கண்டசாலா
கண்டசாலா (Ghantasala Venkateswara Rao, 4 திசம்பர் 1922 – 11 பெப்ரவரி 1974) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். இவரது முழுப்பெயர் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இளவயதுக் காலம்
[தொகு]1922-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா தாலூக்காவிலுள்ள சௌதப்பள்ளி என்னும் ஊரில் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் பிறந்தார். தந்தையார் பெயர் சூரய்யா கண்டசாலா. தாயார் பெயர் ரத்தம்மா.[1]
தந்தையார் ஒரு பாடகர். நாராயண தீர்த்தரின் தரங்கிணிகளைப் பாடுவார். மிருதங்கமும் வாசிப்பார். கண்டசாலா சிறு பையனாக இருக்கும்போது தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.[2]
இசைப் பயிற்சி
[தொகு]விசாகப்பட்டினத்தில் துவாரம் வேங்கடசுவாமி நாயுடு முதல்வராக இருந்த இசைக்கல்லூரியில் இசை பயின்றார். அங்கு ஆசிரியராக இருந்த பி. சீதாராம சாஸ்திரி அவருக்கு இசை கற்றுக்கொடுத்தார். (இவர் பின்னாளில் கண்டசாலா திரைப்படங்களில் பாடிய காலத்திலும் உதவியாக இருந்தார்.)[2]
பாடகர்/இசையமைப்பாளர்
[தொகு]அனைத்திந்திய வானொலியில் இவர் பாடிவந்தார். பின்னர் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனிக்காகச் சில பாடல்கள் பாடினார். அதனையடுத்து 1944-ஆம் ஆண்டு வெளியான சீதா ராம ஜனனம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அப்போது இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பாராமன் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அதனையடுத்து திரைப்படங்களில் பின்னணி பாடிவந்தார். முதன்முதலாக லக்ஸ்மம்மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]- மாயக்குதிரை (1949) தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
- பாதாள பைரவி (1951)
- நிரபராதி (1951) இணை இசையமைப்பாளர் ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி
- கல்யாணம் பண்ணிப்பார் (1952) இணை இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு
- பரோபகாரம் (1953)
- சந்திரகாரம் (1954)
- குணசுந்தரி (1955)
- கள்வனின் காதலி (1955) இணை இசையமைப்பாளர் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
- அமரகீதம் (1956) (சிரஞ்சீவுலு தெலுங்கு படத்தின் தமிழாக்கம்)
- மாயா பஜார் (1957) இணை இசையமைப்பாளர் எஸ். ராஜேஸ்வரராவ்
- பாலநாகம்மா (1959) தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
- சபாஷ் ராமு (1959) தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
- வாழ்க்கை ஒப்பந்தம் (1959)
- மனிதன் மாறவில்லை (1962)
- லவ குசா (1963) (பின்னணி வாத்திய இசை) (பாடல்கள் இசை: கே. வி. மகாதேவன்
பாடல்கள் இடம்பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]- பாதாள பைரவி (1951)
- காதல் (1952)
- தேவதாஸ் (1953)
- சண்டி ராணி (1953)
- கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி (1954)
- புது யுகம் (1954)
- குண சுந்தரி (1955)
- கள்வனின் காதலி (1955)
- அனார்கலி (1955)
- நாட்டிய தாரா (1955)
- எல்லாம் இன்ப மயம் (1955)
- அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)
- தெனாலி ராமன் (1956)
- சம்பூர்ண இராமாயணம் (1956)
- பிரேம பாசம் (1956)
- அமர தீபம் (1956)
- யார் பையன் (1957)
- மணமகன் தேவை (1957)
- மகலநாட்டு மேரி (1957)
- மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
- மாயா பஜார் (1957)
- எங்க வீட்டு மகாலட்சுமி (1957)
- பலே ராமன் (1957)
- கலைவாணன் (1959)
- மஞ்சள் மகிமை (1959)
- அன்பு சகோதர்கள் (1973)
மறைவு
[தொகு]கண்டசாலா 1974 பெப்ரவரி 11 அன்று காலமானார்[3]. சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் காலமாவதற்கு முதல்நாள், ஆவணப் படம் ஒன்றிற்காக மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபடியே அவர் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ghantasala ‘Music’ Story
- ↑ 2.0 2.1 Ghantasala (1922-1974)
- ↑ 3.0 3.1 "The melody imperial". Archived from the original on 2003-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-10-11.