துரோகலோப்டெரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரோகலோப்டெரான்
வரி சிரிப்பான் (துரோகலோப்டெரான் லைனேட்டம்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்

மாதிரி இனம்
துரோகலோப்டெரான் சப்யூனிகலர் (செதில் சிரிப்பான்)
பிளைத், 1843
சிற்றினம்

உரையினை காண்க

துரோகலோப்டெரான் என்பது லியோத்ரிச்சிடே என்ற சிரிப்பான் பறவைக் குடும்பத்தின் பேரினமாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

1843ஆம் ஆண்டு இங்கிலாந்து விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் துரோகலோப்டெரான் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] "சுற்று" அல்லது "குனிந்த" என்று பொருள்படும் பண்டைய கிரேக்க துரோகாலோசு மற்றும் "சிறகு" என்று பொருள்படும் டெரோனுடன் இந்த பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி இனங்கள் 1930ஆம் ஆண்டில் ஈ. சி. இசுடூவர்ட் பேக்கரால் செதில் சிரிப்பான் என நியமிக்கப்பட்டது.

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் பின்வரும் 19 சிற்றினங்கள் உள்ளன:[2]

படம் பொது பெயர் விலங்கியல் பெயர் பரவல்
பழுப்பு தலை சிரிப்பான் துரோகலோப்டெரான் ஆஸ்டெனி பட்காய் சரகம், இந்தியா
செதில் சிரிப்பான் துரோகலோப்டெரான் சப்யூனிகோலர் பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் வியட்நாம்.
வரி சிரிப்பான் துரோகலோப்டிரான் லைனேட்டம் ஆப்கானித்தான், பூட்டான், இந்தியா, நேபாளம், பாக்கித்தான், உருசியா மற்றும் தஜிகிஸ்தான்.
பட்டை சிரிப்பான் துரோகலோப்டெரான் விரகடம் பட்காய் ரேஞ்ச், இந்தியா
நீலச் சிறகு சிரிப்பான் துரோகலோப்டெரான் இசுகுவாமடசு கிழக்கு இமயமலை, யுன்னான், மியான்மர் மற்றும் லாவோஸ்
வண்ணச் சிரிப்பான் துரோகலோப்டெரான் வெரைகேட்டம் பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் திபெத்.
கறுமுகச் சிரிப்பான் துரோகலோப்டெரான் அஃபைன் கிழக்கு நேபாளம் கிழக்கு நோக்கி இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேலும் மியான்மர், பூட்டான் மற்றும் தென்கிழக்கு திபெத்துடன்.
எலியாட் சிரிப்பான் துரோகலோப்டெரான் எலியோட்டி மத்திய சீனா மற்றும் வடகிழக்கு இந்தியா.
பழுப்பு கன்ன சிரிப்பான் துரோகலோப்டெரான் என்றிசி தென்மேற்கு சீனா மற்றும் வடகிழக்கு இந்தியா
வெண் மீசைச் சிரிப்பான் துரோகலோப்டெரான் மோரிசோனியம் தைவான்
செம்பழுப்பு பிடரி சிரிப்பான் துரோகலோப்டெரான் எரித்ரோசெபாலம் பூட்டான், சீனா, இந்தியா மற்றும் நேபாளம்.
வளையச் சிரிப்பான் துரோகலோப்டெரான் யெர்சினி வியட்நாம்.
செவ்வால் சிரிப்பான் துரோச்சலோப்டெரான் மில்நெய் சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.
செஞ்சிறகுச் சிரிப்பான் துரோகலோப்டெரான் பார்மோசம் சீனா (சிச்சுவான், யுன்னான் மற்றும் குவாங்சி மாகாணங்கள்) மற்றும் வடமேற்கு வியட்நாம்.
பூட்டானிய சிரிப்பான் துரோகலோப்டெரான் இம்ப்ரிகேட்டம் பூடான் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகள்.
அசாம் சிரிப்பான் துரோகலோப்டெரான் கிரிசோப்டெரம் வடகிழக்கு இந்தியா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு சீனா மற்றும் மியான்மர்.
வெள்ளி காது சிரிப்பான் துரோகலோப்டெரான் மெலனோசுடிக்மா தெற்கு யுன்னான், லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.
தங்கச் சிறகு சிரிப்பான் துரோகலோப்டெரான் நாகோக்லின்கென்சிசு வியட்நாம்.
மலேய சிரிப்பான் துரோகலோப்டெரான் பென்னின்சுலே தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியா.

முன்னாள் சிற்றினங்கள்[தொகு]

லியோத்ரிக்சு, ஆக்டினோடுரா, மின்லா, குரோசியாசு மற்றும் கீட்டோரோபாசியா ஆகிய பேரினங்களில் உள்ள உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உட்கிளைகளைவிட, துரோகலோப்டெரான் கிளை அதிக தொலைவில் தொடர்புடையதாகக் காட்டிய இன வரலாறு ஆய்வுகளின் அடிப்படையில், இந்த பேரினத்தில் முன்னர் சேர்க்கப்பட்ட இரண்டு சிற்றினங்கள் மாண்டிசின்க்லாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.[3]

  • கறுப்பு கன்ன சிரிப்பான், மான்டெசின்க்லா காச்சினன்சு (ஜெர்டோனி முழு இனமாகப் பிரிக்கப்பட்டது)
  • சாம்பல் மார்புச் சிரிப்பான், மான்டெசின்க்லா பேர்பாங்கி

மேற்கோள்கள்[தொகு]

  1. Edward Blyth (1843). "Mr. Blyth's monthly Report for December Meeting, 1842, with Addenda subsequently appended". Journal of the Asiatic Society of Bengal 12 (143): 925–1011 [952]. https://www.biodiversitylibrary.org/page/40060941. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  3. Robin, V.V.; Vishnudas, C.K.; Gupta, P.; Rheindt, F.E.; Hooper, D.M.; Ramakrishnan, U.; Reddy, S. (2017). "Two new genera of songbirds represent endemic radiations from the Shola Sky Islands of the Western Ghats, India". BMC Evolutionary Biology 17 (31): 1–14. doi:10.1186/s12862-017-0882-6. பப்மெட்:28114902. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோகலோப்டெரான்&oldid=3867743" இலிருந்து மீள்விக்கப்பட்டது