பயனர் பேச்சு:பாஸ்கர் துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், பாஸ்கர் துரை, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:33, 5 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

சிறு தொகுப்பு[தொகு]

சிறு திருத்தங்கள் செய்யும்போது தொகுத்தல் சுருக்கத்தில் இஃது ஒரு சிறு தொகுப்பு என்பதைத் தெரிவுசெய்து சேமியுங்கள். காண்க: en:Help:Minor edit --AntanO (பேச்சு) 02:46, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்...

அப்படியே செய்கிறேன் பாஸ்கர் துரை (பேச்சு) 00:33, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

எழுத்துகள்[தொகு]

நீங்கள் யார்? எதற்காக எழுத்துக்கள் என்றிருப்பவற்றையெல்லாம் எழுத்துகள் என்று மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? இலக்கணப் பிழை எதுவுமிருந்தால் தக்க ஆதாரத்துடன் காண்பித்த பின்னர் மாற்றலாம். கவனிக்க @செல்வா:, @Sengai Podhuvan:, @Mayooranathan:.--பாஹிம் (பேச்சு) 13:10, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ்!

தங்களின் தமிழ் ஆர்வத்தை நான் வணங்குகிறேன். வணக்கம் ஐயா, நான் ஒரு தமிழாசிரியன்/தமிழ் ஆர்வலன்.

இயல்பினும் விதியினும்... நன்னூல் எழுத்ததிகாரம் 165-ஆவது நூற்பாவை முதலில் பார்த்துவிட்டு கீழ்வரும் நூற்பாவைப் பார்ப்பது சாலச் சிறந்தது

இடை, உரி,  வடசொலின்  இயம்பிய  கொளாதவும் போலியும்  மரூஉவும்  பொருந்திய  ஆற்றிற்கு இயையப் புணர்த்தல்  யாவர்க்கும் நெறி (நன்னூல் எழுத்ததிகாரம் நூற்பா.239)


நிலைமொழி இடைச்சொல்லாக வந்து  வருமொழி முதலில் வல்லினம் வருகையில் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகும்.

எழுத்து -பெயர்ச்சொல்>வன்தொடர்க் குற்றியலுகரம் பிழை-பெயர்ச்சொல்>தொழிற்பெயர் =எழுத்துப் பிழை

எட்டு-பெயர்ச்சொல்>எண்ணுப்பெயர்>வன்தொடர்க் குற்றியலுகரம் தொகை-பெயர்ச்சொல்>தொழிற்பெயர் =எட்டுத்தொகை அடுக்குத்தொடர்

எடுத்து-வினைச்சொல்>வினையெச்சம்>வன்தொடர்க் குற்றியலுகரம் காட்டினான்-வினைச்சொல்>வினைமுற்று எடுத்துக்காட்டினான் பிடித்துக்கொண்டான்.

ஆனால், பெயர்ச்சொல் மட்டுமே பன்மை விதி ஏற்கும். கள் என்பது பன்மை விகுதி ஆகும் அஃது ஓர் இடைச் சொல் ஆகும்.

நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக அமைந்து அதனை அடுத்து, கள்- என்னும் இடைச்சொல் விகுதி வந்து புணர்ந்தால் அதனை அடுத்து ஒற்று மிகுதல் கூடாது என்பதை மேற்கண்ட நன்னூல் நூற்பா தெளிவாக விளக்கி நிற்கிறது.

எழுத்துகள், ஓட்டுகள், நாற்றுகள், பாட்டுகள், வாத்துகள், பூட்டுகள், வேட்டுகள், மூக்குகள், படைப்புகள், அடுக்குகள், அடுப்புகள், குறிப்புகள், கருத்துகள், சீட்டுகள், சொட்டுகள், உப்புகள், சீப்புகள், தப்புகள், வாய்ப்புகள்

இவ்வாறு எழுதுவதே வழாநிலை ஆகும்.


தாங்கள் விளக்கம் கேட்டதற்கு (நன்னூல் நூற்பா 41) மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்... வாழ்க தமிழ்!

என்னுடைய கருத்துத் தவறாக இருக்கும் பட்சத்தில் வேறு ஏதேனும் இலக்கணச் சான்றுகளுடன் விளக்கம் தாருங்கள்.

பாஸ்கர் துரை (பேச்சு) 15:06, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வன்றொடர்க் குற்றியலுகரத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள். வன்தொடரல்லவே. விதியை உரைத்து விட்டு எதற்காக எழுத்துக் கற்பிக்கும் போது என்று வந்த இடங்களிலெல்லாம் ககர ஒற்றை நீக்கினீர்கள்? எழுத்தே கற்பிக்கிறதா?--பாஹிம் (பேச்சு) 15:50, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்... நான் ஒரு மாற்றுத்திறனாளி தாங்கள் கேட்கின்ற வினாவிற்கு மெதுவாகத்தான் பதில் பதிவிட இயலும். அதற்கு என்னை மன்னிக்கவும்.

பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இம்மன்னா" என வழங்குவர்.

