சி. என். அண்ணாத்துரை (திருவண்ணாமலை)
Appearance
(சி. என். அண்ணாத்துரை (17வது மக்களவை உறுப்பினர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சி. என். அண்ணாத்துரை | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 23 மே 2019 – தற்போது | |
முன்னையவர் | இர. வனரோசா |
தொகுதி | திருவண்ணாமலை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூன் 1973 தேவனாம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம் | திருவண்ணாமலை |
முன்னாள் கல்லூரி | பச்சையப்பன் கல்லூரி |
மூலம்: [1] |
சி. என். அண்ணாத்துரை என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான இர. வனரோசா என்பவரிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2019, 2024 பொதுத் தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)