திரை இசைக் களஞ்சியம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchதிரை இசைக் களஞ்சியம் இந்திய தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் பற்றிய ஒரு வரலாற்று ஆவண நூலாகும்.[1]

திரை இசைக் கலைஞர்கள்[தொகு]

திரை இசைக் கலைஞர்கள் என்ற வகையில் பாடகர்கள், பாடலாசிரியர்கள், வாத்திய இசை வித்துவான்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

அந்தக் கலைஞர்களின் விபரங்களை "திரை இசைக் களஞ்சியம்" நூல் கால அட்டவணைப்படி பட்டியலிட்டு தொகுத்துத் தருகிறது.

நூலில் விபரம் சேர்க்கப்பட்டிருக்கும் கலைஞர்கள்[தொகு]

 1. டி. பி. ராஜலட்சுமி
 2. பி. பி. ரங்காச்சாரி
 3. பாபநாசம் சிவன்
 4. எஸ். ராஜம்
 5. எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
 6. வி. ஏ. செல்லப்பா
 7. சி. எஸ். ஜெயராமன்
 8. எம். கே. தியாகராஜ பாகவதர்
 9. ஜி. என். பாலசுப்பிரமணியம்
 10. எஸ். வி. சுப்பையா பாகவதர்
 11. கே. பி. சுந்தராம்பாள்
 12. வி. என். சுந்தரம்
 13. என். எஸ். கிருஷ்ணன்
 14. கொத்தமங்கலம் சீனு
 15. எம். ஆர். சந்தானலட்சுமி
 16. எஸ். வி. வெங்கடராமன்
 17. பி. எஸ். கோவிந்தன்
 18. டி. ஏ. மதுரம்
 19. எம். எம். தண்டபாணி தேசிகர்
 20. பி. ஜி. வெங்கடேசன்
 21. காளி என். ரத்னம்
 22. எம். டி. பார்த்தசாரதி
 23. பாலசரஸ்வதி தேவி
 24. வி. வி. சடகோபன்
 25. பி. யு. சின்னப்பா
 26. அஸ்வத்தம்மா
 27. செருகளத்தூர் சாமா
 28. சி. ஹொன்னப்ப பாகவதர்
 29. யு. ஆர். ஜீவரத்தினம்
 30. டி. கே. பட்டம்மாள்
 31. கோவிந்தராஜுலு நாயுடு
 32. எம். எஸ். சுப்புலட்சுமி
 33. டி. ஆர். மகாலிங்கம்
 34. நாகர்கோயில் மகாதேவன்
 35. எஸ். வரலட்சுமி
 36. டி. ஆர். ராஜகுமாரி
 37. மாரியப்ப சாமிகள்
 38. என். சி. வசந்தகோகிலம்
 39. துறையூர் ராஜகோபால சர்மா
 40. ஆர். சுதர்சனம்
 41. கே. எல். வி. வசந்தா
 42. ஜி. ராமநாதன்
 43. சித்தூர் வி. நாகையா
 44. எம். எஸ். சரோஜினி
 45. ரஞ்சன்
 46. பி. ஏ. பெரியநாயகி
 47. வசுந்தரா தேவி
 48. எம். எஸ். சுந்தரி பாய்
 49. எஸ். பாலசந்தர்
 50. கே. வி. மகாதேவன்
 51. டி. வி. ரத்தினம்
 52. எஸ். ராஜேஸ்வர ராவ்
 53. கே. ஆர். ராமசாமி
 54. கே. வி. ஜானகி
 55. எம். எஸ். ராஜேஸ்வரி
 56. சி. ஆர். சுப்பராமன்
 57. எஸ். எம். சுப்பையா நாயுடு
 58. ஜே. பி. சந்திரபாபு
 59. எம். எஸ். ஞானமணி
 60. கண்டசாலா
 61. பி. லீலா
 62. எம். எல். வசந்தகுமாரி
 63. பானுமதி
 64. திருச்சி லோகநாதன்
 65. ஜிக்கி
 66. டி. எஸ். பகவதி
 67. டி. ஏ. மோதி
 68. ரிமா (ஆர். வைத்தியநாதன்)
 69. வி. டி. ராஜகோபாலன்
 70. சி. என். பாண்டுரங்கன்
 71. ஏ. பி. கோமளா
 72. டி. ஆர். கெஜலட்சுமி
 73. ஆதி நாராயண ராவ்
 74. ஏ. எல். ராகவன்
 75. வி. தட்சிணாமூர்த்தி
 76. டி. எம். சௌந்தரராஜன்
 77. ஏ. எம். ராஜா
 78. (ராதா) ஜெயலட்சுமி
 79. எஸ். தட்சிணாமூர்த்தி
 80. ஏ. ஜி. ரத்னமாலா
 81. டி. ஜி. லிங்கப்பா
 82. கே. ஜமுனாராணி
 83. கே. ராணி
 84. பி. சுசீலா
 85. விஸ்வநாதன்-ராமமூர்த்தி
 86. பி. எஸ். திவாகர்
 87. எஸ். சி. கிருஷ்ணன்
 88. டி. ஆர். பாப்பா
 89. பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
 90. பி. பி. ஸ்ரீநிவாஸ்
 91. சீர்காழி கோவிந்தராஜன்
 92. ஹெச். எம். வி. கமலா
 93. சூலமங்கலம் ராஜலட்சுமி
 94. ஆண்டாள்
 95. வேதா
 96. சலபதி ராவ்
 97. மாஸ்டர் வேணு
 98. எஸ். ஜானகி
 99. ஆர். பார்த்தசாரதி
 100. எல். ஆர். ஈஸ்வரி
 101. பாடகர் எம். எஸ். வி.
 102. வி. கோவர்த்தனம்
 103. எம். பி. சீனிவாசன்
 104. எம். முத்து
 105. எம். பாலமுரளிகிருஷ்ணா
 106. பி. வசந்தா
 107. மனோரமா
 108. கே. ஜே. ஏசுதாஸ்
 109. ஜி. கே. வெங்கடேஷ்
 110. வி. குமார்
 111. தாராபுரம் சுந்தரராஜன்
 112. சங்கர்-கணேஷ்
 113. டி. பி. ராமச்சந்திரன்
 114. கே. சுவர்ணா
 115. டி. கே. புகழேந்தி
 116. மாஸ்டர் தேவராஜன்
 117. எஸ். பி. பாலசுப்பிரமணியம்
 118. குன்னக்குடி வைத்தியநாதன்
 119. ஜெயலலிதா
 120. பி. ஏ. சிதம்பரநாதன்
 121. எம். ஆர். விஜயா
 122. டி. கே. கலா
 123. பி. ஜெயசந்திரன்
 124. மு. க. முத்து
 125. ஷியாம்
 126. கோவை சௌந்தரராஜன்
 127. வாணி ஜெயராம்
 128. விஜய பாஸ்கர்
 129. பி. எஸ். சசிரேகா
 130. கமலஹாசன்
 131. ஏ. வி. ரமணன்
 132. உமா ரமணன்
 133. இளையராஜா
 134. சலீல் சௌத்ரி
 135. எஸ். என். சுரேந்தர்
 136. எல். வைத்தியநாதன்
 137. தீபன் சக்ரவர்த்தி
 138. ஏ. ஏ. ராஜ்
 139. எஸ். வி. நரசிம்மன்
 140. மனோஜ் கியான்
 141. ஏ. ஆர். ரஹ்மான்
 142. ரமேஷ் விநாயகம்

