பார்க் மக்களவைத் தொகுதி
Appearance
பார்க் மக்களவைத் தொகுதி | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
நிறுவப்பட்டது | 1957 |
நீக்கப்பட்டது | 2008 |
பார்க் மக்களவை தொகுதி (Barh Lok Sabha constituency) என்பது 1957 முதல் 2008 வரை பீகாரில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும். 1957ஆம் ஆண்டில் பாட்னா கிழக்கு மக்களவை பார்ஹ் மக்களவை என்று மறுபெயரிடப்பட்ட போது இந்த தொகுதி உருவாக்கப்பட்டது.
நிதீஷ் குமார் 1989 முதல் 1999 வரை பார்க் (பாட்னா) தொகுதியிலிருந்து ஐந்து முறை இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004-இல் பார்க் தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால் அந்த ஆண்டே நாலந்தா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[1] தர்கேஸ்வரி சின்ஹா இந்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றொரு முக்கிய அரசியல்வாதி ஆவார்.
தொகுதி
[தொகு]1957இல், முந்தைய பாட்னா கிழக்கு மக்களவைத் தொகுதி பார்க் மக்களவை என்று மறுபெயரிடப்பட்டது.
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]1952-1957
[தொகு]பார்க் மக்களவைத் தொகுதி:
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | தர்கேஸ்வரி சின்ஹா | இந்திய தேசிய காங்கிரசு |
1957-2008
[தொகு]பாட்னா கிழக்கு மக்களவைத் தொகுதி:
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | தர்கேஸ்வரி சின்ஹா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | |||
1971 | தராம் பிர் சின்ஹா | ||
1977 | சியாம் சுந்தர் குப்தா | ஜனதா கட்சி | |
1980 | தராம் பிர் சின்ஹா | இந்திய தேசிய காங்கிரஸ் (யு) | |
1984 | பிரகாசு சந்திர யாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | நிதிஷ் குமார் | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | சமதா கட்சி | ||
1998 | |||
1999 | ஐக்கிய ஜனதா தளம் | ||
2004 | விஜய் கிருஷ்ணா | இராச்டிரிய ஜனதா தளம் | |
2008 முதல்: பார்க்கவும் முங்கேர் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1996 தேர்தல்
[தொகு]- நிதிஷ் குமார் (எஸ்ஏபி) : 3,60,156 வாக்குகள்[2]
- விஜய் கிருஷ்ணா (ஜே. டி.) : 2,95,302
2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இரா.ஜ.த. | விஜய் கிருஷ்ணா | 4,26,856 | 49.40 | ||
ஐஜத | நிதிஷ் குமார் | 3,89,168 | 45.04 | ||
பசக | ஆனந்தி மெகதோ | 16,240 | 1.88 | ||
இ.பொ.க. (மா-லெ) | மிதிலேசு யாதவ் | 12,940 | 1.50 | ||
சுயேச்சை | சந்தியேந்திரா குமார் சிங் | 7,983 | 0.92 | ||
வாக்கு வித்தியாசம் | 37,688 | 4.36 | |||
பதிவான வாக்குகள் | 8,64,102 | 69.53 | |||
இரா.ஜ.த. gain from ஐஜத | மாற்றம் |