ராபின் வில்லியம்ஸ்
இராபின் வில்லியம்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | சூலை 21, 1951 சிகாகோ, இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
இறப்பு | ஆகத்து 11, 2014 டிபூரன், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 63)
Medium | மேடைச் சிரிப்புரை, திரைப்படம், தொலைக்காட்சி |
தேசியம் | அமெரிக்கர் |
நடிப்புக் காலம் | 1972–2014 |
நகைச்சுவை வகை(கள்) | கதாப்பாத்திர நகைச்சுவை, உடலசைவு நகைச்சுவை, முன்னேற்பாடின்றித் திடிரென்று செய்யும் நகைச்சுவை, நையாண்டி, உற்றுநோக்கும் நகைச்சுவை, |
செல்வாக்கு செலுத்தியோர் | பீட்டர் செல்லர்ஸ், ஜொனாதன் விண்டர்ஸ் |
செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டோர் | கொனான் ஓ பிரையன், பிராங்க் கேலிடன்டோ |
இராபின் மெக்லரின் வில்லியம்ஸ் (Robin McLaurin Williams) (பிறப்பு: சூலை 21, 1951–ஆகஸ்டு 11, 2014) அமெரிக்கத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் மேடைச் சிரிப்புரைஞராவார். சிகாகோவில் பிறந்த இவர் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நகரங்களில் 1970 ஆம் ஆண்டு கலகட்டங்களில் மேடைச் சிரிப்புரைஞராக இருந்தார். மோர்க் அண்ட் மைன்டி எனும் சூழ்நிலைக்கேற்ற நகைச்சுவை செய்யும் ஒரு நிகழ்ச்சியில் மோர்க் எனும் வேற்றுலக உயிரியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்பு மேடைச் சிரிப்புரைஞராகவும், துரைப்படங்களிலும் நடித்தார். இவரின் முன்னேற்பாடின்றித் திடிரென்று செய்யும் திறனால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[3][4]
1980 இல் வெளிவந்த பாபேய் எனும் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். வில்லியம் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களிலும், துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்மார்னிங் வியட்நாம் (காலை வணக்கம் வியட்நாம் (1987) டெட் போயட்ஸ் சொசைட்டி(1989), வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் அலாவுதீன் திரைப்படம் (1992) 1997 இல் குட் வில் ஹன்டிங் ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்தார். மேலும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் 1991 இல் வெளிவந்த ஹுக் , ஜோ ஜான்ஸ்டன் இயக்கிய ஜுமாஞ்சி (1995), மற்றும் 2006 இல் ஷான் லீவி இயக்கிய நைட் அட தெ மியூசியம் போன்ற அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹண்டிங்' படத்தின் நடிப்புக்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றார் . இரு முறை எம்மி விருதும், ஏழு முறை கோல்டன் குளோப் விருதும், நான்கும் முறை கிராமி விருது பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு மூன்றுமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார் .அவர் நடித்த மிஸஸ் டவுட்ஃபயர்’ தமிழில் அவ்வை சண்முகியாகவும், ‘பாட்ச் ஆடம்ஸ்’ படம் தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஹிந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்றும் வெளிவந்தன .[5]
ஆகஸ்டு 11, 2014 இல் தனது 63 ஆவது வயதில் கலிபோர்னியா , பாரடைசு கேயில் உள்ள தனது வீட்டில் தற்கொலைசெய்துகொண்டார்.[6]
இளமைக் காலம் மற்றும் கல்வி[தொகு]
ராபின் மேக்லரின் வில்லியம்ஸ் இலினொய் மாநிலத்தில் உள்ள சிகாகோ நகரில் உள்ள புனித லுக்ஸ் மருத்துவமனையில் ஜூலை 21 ஆம் தேதி 1951 வருடம் பிறந்தார் [7].[8] இவரின் தந்தை ராபர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் வில்லியம்ஸ் , போர்ட் தானுந்து நிறுவனத்தில் நிருவாக அதிகாரியாக பணியாற்றினார்.[9][10] தாய் லாரி மெக்லரின் மிசிசிப்பியின் முன்னாள் வடிவழகி. வில்லியம்சுக்கு ராபர்ட் மற்றும் மெக்லரின் எனும் இரு சகோதரர்கள் உள்ளனர்.[11][12] இவர் இங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து, வேல்ஸ்,ஜெர்மன் மற்றும் பிரான்சு ஆகிய வழி மரபைச் சார்ந்தவர் ஆவார்.[13]
வில்லியம்ஸ் ஆரம்ப கல்வி பொது கார்டன் ஆரம்பப்பள்ளியிலும் நடுநிலைக்கல்வி டீர் பாத் நடுநிலை பள்ளியிலும் பயின்றார்.[14]
வாழ்க்கை[தொகு]
ஆரம்ப காலத்தில் ஜோனதான் வின்டர்சை ராபின் வில்லியம்ஸ் தனது இலட்சிய மனிதராக கருதினார்.