நூலாசிரியர்[தொகு]

இந்த நூலின் ஆசிரியர் வாமனன் ஒரு திரை இசை வரலாற்றாய்வாளர்.[2] டி. எம். சௌந்தரராஜன்[3], எம். எஸ். விஸ்வநாதன்[4], கே. வி. மகாதேவன் உள்ளிட்ட பலரைப் பற்றித் தனியாக நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.[5] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[6]

நூலின் வரலாறு[தொகு]

கலைஞர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள இந்த நூலுக்கே ஒரு வரலாறு உண்டு.

1999 ஆம் ஆண்டுதிரை இசை அலைகள் - பாகம் 1 என்ற தலைப்பில் ஆசிரியர் வாமனன் ஒரு நூலை முதன் முதலில் வெளியிட்டார். அதில் கால வரிசைப்படி சில கலைஞர்கள் பற்றிய விபரம் தாங்கிய கட்டுரைகள் அடங்கியிருந்தன. 1999 ஆம் ஆண்டு தமிழக அரசு, தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் ஆகியவை அடங்கிய பகுப்பின் கீழ் இந்த நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.(காண்க: தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999)

இதன் பின்னர் திரை இசை அலைகள் பாகம் - 2, 3, 4, 5 ஆகியவை ஒவ்வொன்றும் சில வருட இடைவெளி விட்டு வெளியாகின. ஒவ்வொரு பாகத்திலும் அதில் இடம்பெற்ற கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் கால வரிசைப்படி அமைந்திருந்தன.

இந்த 5 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக ஆக்கப்பட்டதே திரை இசைக் களஞ்சியம் நூலாகும். இந்த நூலிலும் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் கால ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.

வெளியீடு[தொகு]

திரை இசைக் களஞ்சியம் நூல் முதல் பதிப்பு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை 600108 இலுள்ள மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் 1000.00 விலையில் மொத்தம் 1280 பக்கங்களைக் கொண்டுள்ள புத்தகத்தின் எடை 2.8 கிலோ ஆகும்.

சான்றுகள்[தொகு]

 1. "திண்ணை" (11 பெப்ரவரி 2018). மூல முகவரியிலிருந்து 29 ஆகஸ்ட் 2018 அன்று பரணிடப்பட்டது.
 2. "Roots and wings" (ஆங்கிலம்). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. மூல முகவரியிலிருந்து 29 ஆகஸ்ட் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 ஆகஸ்ட் 2018.
 3. சச்சி srikanthaa. "T.M. Soundararajan" (ஆங்கிலம்). இலங்கை தமிழ் சங்கம். மூல முகவரியிலிருந்து 29 ஆகஸ்ட் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 ஆகஸ்ட் 2018.
 4. "Recalling the `golden era' of Tamil film music". தி இந்து (23 ஜூலை 2005). மூல முகவரியிலிருந்து 27 செப்டெம்பர் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29ஆகஸ்ட் 2018.
 5. "மரணத்தை பற்றி வாஜ்பாயின் கவிதை". puthiyathalaimurai.com (16 ஆகஸ்ட் 2018). மூல முகவரியிலிருந்து 29 ஆகஸ்ட் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 ஆகஸ்ட் 2018.
 6. "Honoured by the State for contribution to arts" (ஆங்கிலம்). தி இந்து (17 பெப்ரவரி 2006). மூல முகவரியிலிருந்து 21 ஆகஸ்ட் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29ஆகஸ்ட் 2018.
 • வாமனன். திரை இசைக் களஞ்சியம் (முதல் பதிப்பு ). சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை. 044 25361039.