பேச்சு:காவடியாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. தூக்குக் காவடியைத் தோளில் தூக்க முடியாது :-)
  2. தமிழீழம் என்பதைக் கட்டுரைகளில் தவிர்ப்பது நல்லது. கதிர்காமம் தமிழீழத்தில் இல்லை. காவடி முக்கியத்துவம் குறைந்து விடவில்லை. ஆகவே இலங்கை குறிப்பிடப்பட வேண்டும். இலங்கை குறிப்பிடப்படும்போது தமிழீழம் தனியாகக் குறிப்பிடப்பட வேண்டியதில்லை.

நன்றி. --கோபி 17:19, 9 நவம்பர் 2006 (UTC)

உங்கள் கருத்துக்களிற்கு மதிப்பளிக்கின்றேன் அதே சமயம் தூக்குக்காவடி அதன் அதிகாரப்பூர்வப் பெயர் என்ன தெரியுமா.ஏனெனில் நான் செவிமடுத்த பெயர்களையே இங்கு வழங்கியுள்ளேன்.--சக்திவேல் நிரோஜன் 01:38, 10 நவம்பர் 2006 (UTC)

மேலும் நீங்கள் கூறுகின்றீர்கள் கதிர்காமத்தில் காவடி எடுக்கப்படுவதென்று அதனால் இலங்கை முழுவதிலும் அதன் பங்குள்ளதென்று, எடுத்துக்காட்டாக பரத நாட்டியம் இன்று வெளிநாட்டவராலும் பயிலப்படுகின்றது அப்படியானால் அதனை உலகில் அனைத்திடங்களிலும் காணப்படுகின்றது என்று கூறலாமா இல்லை அதன் தோற்றப் பகுதிகளை மட்டும் எழுதினால் சரியா.எவ்வாறு விக்கியில் தெரிவிக்கலாம்.--சக்திவேல் நிரோஜன் 02:35, 10 நவம்பர் 2006 (UTC)

நான் தமிழீழத்தினை வேண்டுமென்று திணிக்கவில்லை அப்பகுதிகளில் தோற்றம்பெற்றவை இலங்கையெங்கும் என்று குறிப்பிடுவதனால் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற ஜயப்பாடே அதன் காரணம்.--சக்திவேல் நிரோஜன் 02:48, 10 நவம்பர் 2006 (UTC)

நிரோ, தமிழீழம் என்ற அதிகாரப்பூர்வ அரசியல் அமைப்பு வரும்வரை நிலப்பகுதிகளை அதன் பேரில் குறிப்பதை விக்கிபீடியாவில் தவிர்க்கலாம். இலங்கை என்று பொதுவாக குறிப்பிடுவது உங்களுக்குத் துல்லியமாகத் தெரியாவிட்டால், தமிழ்ப்பகுதிகளை குறிப்பிட குறிப்பிட்ட மாகாணங்களின் பெயர்களை குறிப்பிடலாம். அல்லது பெரும்பான்மை தமிழர்கள் வாழும் ஊர்கள், நிலப்பகுதிகள் என்று குறிப்பிடலாம். விக்கிபீடியாவில், அரசியல் ரீதியில் துல்லியம் பேண வேண்டியது நம் கடமையல்லவா? --Ravidreams 07:24, 10 நவம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காவடியாட்டம்&oldid=1193034" இருந்து மீள்விக்கப்பட்டது