மேடைச் சிரிப்புரை[தொகு]
ராபின் வில்லியம்ஸ் 1970 இல் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் மேடைச் சிரிப்புரை செய்து தனது வாழ்க்கையை தொடங்கினார். அவரது முதல் நடிப்பு சான் பிரான்சிஸ்கோ, நகைச்சுவை கிளப், புனித நகர பூங்காவில் நடந்தது.
விருதுகள்[தொகு]
அகாதமி விருது[தொகு]
ஆண்டு | திரைப்படம் | பிரிவு | முடிவு | Ref. |
---|---|---|---|---|
1987 | குட் மார்னிங் வியட்நாம் | சிறந்த நடிகர் | பரிந்துரை | [15] |
1989 | டெட் போயட்ஸ் சொசைட்டி | சிறந்த நடிகர் | பரிந்துரை | [16] |
1991 | தெ ஃபிசர் கிங் | சிறந்த நடிகர் | பரிந்துரை | [17] |
1997 | குட் வில் ஹண்டிங் | சிறந்த துணை நடிகர் | வெற்றி | [18][19] |
ஊடகங்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- இராபின் வில்லியம்சின் புகழ் பெற்ற சுருக்குரைகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Free Time | Caliendo hopes 'Frank TV' makes good first impression". Pantagraph.com. செப்டம்பர் 7, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 1, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Robin Williams". James Lipton (host). Inside the Actors Studio. Bravo. சூன் 10, 2001. No. 710, season 7. பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Raab, Lauren; Parker, Ryan; Loomis, Nicky (August 11, 2014). "Robin Williams, 'funniest man alive,' dead at 63". The Bradenton Herald. Los Angeles Times. Archived from the original on October 20, 2014. https://www.webcitation.org/6TSIUf17i?url=http://www.bradenton.com/2014/08/11/5298510_robin-williams-funniest-man-alive.html?rh=1. பார்த்த நாள்: 2014-10-19.
- ↑ Kahn, Mattie (August 12, 2014). "When Norm Macdonald Met Robin Williams - 'The Funniest Man in The World'". ABC News. Archived from the original on 2014-08-13. https://web.archive.org/web/20140813070539/http://abcnews.go.com/Entertainment/norm-macdonald-met-robin-williams-funniest-man-world/story?id=24950575. பார்த்த நாள்: 2014-10-19.
- ↑ வெ. சந்திரமோகன் (13 ஆகத்து 2014). "ராபின்-வில்லியம்ஸ்-உறைந்த-புன்னகை". 16 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Martin, Nick (August 13, 2014). "San Francisco Neighbours Mourn Robin Williams". Sky News. Archived from the original on August 13, 2014. https://web.archive.org/web/20140813112157/http://news.sky.com/story/1317742/san-francisco-neighbours-mourn-robin-williams. பார்த்த நாள்: August 13, 2014.
- ↑ "Chicago Native Robin Williams Recalled 'Good Times' Growing Up Here". chicago.cbslocal.com. August 18, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Chicago Native Robin Williams Recalled 'Good Times' Growing Up Here". CBS Local. August 11, 2014. August 12, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 18, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kornbluth, Jesse (November 22, 1993). "Robin Williams' Change Of Life: Fighting For His Family In His New Film, 'Mrs. Doubtfire,' And In Real Life". New York Magazine (K-III Magazine Corporation): pp. 34–41. https://books.google.com/books?id=axsAAAAAMBAJ&pg=PA34. பார்த்த நாள்: August 20, 2014.
- ↑ Shipman, Robert (August 13, 2014). "Genealogy buffs find Williams' roots in Evansville". Washington Times. August 14, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 15, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McLellan, Dennis (August 18, 2007). "R. Todd Williams, 69; winery founder, comic's brother". Los Angeles Times. October 6, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 10, 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Donahue, Michael (December 25, 1991). "Robin Williams' Half-brother Is An All-out Fan". Chicago Tribune. Scripps Howard News Service. Archived from the original on August 14, 2014. https://web.archive.org/web/20140814053727/http://articles.chicagotribune.com/1991-12-25/features/9104250678_1_robin-williams-peter-pan-todd-williams. பார்த்த நாள்: October 20, 2014.
- ↑ "Full text of "Anselm J. McLaurin (late a senator from Mississippi)"". Archive.org. 1911. July 25, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ""ராபின் வில்லியம்ஸ்' இளமைக்காலம் லேக் ஃபாரஸ்ட் நினைவில்," by Karen Ann Cullotta, Chicago Tribune, August 13, 2014". ஆகஸ்ட் 13, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகஸ்ட் 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 60th Academy Awards (1988) Nominees and Winners". Oscars. 11 April 1988. 22 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 62nd Academy Awards (1990) Nominees and Winners". Oscars. 26 March 1990. 22 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 64th Academy Awards (1992) Nominees and Winners". Oscars. 30 March 1992. 22 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The 70th Academy Awards (1998) Nominees and Winners". Oscars. 23 March 1998. 22 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 1998 Oscars Winners and Nominees Retrieved 19 December 2014