பிள்ளைகளுக்கு எழுத்தைக் கற்பிக்கும்போதும் -என்ற சொற்றொடரில் அஃது உணர்த்தும் பொருண்மையை நோக்கினால் பிள்ளைகள் எழுவாய் ஆகின்றன எழுத்து என்ற சொல்லை அடுத்து செயப்படுபொருள் வேற்றுமை உருவான ஐ (இரண்டாம் வேற்றுமை உருபு) மறைந்து வருகிறது. மேற்கண்ட சொற்றொடரில் எழுத்து என்பதற்கும் கற்பிக்கும்போது என்பதற்கும் இடையில் ஐ உருபு மறைந்து வருவதால் இச்சொற்றொடர் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் அமைவதினால் இவ்விடத்து ஒற்று மிகுதல் கூடாது.

மேலும் சான்றுகள்

கண்ணன் பிள்ளைகளுக்கு எழுத்தைக் கற்பிக்கும்போதும்.

எழுத்தை -என்ற இரண்டாம் வேற்றுமை விரியில் உருபு மறைந்து வருமாயின்

அச்சொற்றொடர் கண்ணன் பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும்- என்று இருக்க வேண்டும்

மேற்கண்ட சொற்றொடரில் எழுத்து என்பது செயப்படு பொருளாக அமைந்து இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்காமல் இருப்பதனால் இஃது இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆகும் எனவே அவ்விடத்து வல்லினம் மிகாது

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.


வாழ்க தமிழ் வாழ்க வளமுடன். பாஸ்கர் துரை (பேச்சு) 16:25, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

பாஸ்கர் பி.ஏ.,எம்.ஏ‌.,எம்.பில்.,பி.எட்., தமிழ் ஆசிரியன் ஆய்வேடுகள் பாசவதைப் பரணி காட்டும் அறம். இலக்கணவியலாரின் எழுத்தியல் மரபுகள்.(M.phil) இடைச்சொற்களின் வரலாறும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வு)

  தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம், முத்துவீரியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ்நூல் போன்றவை நூல் எல்லைகள் ஆகும்.

மதுரையின்கண்ணுள்ள விவேகானந்தர் கல்லூரியில் பேராசிரியர் பணியிலும் மதுரையில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிலும் தமிழ்ப்பணி ஆற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நடந்த ஒரு விபத்தில் என்ற முதுகுத்தண்டு சி4,சி5 பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையிலும் (எனது உடலில் நெஞ்சுக்கு மேல் வலிமிகும் இடங்கள் நெஞ்சுக்கு கீழ் வலிமிகா இடங்கள் உண்டு -ஆதலால் உடலளவிலும் வலிமிகும் இடங்கள் மிகா இடங்கள் அறிவேன்) தமிழ் இலக்கண இலக்கியங்களோடு இருக்கின்றனன். நான் கற்ற தமிழ் என் உயிருக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற வரிகளுக்கு பொருளாக வாழ்கிறேன். தாங்கள் கேட்கும் குரல் கொடுக்கவும் குரல் செயலி வாயிலாகப் பதிலைப் பதிவிட்டேன். தமிழாசிரியர் பணியைத் தவமாகக் கருதிப் பணியாற்றினேன் தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி 8248446268. பாஸ்கர் துரை (பேச்சு) 17:02, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

விளக்கம் தேவை[தொகு]

நன்றாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. மற்றும் சில கேள்விகளும் இருக்கின்றன. சற்று விளக்கத்துக்காகத்தான். குறை பிடிக்கவல்ல. தாரும், செய்யும், வாரும் என்றவாறு ஏவல் வினை முடியலாம் என்பதை தெரியும். தரவும், செய்யவும், வரவும் என்றவாறு முடியுமா? இரு சொற்களை இணைக்க மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு இலக்கணமுண்டா? விளக்கினால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 17:37, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

என்னுடைய மேற்படி கேள்விக்கு விடைளிப்பீர்களா?--பாஹிம் (பேச்சு) 04:54, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் மொழியை நேசிக்கின்றமைக்காக மிக்க நன்றி. மொழிபெயர்ப்பாளர்கள் என்ற பெயரில் தமிழைச் சிதைக்கும் சிலருடன் இன்றும் சச்சரவு ஏற்பட்டு மன வருத்தமுற்றிருந்தேன். அந்நிலையில் தமிழை உயிராக நேசிக்கும் ஒருவரைக் காட்டித் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.--பாஹிம் (பேச்சு) 17:45, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

பாஸ்கர் துரை அவர்களே, உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள். இதே போன்று விளையாட்டுகள் என்று எழுதுவதே சரியென நினைக்கிறேன். தங்கள் கருத்தைத் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:48, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்

விளையாட்டு = விளை+ய்+ஆட்டு. ஆட்டு-என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயராகும். ய்-உடம்படுமெய்.

இச்சொல்லுடன் கள் விகுதி புணரும் போது வல்லினம் மிகாது. இதுவே வழாநிலை

தாங்கள் கூறுவது மிகச் சரியே.

