"காவடியாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Kaavadiyaaddam_Jaffna.jpg|thumb|right|210px250px|நேர்த்திக்காகக் காவடியெடுக்கும் பக்தர்கள்]]
 
[[படிமம்:Taipoussan Singapour 1994 05.jpg |thumb|right|210px|காவடி எடுப்பதற்காக முதுகில் செடில் குத்தியபடி ஒரு பக்தர்]]
'''காவடியாட்டம்''' என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். [[இலங்கை|இலங்கையிலும்]], [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலும்]], தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. [[முருகன்]] கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் [[கரகாட்டம்|கரகாட்டத்தின்]] ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது<ref>பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 157</ref><ref>குணசேகரன். கரு. அழ., 2004, பக். 26</ref>. . .
 
==சொற்பிறப்பு==
[[படிமம்:Kavadi dancer 6039398.jpg |thumb|right|250px|முள்ளுக்காவடி, [[யேர்மனி]] ஆலயத்தில் ]]
"காவடியாட்டம்" என்பது "காவடி", "ஆட்டம்" என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. காவடி என்பது ஆட்டத்துக்கான கருவி என்பதால், இவ்வாட்டத்தின் பெயர் அதற்கான கருவியின் அடியாக எழுந்தது எனலாம். "காவடி" என்னும் சொல் "காவுதடி" என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது<ref>பெருமாள். அ. கா., இராமச்சந்திரன். நா., 2001, பக். 157</ref>. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர்.
 
 
==காவடி எடுத்தல்==
[[படிமம்:KavadiTaipoussan dancerSingapour 60393981994 05.jpg |thumb|right|210px|முள்ளுக்காவடி,காவடி எடுப்பதற்காக முதுகில் செடில் [[யேர்மனி]]குத்தியபடி ஆலயத்தில்ஒரு பக்தர்]]
வழிபாட்டுத் தொடர்பான காவடி எடுத்தலில், குறிப்பாக நேர்த்தி வைத்துக் காவடி எடுத்தலில், தங்களை வருத்திக்கொள்ளும் நடைமுறைகளைக் காண முடியும். சிலர் ஏறத்தாழ ஆறு அங்குல நீளம் கொண்ட வெள்ளி வேல்களை ஒரு கன்னத்திலிருந்து மறு கன்னத்தினூடாக வரும்படி குத்திக்கொண்டும், இன்னொரு சிறிய வேலை நாக்கினூடாகக் குத்தியபடியும் காவடி எடுப்பர் இது "அலகு குத்துதல்" எனப்படும். தவிரம் தூண்டில் போல் வளைந்த வெள்ளி ஊசிகள் பலவற்றை முதுகில் வரிசையாகக் குத்தி அந்த ஊசிகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளை இன்னொருவர் பிடித்து இழுத்தபடி இருக்கக் காவடி ஆடுவர். இது "செடில் குத்துதல்" எனப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/919119" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி