தி. ஜானகிராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 74: வரிசை 74:
{{reflist}}
{{reflist}}



== வெளி இணைப்புகள் ==
* [http://www.sirukathaigal.com/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/ தி.ஜானகிராமன் - சிறுகதைகள் (www.sirukathaigal.com)]
* மனித நேயர் தி.ஜானகிராமன்[https://web.archive.org/web/20111123152823/http://jeeveesblog.blogspot.com/2008/03/blog-post_10.html]
* [http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D அழியாச்சுடர்கள் தளத்தில் தி. ஜானகிராமன் படைப்புகள்]
* [http://www.dinamani.com/specials/kalvimani/2014/01/05/தமிழ்-அறிஞர்கள்-அறிவோம்-தி./article1984111.ece தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தி.ஜானகிராமன்]
* [https://www.dinamani.com/editorial-articles/special-stories/2021/jun/28/writer-thi-janakiraman-birth-centenary-3650141.html தி. ஜானகிராமனின் நூற்றாண்டு நினைவு நாள்]
{{சாகித்திய அகாதமி விருது }}
{{சாகித்திய அகாதமி விருது }}



06:10, 27 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்

தி.ஜானகிராமன்

தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்[2] போன்றவற்றை எழுதியவர்.

தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

கல்வி

இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக் கல்வியையும், 1929 - 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றவர். 1936 - 194 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றவர்.

ஆசிரியப்பணிகள்

இவர் 1943 - 1944 வரை கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், 1944 - 1945 வரை சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், 1945 - 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டையிலும், குத்தாலம் பள்ளியிலும் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

வானொலி

இவர் 1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர். 1968 - 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

படைப்புகள்

தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967-,இல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974-இல் வெளியிட்டார்.

மொழியாக்கம்

நாவல்கள்

  • அமிர்தம் (1945),
  • மலர்மஞ்சம் (1961)
  • அன்பே ஆரமுதே (1963)
  • மோகமுள் (1964)
  • அம்மா வந்தாள் (1966)
  • உயிர்த்தேன் (1967)
  • செம்பருத்தி (1968)
  • மரப்பசு (1975)
  • அடி (1979)
  • நளபாகம் (1983)

குறுநாவல்கள்

  • கமலம் (1963)
  • தோடு'' (1963),
  • அவலும் உமியும் (1963),
  • சிவஞானம் (1964),
  • நாலாவது சார் (1964),
  • வீடு

பயண நூல்கள்

  • "உதயசூரியன்" (1967)
  • "கருங்கடலும் கலைக்கடலும் (1974)

சிறுகதைத் தொகுதிகள்

  • கொட்டுமேளம் (1954)[3]
  • சிவப்பு ரிக்ஷா (1956)
  • அக்பர் சாஸ்திரி (1963)
  • யாதும் ஊரே (1967)
  • பிடிகருணை (1974)
  • சக்தி வைத்தியம் (1978)
  • மனிதாபிமானம் (1981)
  • எருமைப் பொங்கல் (1990)
  • கச்சேரி (2019) (தொகுப்பில் இல்லாத புதிய கதைகள்)

கட்டுரை

  • உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
  • அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
  • கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
  • நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)

நாடகம்

  • "நாலுவேலி நிலம்" (1958)
  • "வடிவேல் வாத்தியார் (1963),
  • "டாக்டர் மருந்து"

மேற்கோள்கள்

  1. மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது
  2. "நவீன இலக்கியச் சிற்பி தி. ஜானகிராமன்". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&action=edit. பார்த்த நாள்: 21 May 2021. 
  3. "தி.ஜானகிராமன்: அன்பின் நித்தியச் சுடர்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ஜானகிராமன்&oldid=3408093" இலிருந்து மீள்விக்கப்பட்டது