அலகிலா விளையாட்டு உடையார்-கம்பராமாயணம்.

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்

பாஸ்கர் துரை (பேச்சு) 23:43, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்... நானும் தமிழ் வாயிலாகத் தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்

பாஸ்கர் துரை (பேச்சு) 23:53, 28 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ், வாழ்க வளமுடன்...

மற்று-இடைச்சொல் மற்றவன் (மற்று +அவன்) மற்றவள் (மற்று +அவள்) மற்றவர் (மற்று +அவர்) மற்றது ( மற்று +அது) மற்றவை (மாற்று+ அவை) மற்றொன்று (மற்று+ஒன்று). -இவை அனைத்தும் மற்று என்ற இடைச் சொல் அடியாகப் பிறந்த இடைச்சொற்றொடர் ஆகும்.மற்றும்.(மற்று+உம்)-இடைச்சொல்.

மற்று என்ற இடைச்சொல் மட்டும் தனித்து நின்று பொருள் உணர்த்த இயலாது. சொற்றொடரில் பெயர், வினை சொற்களுக்கிடையே இருக்கும் போது மட்டுமே பொருள் உணர்த்த இயலும்.

மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை.

விளக்கம்: மற்றும்.(மற்று-இடைச்சொல் உடன் பொருளில் வந்துள்ளது +உம்-இடைச்சொல்--இந்த இடைச்சொல் எட்டுப்பொருளில் வரும் ஆனால் இவ்விடத்து முற்றுப்பொருளில் வந்துள்ளது) (மூன்றாம் வேற்றுமை உருபான ஒடு/ ஓடு என்னும் இடைச்சொல் உடன் பொருள் தரும் அல்லவா அதுபோன்று மற்று என்ற இடைச்சொல் உடன் பொருளோடு உம் என்ற இடைச்சொல் முற்றுப் பொருள் தந்து இணைவதால் மற்றும் என்ற இடைச்சொல் தோன்றுகிறது. மற்றும் என்ற இடைச்சொல் அடுத்து பெயர் தொடர்கின்ற போது அதனை அடுத்து மீண்டும் பெயர்தொடர இயலாது.

கோவலன், கண்ணகி, மற்றும் கவுந்திஅடிகள் மதுரைக்குச் சென்றனர்.

கோவலன் கண்ணகி கவுந்தி அடிகள் ஆகிய(எல்லைப் பொருள்/முற்றுப் பொருள்) மூவரும் (முற்றும்மை) மதுரைக்குச் சென்றனர்.

கோவலன், கண்ணகியோடு(உடன் பொருள்) கவுந்தி அடிகளும்(இறந்தது தழீஇய எச்சவும்மை) மதுரைக்குச் சென்றார்.

முடிபு: மற்றும் என்ற இணைப்புச் சொல் (-உடன் மற்றும் முற்றுப் பொருளில் வந்த இடைச்சொல் ஆகும்)

திருக்குறளில் அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த பாடல்கள் அமைந்துள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.(ஆதிதிராவிடர்களுக்கும் பழங்குடியினருக்கும் -இங்கு எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் இடைச் சொல் வந்துள்ளது)

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.(இவ்விடத்தில் எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் இடைச்சொல் வந்துள்ளது)

வாழ்க தமிழ், வாழ்க வளமுடன்.

 பாஸ்கர் துரை (பேச்சு) 16:29, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

நூலகத்தில் அறம் சார்ந்த நூல்களும் மற்றும் புறம் சார்ந்த நூல்களும் உள்ளன.

இச்சொல் தொடரில் உம்-இடைச்சொல் எண்ணுமையாக வந்தால் வரும்போது. இரு எண்ணும்மைகளுக்கு இடையே மற்றும் என்ற இடைச்சொல் வரக்கூடாது.

நூலகத்தில் அறம் சார்ந்த நூல்கள் மற்றும் புறம் சார்ந்த நூல்கள் உள்ளன.

என்று எழுதவேண்டும்.

வாழ்க தமிழ்..., வாழ்க வளமுடன்.

பாஸ்கர் துரை (பேச்சு) 16:55, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]
மற்றும் என்பதன் பயன்பாட்டுக்குச் சரியான இலக்கண ஆதாரத்தைத் தருகிறீர்களா? அவர்கள் அவன் மற்றும் அவளை அழைத்தனர் என்று கூறினால் இலக்கணப்படி சரியா? மன்னன் மந்திரி மற்றும் தளபதியை அழைத்தான் என்றெழுதுவது இலக்கணப்படி சரியா?--பாஹிம் (பேச்சு) 17:07, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ்..., வாழ்க வளமுடன்.

வணக்கம்.

அவர்கள், அவன் மற்றும் அவளை அழைத்தனர்.

(அவர்கள், அவனையும் அவளையும் அழைத்தனர். ) (மன்னன், தளபதியையும் மந்திரியையும் அழைத்தான்.)

என்று எழுதுவதே மிகச்சரியான இலக்கணப் பதமாகும்.

