டவாங் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தவாங்
རྟ་དབང༌།
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்தவாங்
ஏற்றம்2,669 m (8,757 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,202
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

தவாங் நகரம் (ஆங்கில மொழி: Tawang Town, இந்தி: तवांग) இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 3,048 மீற்றர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தை திபெத்தின் தென்பகுதி என சீன அரசும் அருணாசலப் பிரதேசத்தின் பகுதி என இந்திய அரசும் கூறிவருகின்றன. [1][2] முன்னர் இது மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையகமாக இருந்தது. பின்னர் தவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டதால் தற்போது தவாங் மாவட்டத்தின் தலைமையகமாக உள்ளது.

புவியியல்[தொகு]

தவாங் நகரம் குவஹாத்தியில் இருந்து 555 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. டெஜ்பூரில் இருந்து 320 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணிப்பீட்டின்படி இதன் மக்கள்தொகை 11,202 ஆகும். இதில் 54% வீதமானோர் ஆண்களும் 46% வீதமானோர் பெண்களும் ஆவர். இந்நகரத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 63% ஆகும், இது இது இந்திய படிப்பறிவு விகிதமான 59.5%ஐ விட அதிகமானதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மேக்ஸ்வெல், நெவில் (1970). இந்தியாவின் சீனப்போர். நியூ யோர்க்: பான்தியோன். பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780224618878. http://www.scribd.com/doc/12249475/Indias-China-War-Neville-Maxwell. 
  2. ஜே மைக்கேல் கோல் (நவம்பர் 27, 2012). "சர்ச்சையை உண்டாக்கும் சீனாவின் புதிய கடவுச்சீட்டு". த டிப்லொமாட் (The Diplomat). பார்த்த நாள் மே 25, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டவாங்_நகரம்&oldid=2963394" இருந்து மீள்விக்கப்பட்டது