இந்தியத் தேசிய காங்கிரசு (அ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
Indian National Congress (U)
நிறுவனர்தேவராஜ் அர்ஸ்
மக்களவைத் தலைவர்சரத் பவார்
தொடக்கம்ஜூலை 1979
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
பின்னர்இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
நிறங்கள்சிவப்பு  
இ.தே.ஆ நிலைகலைக்கப்பட்ட கட்சி[1]
இந்தியா அரசியல்

இந்தியத் தேசிய காங்கிரசு (அ) (Indian National Congress (U)) இந்திரா காந்தி தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து (இ) பிரிந்த பிரிவாகும். இது ஜூலை 1979-ல் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த டி. தேவராஜ் அர்ஸால் உருவாக்கப்பட்டது. இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி மீண்டும் கட்சிக்கு திரும்பியதால் பிளவு ஏற்பட்டு இந்தியத் தேசிய காங்கிரசு (அ) தோன்றியதாக அர்சு விளக்கமளித்தார். உர்ஸ் தன்னுடன் கர்நாடகா, கேரளா, மகாராட்டிரா மற்றும் கோவாவினைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களான, ஒய். பி. சவாண், தேவ காந்த பருவா, காசு பிரம்மானந்த ரெட்டி, அ. கு ஆன்டனி, சரத் பவார், சரத் சந்திர சின்ஹா, பிரியரஞ்சன் தாசு முன்சி மற்றும் கே. பி. உன்னிகிருஷ்ணன் உட்படப் பல சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டார் .

பின்னர் தேவராஜ் அர்ஸ் ஜனதா கட்சியில் இணைந்தார். யஷ்வந்த்ராவ் சவான், பிரமானந்த ரெட்டி மற்றும் சிதம்பரம் சுப்பிரமணியம் ஆகியோர் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தனர். அ. கு. அண்டனி காங்கிரசிலிருந்து பிரிந்து கேரளா காங்கிரசை உருவாக்கினார். 1981 அக்டோபரில் கட்சித் தலைவராக சரத் பவார் பொறுப்பேற்றபோது, கட்சியின் பெயர் இந்தியத் காங்கிரசு (சோசலிஸ்ட்) என மாற்றப்பட்டது.[2]

தலைவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]