நான் மேலே குறிப்பிட்ட சொற்றொடரைச் சுவரில் ஒருவன் எழுதிக் கொண்டு இருக்கிறான். அதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மன்னன் -

எழுதும்போது பொருள் புரிகிறது. (பொருள் மயக்கம் இல்லை).

மன்னன் தளபதியையும்-

இரண்டாவது சொல்லை எழுதும்போதும் உங்களுக்குப் பொருள் புரியும். (இந்த இடத்தும் பொருள்மயக்கம் இல்லை. ஆனால், சொற்றொடர் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பது உங்களுக்கு புரியும்-இரண்டாம் வேற்றுமை பொருண்மைகள் ஏதோ வினைமுற்றாக வரும் என்பதையும் கூடுதலாக அறிந்துவிட இயலும்-சொல்லின் வினைமுற்று அறிய முயலும் என்றால் எத்தனை சிறப்பு)

மன்னன் தளபதியையும் மந்திரியையும்

-சொற்றொடர் தெளிவாக இருக்கின்றது. உங்களுக்குப் பொருள்மயக்கமும்  வரவில்லை. இன்னும் சொற்றொடர்  முற்றுப்பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்)

மன்னன் தளபதியையும் மந்திரியையும் அழைத்தான்.

-சொற்றொடரில் பொருள் முற்றுப்பெற்றது. சொற்றொடரின் பொருள் முழுமையும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஒருவன் எழுதிக் கொண்டு செல்லும்போது பொருள் மயக்கம் வராது சொற்கள் தொடருமானால் அதுவே நல்ல சொற்றொடர் ஆகும்.

அதுபோல நீங்கள் குறிப்பிட்ட சொற்றொடரை நோக்குவோம்.

மன்னன், தளபதி -

தொடரின் பொருள் புரிகிறது; சொல் தொடர்கிறது. இதுவரை பொருள்மயக்கம் இல்லை.

மன்னன் தளபதி மற்றும்-

பொருள் புரிகிறது சொற்கள் தொடர்கின்றன. பொருள் மயக்கம் ஏற்படுகிறது. எழுவாய் ஏற்கவிருக்கும் வினைமுற்று குறித்து அறிய முடியவில்லை.

மன்னன், தளபதி மற்றும் மந்திரியை

பொருள் புரிகிறது; சொற்றொடர் தொடர்கிறது. கடைசியாக வந்த வேற்றுமை உருபு , இறுதியாக என்ன பொருண்மையை உணர்த்தும் வினைமுற்று வரும் (இரண்டாம் வேற்றுமை அல்லாத பிற வேற்றுமைகள் வாரா) என்ற பொருள் மயக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

மன்னன், தளபதி மற்றும் மந்திரியை அழைத்தான்.

சொற்றொடரின் பொருண்மை முழுமையாகப் புரிகிறது.

மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களில்

மன்னன், தளபதியையும் மந்திரியையும் அழைத்தான்.

அவர்கள், அவனையும் அவளையும் அழைத்தார்கள்.

என்று எழுதுவதே பொருள்மயக்கம் தராத மிகச் சரியான சொற்றொடர் ஆகும்.

மேற்கண்ட சொற்றொடர்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

அவர்கள், அவன் மற்றும் அவளை அழைத்தனர். மன்னன், தளபதி மற்றும் மந்திரியை அழைத்தான்.

மேற்கண்ட சொற்றொடர்களுக்கு 100-ஐத் தவிர அதற்கும் கீழ் உள்ள எவ்வளவு மதிப்பெண் எவ்வளவு வேண்டும் என்றாலும் வழங்கிக் கொள்ளலாம்.

வாழ்க தமிழ், வாழ்க வளமுடன். வாழ்க தமிழ்.

பாஸ்கர் துரை (பேச்சு) 18:06, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

மன்னன், தளபதி மற்றும் மந்திரி-

என்று எழுதியதைத் தொடர்ந்து மந்திரி ஐ வேற்றுமை உருபு ஏற்கும் வரை அல்வழி தொடரா வேற்றுமை தொடரா என்பதை அறிய இயலாது. இதையே மயக்கம் என்று கூறினேன்.

வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்...

பாஸ்கர் துரை (பேச்சு) 18:13, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

நன்றி. உங்களுடைய கருத்துக்களைச் சேர்த்துப் பார்க்கும் போது மற்றும் என்ற சொல்லைக் கொண்டு சொற்களைப் புணர்த்துவதற்கு எந்த வித இலக்கண நியாயமும் இல்லையென்றே தெரிகிறது. நான் அதனை முற்றிலும் பிழையான பயன்பாடென்றே கருதுகிறேன். அதைக் கேட்கக் காரணம் பலரும் மற்றும் என்ற சொல்லைப் போட்டு எழுதிக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதே தெளிவில்லை. அதற்கு இலக்கண நியாயமும் கிடையவே கிடையாது. மற்றும் என்பது மற்றதும், முற்றுமுள்ளதும் என்பது போன்ற பொருளை மாத்திரம் தருவதாகவே கருதுகிறேன்.

