியூர் உயர்நிலைப்பள்ளியிலும் இவர் பள்ளிக் கல்வியினைப் பெற்றார். கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றபோது [1] பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி இவருக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டினார். தமிழ்த்தேசியத்தந்தையாக போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் மீது தீரா பற்று கொண்டு அவ்வியக்கத்தின் வட்டத்தில் இணைத்துகொண்டார். தென்மொழியில் பல கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

உலோ. செந்தமிழ்க்கோதை, சி. மகிழ்நன், பேராசிரியர் சுப்பிரமணியன், சி. ப. வேந்தன், ப. அர. நக்கீரன் முதலானோர் இவரது தமிழ்ப்பணிக் களத்தில் இவருக்கு உறுதுணையாக இயங்கிவந்தனர்.

டில்லி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில்[2] முனைவர் பட்டம்[3] பெற்றார்.

அலுவல் பணி[தொகு]

படைப்பு[தொகு]

இவரது படைப்பு நூல் பொன்னவைக்கோ கவிதைகள். இதில் தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு - உணர்வை ஊட்டும் பாடல்கள் உள்ளன. [8] இவர் தமிழில் எழுதிய அறிவியல் தொடர்பான பாடநூல்கள் அரசு நிறுவனத்தின் வழி வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த்தொண்டு[தொகு]

தமிழ்மொழி கணினித் தொழில் நுட்பங்களுடன் இணையப் பாடுபட்டவர் இவர்.

இவர் தற்போது தமிழுக்குச் செய்துவரும் தொண்டுகளை எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம் பகுதியில் காணலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பணி[தொகு]

இப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக இவர் 2007 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலத்தில் இவர் செய்த தமிழ்ப் பணிகளில் சில:

 • தமிழிலும் அறிவியல் தொழில்நுட்ப இதழ் [16]
 • தமிழில் - பல்கலைக்கழகச் செய்திமடல், ஆண்டறிக்கை, கையேடு வெளியிடப்பட்டது
 • பாரதிதாசன் உயராய்வு மையம், பெரியார் உயராய்வு மையம் ஆகியவை நிறுவப்பட்டன.

பொதுப்பணி[தொகு]

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றிய காலத்தில் [17] மின்னமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வந்த இவர் உருவாக்கிய கருவி கோ-மாதிரிகள். [18]

கருவி-நூல்[தொகு]

[19]

முனைவர் மு. பொன்னவைக்கோ, பொன்னவைக்கோ கவிதைகள், ‘கோ’ இல்லம் வெளியீடு, இரண்டாம்பதிப்பு 2010

அடிக்குறிப்பு[தொகு]

 1. B.E. (Electrical), M.Sc. (Engg.)
 2. I.I.T.
 3. Ph.D.
 4. ஹூனர்.லிபியா, திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரி, சென்னை கிரசண்ட் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் 1986 முதல் 2000
 5. 000 - 2007
 6. 2007 - 2010
 7. 2010 முதல்
 8. பாடல் எடுத்துக்காட்டு

  அகமெனும் பானையில்
  அன்பெனும் நீரூற்றி
  அறிவெனும் அரிசியிட்டு,
  பாசமெனும் பாலூட்டி
  நேசக் கரங்களினால்
  நேர்மை நெருப்பேற்றி
  தீந்தமிழ்த் தேனூற்றி,
  தித்திக்கும் பொங்கலிட்டு
  ஒற்றுமை உணர்வு பொங்க
  உற்ற உறவினராய்
  நற்றமிழ்ப் பற்றோடு
  பொங்கல் திருநாளில்
  பொங்கிப் பூரித்து,
  பொங்கலோ பொங்கலென,
  பொங்கலிட்டு வாழியவே.

 9. 4000-க்கு மேல், தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகம் இதனை வெளியிட்டுப் பாடநூல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது.
 10. இது கணிப்பொற மொழிகளின் தமிழாக்கம்
 11. தமிழ் இணையதளங்களில் தமிழில் செய்திகளைத் தேடிப் பெற வடிவமைக்கப்பட்ட கருவி
 12. The Unicode Consortium
 13. https://www.infitt.org/
 14. இணையத் தமிழ் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இயங்கும் கூட்டமைப்பு
 15. தமிழ்நாடு அரசு 1998 ஆம் ஆண்டு அமைத்த தகவல் தொழில் நுட்பத்தில் தமிழின் பயன்பாடு என்னும் பணிக்குழுவில் செயல்பட்டு உருவாக்கியது
 16. IEEE Spectrum தமிழ்
 17. 1969 முதல் 1986
 18. மின் பகிர்வு அமைப்புகளில் (Electrical Power Distribution System) 15% மின் இழப்பைக் குறைக்க உதவும் கருவி
 19. முனைவர் மு.பொன்னவைக்கோ (2011). துணைவேந்தர் சொல்லும் செயலும். சேகர் பதிப்பகம். பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190778732. இணையக் கணினி நூலக மையம்:761616349. https://books.google.co.in/books?id=runEMwEACAAJ&dq=துணைவேந்தர்+சொல்லும்+செயலும்&hl=ta&sa=X&redir_esc=y. 

வெளி இணைப்புகள்[தொகு]

மு. பொன்னவைக்கோவின் இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னவைக்கோ&oldid=3826114" இலிருந்து மீள்விக்கப்பட்டது