உள்ளடக்கத்துக்குச் செல்

பனையப்பட்டி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனையப்பட்டி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எம். அருணா, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி திருமயம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ரகுபதி (திமுக)

மக்கள் தொகை 2,276
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பனையப்பட்டி ஊராட்சி (Panaiyapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2276 ஆகும். இவர்களில் பெண்கள் 1162 பேரும் ஆண்கள் 1114 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 279
சிறு மின்விசைக் குழாய்கள் 8
கைக்குழாய்கள் 17
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 23
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்
ஊரணிகள் அல்லது குளங்கள் 8
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 1
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 130
ஊராட்சிச் சாலைகள் 12
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7

காவல் நிலையம்

[தொகு]

பனையப்பட்டியில் திருமயம் - பொன்னமராவதி சாலையில் பூஞ்சோலை நகரில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையம்

[தொகு]

பனையப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசின் உதவியுடன் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

வங்கிகள்

[தொகு]

இங்கு அரசுடமையாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி[7], தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி[8] ஆகியவை செயல்பட்டு வருகிறது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தானியங்கி பண சேவையை வங்கி நேரங்களில் பயன்படுத்தலாம். தனியார் வங்கியின் ஒரு தானியங்கி பண சேவையும் பனையப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வருகிறது.

அஞ்சல் குறியீட்டு எண்

[தொகு]

பனையப்பட்டியில் கிளை அஞ்சல் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு மேலே உள்ள அஞ்சல் அலுவலகம் குழிபிறை. அஞ்சல் குறியீடு எண்[9] : 622 402

பள்ளிகள்

[தொகு]

இங்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றும்,துவக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது. இரண்டுமே உதவி பெரும் பள்ளிகள்.[10]. இரு பள்ளிகளிலும் சுமார் 450 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.

கோயில்கள்

[தொகு]

இந்த ஊரின் எல்லையில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஊரின் பேருந்து நிலையம் அருகில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தேவாலயம் ஒன்று உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தேவாலயத்தில் விழா நடக்கிறது

போக்குவரத்து

[தொகு]

அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இங்கு ஓடுகின்றன. புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி சாலையில் இருக்கும் இவ்வூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் திருமயம் மற்றும் பொன்னமராவதிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சாலை வழியே திருப்பத்தூர், இராங்கியம், காரைக்குடி, காரையூர் செல்வது எளிது. இந்த ஊருக்கு மிகவும் அருகில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் நமனசமுத்திரம் மற்றும் திருமயம். சென்னைக்கும் இங்கிருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. இவை பொன்னமராவதியில் இருந்து இவ்வூர் வழியாக இயக்கப்படுகிறது.

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[11]:

  1. கொல்லக்காடு
  2. பூஞ்சோலைநகர்
  3. உதயசூரியபுரம்
  4. பனையப்பட்டி

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "திருமயம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. http://banksifsccode.com/indian-overseas-bank-ifsc-code/tamil-nadu/pudukkottai/panayapatti-branch/
  8. https://bankifsccode.com/ICICI_BANK_LTD/TAMIL_NADU/PUDUKKOTTAI/PANAYAPATTI
  9. https://pincode.net.in/TAMIL_NADU/PUDUKKOTTAI/P/PANAYAPATTI
  10. http://righttoeducation.in/sites/default/files/Tamil%20Nadu%20Recognised%20Private%20Schools%20%28Regulation%29%20Act%2C%201973.pdf
  11. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனையப்பட்டி_ஊராட்சி&oldid=3721028" இலிருந்து மீள்விக்கப்பட்டது