அடுத்தது, நான் மேலே கேட்ட இரண்டாவது கேள்வி. இதற்கும் சரியான இலக்கண விளக்கம் தந்துதவுங்கள். கேள்வியை இங்கே மீண்டும் இடுகிறேன். "தாரும், செய்யும், வாரும் என்றவாறு ஏவல் வினை முடியலாம் என்பதை தெரியும். தரவும், செய்யவும், வரவும் என்றவாறு முடியுமா?"

மூன்றாவது கேள்வி. வாழ்க வளமுடன் என்று கூறுவதற்கு இலக்கண ஆதாரமுண்டா? வாழ்க வளத்துடன் என்று கூற வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 18:39, 29 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ், வாழ்க வளமுடன்...

மற்று-இடைச்சொல்

வேறு ஒன்று என்ற பொருளில் வரும்

மற்றவன் (மற்று +அவன்)

முன்னர்க் குறித்த ஒருவனை/அவனை விட்டுவிட்டு அவனோடு இருந்த வேறொருவனைக் குறித்து வரும்.

மற்றவள் (மற்று +அவள்) மற்றவர் (மற்று +அவர்) மற்றது ( மற்று +அது) மற்றவை (மாற்று+ அவை) மற்றொன்று (மற்று+ஒன்று).

மேலே குறிப்பிட்ட சொற்கள் எல்லாம்.... முன்னர் இருந்த பொருளையோ வேறுஏதேனும் ஒன்றையோ ***விட்டுவிட்டு*** வேறு ஒன்றைக் குறித்து வரும்.

மற்றும்.(மற்று+உம்) இச்சொல் மட்டும்.

முன்னர்க் குறித்த பொருளை ***விட்டுவிடாமல்*** அதனோடு தொடர்ந்து வரும் வேறுபொருளைக் குறித்து வரும். ஏனெனில் *உம் * என்னும் எல்லைகளைக் குறிக்கும் இடைச்சொல் உடன் இருப்பதனால். பாஸ்கர் துரை (பேச்சு) 01:52, 30 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க வளமுடன்..‌ வாழ்க தமிழ்...

வளம் அத்து உடன்..

மூன்று பதங்கள் மகர ஈற்றுப் புணர்ச்சி நூற்பா 219 குற்றியலுகரபுணர்ச்சி நூற்பா 164 மெய் ஈற்றுப் புணர்ச்சி நூற்பா 204 மேலும் ஒலிநயம் குறைவு. பொருள் புலப்பாடு சற்று தாமதம்

வளமுடன்

இரு பதங்கள் மெய் ஈற்றுப் புணர்ச்சி நூற்பா 204

ஒலி நயம் மிக்கது

பொருள் புலப்பாடு சற்று விரைவு

அதனால்தான் பாரதி

மனத்தில் உறுதி வேண்டும் என்று கூறாது

மனதில் உறுதி வேண்டும் என்று கூறினார்

சொல்லில் பொருள்மயக்கம் இருக்கும் இடத்து அத்துச் சாரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க தமிழ்.. வாழ்க வளமுடன்.

சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் தானே... தமிழின் பத்து வகை அழகுகளில் ஒன்று. பாஸ்கர் துரை (பேச்சு) 02:21, 30 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

என்னுடைய மற்ற இரு கேள்விகளுக்கும் விடையளிப்பீர்களா?--பாஹிம் (பேச்சு) 15:05, 30 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

வளம்+அத்து+உடன்..

மூன்று பதங்கள்+ மகர ஈற்றுப் புணர்ச்சி நூற்பா 219+ குற்றியலுகரபுணர்ச்சி நூற்பா 164+ மெய் ஈற்றுப் புணர்ச்சி நூற்பா 204 +மேலும் ஒலிநயம் குறைவு.

வளமுடன்

இரு பதங்கள்+ மெய் ஈற்றுப் புணர்ச்சி நூற்பா 204+ ஒலி நயம் மிக்கது .


அதனால்தான் பாரதி

மனத்தில் உறுதி வேண்டும் என்று கூறாது

மனதில் உறுதி வேண்டும் என்று கூறினார்

சொல்லில் பொருள்மயக்கம் இருக்கும் இடத்து அத்துச் சாரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க தமிழ்.. வாழ்க வளமுடன்.

சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் தானே... தமிழின் பத்து வகை அழகுகளில் ஒன்று பாஸ்கர் துரை (பேச்சு) 15:16, 30 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

ஏவல் வினை தொடர்பான கேள்விக்குப் பதில் தரவில்லையே, ஐயா.--பாஹிம் (பேச்சு) 18:19, 30 சூலை 2021 (UTC)Reply[பதில் அளி]

பயனர் பக்கம்[தொகு]

ஐயா வணக்கம் நீங்கள் பயனர் கணக்கை உருவாக்கிவிட்டு பயனர் பக்கத்தை உருவாக்காமல் தொகுத்துகிறீங்க. பயனர் பக்கம் துவங்கி தங்களைப் பற்றிய தரவு தந்தால் பிற பயனர்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம் பயனர் பக்கம் துவங்கவிக்கிப்பீடியா:பயனர் பக்கம்... பயனர்:சா அருணாசலம் 15:45 30 சூலை 2021 (utc)

வணக்கம் ஐயா, பயனர் பக்கத்தில் எவ்வாறு பதிவிடுவது என்று தெரியவில்லை. அதனால் தான், என்னைப் பற்றிய விவரங்கள் பதிவிடாமல் இருக்கிறேன்.

