உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் மில்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் மில்சு

ஜான் மில்சு (John Mills) (1806 – 1889) [1] ஒரு தொழில்முனைவாளரும் பயில்நிலை வனியலாளரும் ஆவார். இவர் தண்டீ நகரத்தில் நார்ப்ப்பட்டும் சணல்நாரும் செய்யும் தொழிலில் ஈடுபட்டார். இவர் இளைஞராக இருந்தபோதே கிர்க் மூலப் பிரிவின் உறுப்பினராக இருந்தமையால், வானியலிலும் கிறித்துவ மெய்யியலிலும் பல நூல்களை இயற்றிய மெய்யியலாளரான மாண்புறு தாமசு டிக்கின் தாக்கத்துக்குப் பேரளவில் ஆட்பட்டுள்ளார். மாண்புறு டிக் அறிவியலையும் சமயத்தையும் ஒன்றிசைவாக முயன்றார். கடவுளின் பெருந்தகைமையை வானியல் ஆய்வால் நன்றாக அறிய்லாம் என நம்பினார். சிறிது காலத்துக்குப் பிறகு, இதற்காக மெத்தோவனில் முனைப்பாக அமைச்சராகச் செயல்பட்டார். இவர் ஒவ்வொரு நகரமும் பொதுப் பூங்காக்களும் பொது நூலகங்களும் பொது வான்காணகங்களும் பெற்றிருத்தல் வேண்டுமென வற்புறுத்தினார்.

தாமசு டிக்கால் ஊக்கம் பெற்ற ஜான் மில்சு, சொந்தமான தனியர் வான்காணகத்தைத் தண்டீ லா மலைச்சாரலில், இன்று அடிலெய்டே எனுமிட்த்தில், நிறுவினார். ஒரு பழைய அச்சுப்படம் கும்மட்டம் இல்லாத கட்டிட எச்சத்தைக் இன்னமும் காட்டுகிறது. ஜான் மில்சின் தொலைநோக்கிக்ளில் ஒன்று எடின்பர்கு அரசு அரசு வான்காணத்தோடு இணைந்த கண்காட்சி அரங்கில் இன்னமும் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • Herbert, W. N.; Price, Richard (1991). Duende: A Dundee Anthology (in ஆங்கிலம்). Gairfish. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9515419-3-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மில்சு&oldid=3953081" இலிருந்து மீள்விக்கப்பட்டது