மனிதன் மாறவில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதன் மாறவில்லை (Manithan Maravillai) அலூரி சக்ரபாணி இயக்கத்தில், 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஜெமினி கணேசன், சாவித்திரி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி. நாகி ரெட்டி மற்றும் அலூரி சக்ரபாணி தயாரிப்பில், கண்டசாலா இசை அமைப்பில், 8 ஜூன் 1962[1] ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தது.

நடிகர்கள்[தொகு]

ஜெமினி கணேசன், சாவித்திரி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா, எஸ். வி. ரங்கா ராவ், சுந்தரி பாய், கே. சக்ரபாணி, எல். விஜயலட்சுமி, ராஜா, லட்சுமி பிரபா, ராஜகாந்தம், ராமச்சந்திரன், நாகேஷ், செருகளத்தூர் சாமா.

கதைச்சுருக்கம்[தொகு]

கணவரை இழந்த சுப்பம்மா (சுந்தரி பாய்), தன் மகள் சரோஜா (ஜமுனா), மகன் பிரபாகர் (ராஜா) மற்றும் மூத்த தாரத்து மகள் லட்சுமி (சாவித்ரி), ஆகியோருடன் வசதியாக வாழ்ந்து வருகிறார். லட்சுமியை வேலையாள் போலவே நடத்துகிறார் சுப்பம்மா. சிதம்பரனாரின் இரு மகன்களில் ஒருவரை சரோஜாவுக்கு மணமுடிக்க விரும்புகிறார் சுப்பம்மா. அவரின் தம்பி குப்புசாமி, சிறையில் இருக்கும் தன் மகன் பூபதியுடன் சரோஜாவை மணமுடிக்க விரும்பினார்.

சுப்பம்மாவிற்கு பாடம் புகட்ட முடிவுசெய்து, சிதம்பரனாரும் இருமகன்களும் சேர்ந்து நாடகமாடி, மூத்த மகன் பஞ்சாச்சரம் (ஜெமினி கணேசன்) லக்ஷ்மியை மணக்கிறான்.

சரோஜாவை பிரபாகருக்கு திருமணம் செய்ய ஆசை படுகிறார் சுப்பம்மா. ஆனால் பிரபாகரன் பத்மாவை விரும்புகிறான். பின்னர், பிரபாகர் குடிக்கு அடிமையானவன் என்பது தெரியவர பிரச்சனைகள் அதிகமாயின. இறுதியில், சரோஜாவை யார் திருமணம் செய்தார்? சுப்பம்மா மனம் திருந்தினாரா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்திற்கு கண்டசாலா இசை அமைத்தார். தஞ்சை என். ராமையா மற்றும் கண்ணதாசன் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.[2]

தயாரிப்பு[தொகு]

தெலுகில் என். டி. ராமராவ் நடித்த வேடத்தில், ஜெமினி கணேசன் நடித்திருந்தார். மார்கஸ் பார்ட்லேய் ஒளிப்பதிவு செய்தார்.[3]

வரவேற்பு[தொகு]

திரைக்கதை, இயக்கம், முன்னணி நடிகர்களின் நடிப்பு ஆகியவை நன்கு பாரப்பட்டிருந்தாலும், வியாபார ரீதியாக தோல்வியை தழுவியது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி-இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதன்_மாறவில்லை&oldid=3673610" இருந்து மீள்விக்கப்பட்டது