அறியுந்தோறும் அறியாமை கண்டற்றால்... பாஸ்கர் துரை (பேச்சு) 18:17, 1 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]

மிக எளிமை தான் நண்பரே
வழி -1
உங்களது பயனர் பக்கத்தின் (இந்தப் பக்கத்தின் மேலே) இடது புறத்தில் பயனர் பக்கம் என்று உள்ளதல்லவா அதனை சொடுக்கி உருவாக்கலாம்.
வழி -2
உங்களது பெயர் சிவப்பு வண்ணத்தில் தெரிகிறதல்லவா அதனைச் சொடுக்கிய உருவாக்கலாம். நன்றி ஸ்ரீ (✉) 22:42, 7 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]

பால் என்பது பெயர்ச்சொல் குடம் என்பது பெயர்ச்சொல்

இரு பெயர்ச் சொற்கள் தொடர்ந்து நிற்கும்போது பாலும் குடமும் என்ற பொருளை உணர்த்தி உம்மைத்தொகை ஆகிவிடும் ஆதலால் இஃது அல்வழிப் புணர்ச்சி ஆகிவிடும்

பால்க்குடம்- பாலை உடைய குடம் என வேற்றுமைப் புணர்ச்சி வழியில் பொருள் விரிந்து நிற்பதால் இஃது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும். பால்க்குடம் என்பதில் வல்லினம் மிகுதல் வேண்டும்.

யான் கூறியவற்றில் பிழை இருப்பின் எனக்குத் தெரியப்படுத்தவும்

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்... பாஸ்கர் துரை (பேச்சு) 16:24, 16 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

பால்க்குடம் தலைப்பு[தொகு]

வணக்கம் ஐயா. தெளிவுபடுத்தியதற்கு நன்றி. ஆனால் தலைப்பே தவறு தான். தலைப்பு மாற்றப்பட வேண்டிய கட்டுரை என்று பகுப்பு சேர்த்திருங்க. கட்டுரை என்பது நாம் தொகுப்பது, படிப்பது அதற்குள் இலக்கண விளக்கம் தேவையில்லை அதை நீக்கிவிடுங்கள் நன்றி சா அருணாசலம் (பேச்சு) செப்டம்பர் 16 2021 16:36

வணக்கம் ஐயா வாழ்க தமிழ்

வாழ்க வளமுடன்

தலைப்பு பகுதி எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.

தலைப்புப் பகுதி மாற்றும் வரை இந்த இலக்கணக்குறிப்பு இருக்கலாம் என்று கருதுகிறேன்.

இக்கட்டுரையை யாரேனும் வாசித்தால் கட்டுரையின் தலை போலிருக்கும் தலைப்பிற்கும் கட்டுரையின் உள்ளே இருக்கும் சொற்களுக்கும் இடையே உள்ள ஐயத்தை அவரால் தெளிவு செய்து கொள்ள இயலாது.

கட்டுரையில் இருக்கும் தலைப்புச் சொல் சரியா கட்டுரைக்குள் இருக்கும் சொல் சரியா என மயக்கம் ஏற்படும். கட்டுரையின் தலைப்பை மாற்றும் தன்மை உடையோர் அதைச் செய்தால் அந்த இலக்கணக்குறிப்பு பகுதியை எடுத்து விடலாம்.

பால்க்குடம் என்ற சொல்லை தேடும்போது குரோமில் நீங்கள் தேடுவது பால்குடம் என்று கேட்கிறது.

அந்தத் தலைப்பை எப்படி மாற்றுவது எனக்கு விளக்கம் தாருங்கள்.

வாழ்க வளமுடன்..

வாழ்க தமிழ் நன்றி.--பாஸ்கர் துரை (பேச்சு) 01:48, 17 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

இதையே பாற்குடம் என எழுத முடியுமா?--Kanags \உரையாடுக 02:36, 17 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் வாழ்க தமிழ்

வாழ்க வளமுடன்

பால்+குடம் = பால்க்குடம்/பாற்குடம் இதன் பொருள் வேற்றுமைப் புணர்ச்சியில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை (பாலை உடைய குடம்)

என்பதைப் பாற்குடம் என்று என்று எழுதுவதே மிகச் சரியான ஒலிப்பு நயம் உடைய நல்ல பதமாகும்.


  • பால்+காவடி =பால்க்காவடி/பாற்காவடி.

பாற்குழம்பு. பாற்சோறு. பாற்காரி. பாற்காரன் பாற்கும்பம். பாற்பசு பாற்குழந்தை. பாற்சுறா. பாற்பொங்கல்.

