செவ்வால் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வால் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
து. மில்நெய்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் மில்நெய்
டேவிட், 1874
வேறு பெயர்கள்
  • கருலெக்சு மில்நெய் (டேவிட், 1874)

செவ்வால் சிரிப்பான் (Red-tailed laughingthrush-துரோகலோப்டெரான் மில்நெய்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

துணையினங்கள்[தொகு]

செவ்வால் சிரிப்பான் சிற்றினத்தின் கீழ் நான்கு துணையினங்கள் அடங்கும்:[2][3][4]

விளக்கம்[தொகு]

துரோகலோப்டெரான் மில்நெய் சிரிப்பானின் உடல் நீளம் 26–28 வரை வளரலாம். இதன் எடை சுமார் 66–93 கிராம் (2.3–3.3 oz) இருக்கும். இந்த நடுத்தர அளவிலான சிரிப்பான்கள் மந்தமான பழுப்பு மஞ்சள்-சாம்பல் நிறத்தில், பிரகாசமான பழுப்பு-நிறத் தலையுடன் கரு முகத்துடன், வெண்மையான காதுகள் மறைந்து காணப்படும். இறக்கைகளும் வால்களும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[3]

பரவலும் வாழிடமும்[தொகு]

செவ்வால் சிரிப்பானின் குஞ்சு

செவ்வால் சிரிப்பான் சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணலாம்.[2] இந்த பறவைகள் முக்கியமாகப் பரந்த இலை பசுமையான காடுகளின் அடிப்பகுதியில் வாழ்கின்றன.[3]

இவை மலைப்பகுதிகளில் வாழக்கூடியன. பொதுவாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800–2,500 மீட்டர்கள் (5,900–8,200 அடி) உயரத்தில் வாழ்கின்றன.[5]

காணொலி காட்சியில்

நடத்தை[தொகு]

செவ்வால் சிரிப்பான், முக்கியமாகப் பூச்சிகள் மற்றும் சிறிய கணுக்காலிகள் (வண்டுகள், அசகாவம், முதலியன). ஆனால் பெர்ரி மற்றும் பழங்கள் (குறிப்பாக சௌரௌஜா இனங்கள்) ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. இனப்பெருக்க காலம் ஏப்ரல் முதல் சூன் வரை நீடிக்கும். ஆண் மற்றும் பெண் என இரு பறவைகளும் கூடுகளைக் கட்டுவதில் பங்களிக்கின்றன. முக்கியமாகப் புற்கள் மற்றும் மூங்கில் இலைகளால் செய்யப்பட்ட நேர்த்தியான கோப்பை போன்று கூடுகள் காணப்படும்.[3] இது தரை மட்டத்திலிருந்து சுமார் 1 மீ உயரத்தில் கட்டப்பட்டும். பெண் சிரிப்பான் 2-3 முட்டைகளை இடுகின்றன. இவை 17-18 நாட்களுக்கு அடைகாக்கப்படுகிறது. குஞ்சுகள் இரண்டு பெற்றோர்களாலும் உணவளிக்கின்றன. குஞ்சுகள் 14-16 நாட்களில் வளர்ச்சியடைந்த பின் கூட்டை விட்டு வெளியேறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வால்_சிரிப்பான்&oldid=3867735" இலிருந்து மீள்விக்கப்பட்டது