வாழ்க தமிழ் ‌... வாழ்க வளமுடன்


பாஸ்கர் துரை (பேச்சு) 03:16, 17 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ்..... வாழ்க வளமுடன்

வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் பாஸ்கர் துரை (பேச்சு) 03:22, 17 செப்டம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

பாற்குடம் எடுத்தல்[தொகு]

பால்க்குடம் எடுத்தல் பக்கம் சரியான தலைப்பிடப்பட்டுள்ளது பாற்குடம் எடுத்தல் பக்கத்தைக் கவனியுங்கள்--சா அருணாசலம் (பேச்சு) 10:48, 29 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

சிறு திருத்தங்கள்[தொகு]

தயவுசெய்து சிறு திருத்தங்கள் செய்யும்போது தொகுத்தல் சுருக்கத்தில் இஃது ஒரு சிறு தொகுப்பு என்பதைத் தெரிவுசெய்து சேமியுங்கள். காண்க: en:Help:Minor edit / உதவி:சிறு தொகுப்பு. பக்க மாற்றங்களைக் கவனித்தல் (en:Wikipedia:Patrols) போன்ற வேலைகளைச் செய்பவர்களுக்கு இது இலகுவாக இருக்கும். --AntanO (பேச்சு) 03:38, 4 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

ஆகட்டும் பாஸ்கர் துரை (பேச்சு) 04:09, 4 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

ஐயா ஆகட்டும் என்ற வார்த்தை வெரும் சொல்லாக மட்டுமில்லாமல் செயலாகவும் இருக்கட்டும். மேலும் கவனிக்க [1] நன்றி சா அருணாசலம் (பேச்சு) 03:17, 7 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
ஐயா வணக்கம் நீங்கள் சிறுதொகுப்பு செய்துவருவது மகிழ்ச்சி வாழ்த்துகள். உங்களுடைய தொகுப்பு எல்லாம் சிறுதொகுப்பு என்பதால் நீங்கள் சிறுதொகுப்பு செய்த பிறகு (மாற்றங்களைப் பதிப்பிடுக) என்றிருக்கும் அதற்கு நேர் மேலாக (இது ஒரு சிறு தொகுப்பு) என்றிருக்கும். (இடப்பக்கம்). அதை ஒருமுறை தொட்டு மாற்றங்களை பதிப்பிடுங்கள் நன்றி - - சா அருணாசலம் (பேச்சு) 22:19, 4 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

இனி மிகச்சரியாகக் கடைபிடிக்கிறேன் பாஸ்கர் துரை (பேச்சு) 22:28, 4 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

ஐயா தமிழ் ஆசிரியர் அவர்களே, ஊதியூர் மற்றும் இந்திய சமயங்கள் கட்டுரைகள் என்னால் மற்றும் சிலரால் மொழிபெயர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. தயவு செய்து, எழுத்துப்பிழை, இலக்கணப் பிழைகளைச் சரிபார்த்து, உரையைத் திருத்தவும். அனைத்து மேற்கோள்கள் மற்றும் உள்ளடக்கம் சரிபார்க்கப்பட்டது. தயவுசெய்து சிறிது நேரம் செலவிட்டு கட்டுரையில் மட்டும் பிழைகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும். Tamil098 (பேச்சு) 13:19, 7 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ்... என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன் பாஸ்கர் துரை (பேச்சு) 02:44, 8 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி ஐயா. Tamil098 (பேச்சு) 07:49, 8 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வாழ்க தமிழ் பாஸ்கர் துரை (பேச்சு) 13:38, 8 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

sir.. கௌமாரம் is translated some time ago.. please improve the article. content is ok. but not translated properly. please edit it. Usermade (பேச்சு) 16:52, 8 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம்... எனக்குச் சில முதன்மையான பணிகள் இருப்பதனால் நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன் பாஸ்கர் துரை (பேச்சு) 07:41, 10 நவம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

உங்கள் கவனத்திற்கு (இது ஒரு சிறு தொகுப்பு)[தொகு]

ஐயா வணக்கம் நீங்கள் சிறுதொகுப்பு செய்துவருவது மகிழ்ச்சி வாழ்த்துகள். உங்களுடைய தொகுப்பு எல்லாம் சிறுதொகுப்பு என்பதால் நீங்கள் சிறுதொகுப்பு செய்த பிறகு (மாற்றங்களைப் பதிப்பிடுக) என்றிருக்கும் அதற்கு நேர் மேலாக (இது ஒரு சிறு தொகுப்பு) என்றிருக்கும். (இடப்பக்கம்). அதை ஒருமுறை தொட்டு மாற்றங்களைப் பதிப்பிடுங்கள் நன்றி--சா அருணாசலம் (பேச்சு) 22:29, 4 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

எழுத்து[தொகு]

  • எழுத்துக்கள் - பண்டைய உரையாசிரியர்கள் ஒற்று மிக்கு எழுதினர்
  • எழுத்துகள் - இக்காலத்தில் ஒற்று மிகாமல் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் இவற்றை விட்டுவிடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:01, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

வாத்துகள் வாத்துக்கள் கொக்குகள் கொக்குக்கள் நாக்குகள் நாக்குக்கள் பாக்குகள். பாக்குக்கள் கொத்துகள் கொத்துக்கள்

உங்கள் இலக்கண புலமைக்கு விட்டு விடுகிறேன்.

வாழ்க தமிழ்.... பாஸ்கர் துரை (பேச்சு) 19:50, 2 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

தமிழ்... எழுத்துகள் என்பதில் இருக்கும் ஒலிப்பு நயம்... எழுத்துக்கள் என்பதில் இல்லை.

தமிழ்...

தனித்தனிச் சொல்லில் இன்பம்

    தளை படத் தொடரில் இன்பம்

.... கேட்டிடில் காதிற்கு இன்பம்

   கிளந்திடில் நாவிற்கு இன்பம்.... 
பாஸ்கர் துரை (பேச்சு) 19:57, 2 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

அஃறிணை - இரண்டாம் வேற்றுமைத் தொகை[தொகு]

எழுத்துக் கற்பிக்கும் போது - இதில் எழுத்து என்பது அஃறிணை - எழுத்தைக் கற்பித்தான் என்று பொருள் தருவதால் இரண்டாம் வேற்றுமைத் தொகை. - ஒற்று மிகாது.

உயர்திணை - இரண்டாம் வேற்றுமைத் தொகை[தொகு]

ஒற்று மிகும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (திருக்குறள்)
அகழ்வாரைத் தாங்கும் - இரண்டாம் வேற்றுமை விரி
இகழ்வார்ப் பொறுத்தல் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
இவை இலக்கியம் காட்டும் மரபு
தொல்காப்பியம், நன்னூல் இரண்டும் இவற்றைக் குறிப்பிடுகின்றன.
வரையறுக்கவில்லை
பண்டைய இலக்கியங்களில் எல்லா இடங்கிலும் இந்த மரபு பின்பற்றப்பட்டுள்ளதைக் கண்டுகொள்க. --Sengai Podhuvan (பேச்சு) 01:23, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம். ஏற்றுக்கொள்கிறேன்... ஒன்னார்ச் செகுத்தல்... எனச் செய்யுள் அடிகளில் இடம் பெறுவதைக் கூறலாம். அது செய்யுள் வழக்கு. உலக வழக்கன்று. நிலைமொழி உயர்திணை ஆக இருக்கும் பட்சத்தில் இவ்வாறு வருவது உண்டு. தங்களின் இலக்கணத் தேடல் நுட்பத்தைப் போற்றுகிறேன் பாஸ்கர் துரை (பேச்சு) 18:57, 2 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

இகழ்வார் பொறுத்தல் ... என இடம்பெருமாயின் அல்வழிப் புணர்ச்சி கீழ் எழுவாய் வேற்றுமையாக அமைந்து இகழ்பவரே பொறுத்தல் என்ற வினையைச் செய்பவர் ஆகிவிடுவார். அவ்விடத்தில் நிகழும் பொருண்மை மயக்கத்தை நீக்கவே.

இரண்டாம் வேற்றுமைத்

தொகையின் கண் ஒற்று மிகுந்து இகழ்வார் என்ற சொல்லைச் செயப்படுபொருளாக்கிப் பொறுத்தல் என்ற வினையை வேறொரு எழுவாய்க்குக் (தன்மை) கொண்டு சேர்க்கிறது!.

தன்மை இகழ்வார் பொறுத்தல் - தன்னைத்தானே திட்டிக் கொள்பவரைப் பொறுத்துக் கொள்ளுதல். அதாவது பைத்தியம் போல் தன்னைத் தானே திட்டிக் கொண்டு திரியும் நிலையைத் சகித்துக் கொண்டு இருத்தல். இச்சொற்றொடரில் எழுவாய் தோன்றா எழுவாயாக இருக்கும்

தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் - தன்னை இகழ்வோரைப் பொறுத்தல். ஒற்று வருவதால் இகழ்வார் என்ற சொல் செயப்படுபொருள் தந்து பொருள் மயக்கத்தை நீக்கி வைக்கிறது.

ஒன்னார் செகுத்தல் -பகைவர் அழித்தல் இப் பொருண்மையில் ... இந்த இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று வராத காரணத்தினால் இந்த இடத்தில் பகைவர் அழித்தார்கள் (அ) பகைவரை அழித்தார்கள் இருவேறு பொருள்கள் இந்தப் பொருள் மயக்கத்தை நீக்குவதற்காகவே இந்த இடத்தில் ஒற்று மிகுந்து இருக்கிறது. இரண்டாம் வேற்றுமை தொகையில் பொறு மயக்கம் தோன்றாத இடத்தில் ஒற்று மிகுதல் கூடாது .

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் பொருள் மயக்கம் தோன்றாத இடத்து ஒற்று மிகுதல் கூடாது. எழுவாய் உயர்திணையாக இருந்து பொருள் மயக்கம் தோன்றுமானால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

வாழ்க தமிழ்.... பாஸ்கர் துரை (பேச்சு) 19:39, 2 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]