சமவெளி
சமவெளி (Plain) என்ற புவியியல் சொற்பதமானது, சமமான நிலப்பகுதியைக் குறிக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயர வேறுபாடு இல்லாமலும், பெரும்பாலும் மலைகள், கடல்களின் தொடக்க நிலப்பகுதிகளாகவும் இவை காணப்படுகின்றன. அவ்வாறு நிலப்பகுதிகள் , மலைப்பள்ளத்தாக்குகளாவும், பீடபூமிகளாகவும், உயர்நிலங்களாகவும் (high/up lands - கடல்மட்ட அளவு = 500-600 மீட்டர் உயரத்தில்) நிலவுகின்றன.[1] இ்ப்புவியின் மூன்றில் ஒரு பகுதி, சமவெளிப்பகுதிகளாக அமைந்துள்ளது.[2] ஒரு சமவெளியானது, அந்நிலத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இருக்கும் வலிமையான இயற்கைக் காரணிகளான, நீர், காற்று, பனி, அரிப்பு போன்றதொன்றால் உருவாகின்றது. அவ்வாறு உருவாகும் போது அதிக புல்களைக் கொண்ட நிலமாக அமைந்து, அவற்றின் தன்மைகளால் வேறுபட்டு திகழ்கின்றன.[3] இதனால் கால்நடை வளர்ப்பும், அதனைச் சார்ந்து வேளாண்மையும், சிறப்பாகச் செய்யத்தக்க, புவியிடமாக விளங்க்குகின்றன.[4]
சமவெளி வகைகள்
[தொகு]சமவெளிகளை, அவைகளின் தோற்ற அடிப்படையில், மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. அமைப்புச் சமவெளிகள் (Structural plains) :உலகின் பெரும்பான்மையான தாழ்நிலப்பகுதி, இத்தகைய சமவெளிகளைக் கொண்டு திகழ்கின்றன.[6]
2. அரிப்புச் சமவெளிகள் (Erosional plains) :ஓடும் நீர், ஆற்று வெள்ளம், நகரும் பனி போன்றவற்றால், நிலத்தின் மேற்பகுதி அரிக்கப்பட்டு, தலைச்சமவெளிகள்(peneplains) [7] முதலில் தோன்றுகின்றன. பின்னர் இவை தொடர் மண் அரிப்புகளால், உயிரினங்கள் வாழத்தகுந்த சமவெளிகளாக மாறுகின்றன.
3. படிவுச் சமவெளிகள் (Depositional plains) : அரிப்புச் சமவெளிகளின் காரணிகளான, காற்று, பனி, வெள்ளம் , கடல் அலை போன்றவைகள் பலவகையான இயற்கைப் பொருட்களை அது படியும் மண்ணில் படியச் செய்கின்றன. இவை தொடர்ந்து ஒன்றன் மீது ஒன்று படிவதால், அக்குறிப்பிட்ட மண் பெருமளவில் அதிகரித்துப் படிவுச்சமவெளிகள் தோன்றுகின்றன. இதனால் முன்பு இருந்ததை விட, வளமான மண் அடுக்குகள் தோன்றுகின்றன.[8]
3.1. வண்டல் சமவெளிகள் (Alluvial plains) : புதுவெள்ளம் கொண்டு வரும் நீரானது, ஏராளமான மண், நுண்ணுயிரிகள் போன்ற வளங்களைத் தன்னகத்தே கொண்டு வந்து படியச் செய்கின்றன. அவை படியச் செய்யும் சமவெளிகள், வண்டல் சமவெளிகள் எனலாம்.[9] இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஏரி வண்டல் சமவெளி(Lacustrine plain)[10], பாறைக்குழம்புச் சமவெளி(Lava plain)[11], ஆறுகள் வளைந்து வளைந்து ஓடுவதால் ஏற்படும் வளைவுச் சமவெளி (Scroll plain) முதலியவைகளை முக்கிய எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
3.2. பனிச் சமவெளிகள்(Glacial plains) : பனிக்கட்டிகளாலும், அவற்றின் நகர்தலாலும் தோன்றுகின்றன. இந்த வகை பனிச்சமவெளிகளில், பல வகைகள் உள்ளன. இதில் பனியாற்று நகர்வு படிவுச் சமவெளி(Outwash plain) முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உலகின் முக்கிய சமவெளிகள்
[தொகு]ஆப்பிரிக்கச் சமவெளிகள்
[தொகு]ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல இடங்கள், பகல் பொழுது வெப்ப மிகுதியாகவும், இரவில் குளிர் மிகுதியாகவும் காணப்பட்டு வாழ்வியில் சூழ்நிலைகள் கடுமையாக இருக்கின்றன. தட்ப வெப்ப நிலைகள் இவ்வாறு வேறுபடுவதால், உயிரியல் வளங்களும் வேறுபட்டு காணப்படுகின்றன. சிங்கம், யானை போன்ற வன்விலங்குகள், சமவெளிப் பகுதிகளில் ஆதிக்கம் மிக்கதாகக் காணப்படுகின்றன. உலகின் பத்து இயற்கை அதிசயங்களில் ஒன்றான சிருங்கதி இடப்பெயர்வு, இங்குள்ள சமவெளிப்பகுதிகளில் நடைபெறுகிறது. ஆப்பிரிக்கச் சமவெளிகளில் பல பகுதிகளும், வாழிடங்களும் கட்டமைக்கப் பட்டுள்ளன. கிழக்கு ஆபிரிக்காவில் ஆப்பிரிக்க எருமைகளும், தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களும், ரூத்செல்டு ஒட்டகச்சிவிங்கியும், ஆப்பிரிக்கச் சிறுமான்களும், தொம்சன் சிறுமான்களும், ஆழமில்லாக் கடல்களில் மாகேம்களும் கொண்டு வேறுபட்டு காணப்படுகின்றன.[12] தென்னாப்பிரிக்காச் சமவெளிகளில் மாசாய் ஒட்டகச்சிவிங்கிகளும், சாப்லி மான்வகைகளும்,(Sable antelope) தீக்கோழிகளும் பெருமளவில் காணப்படுகின்றன.[13] நடு ஆப்பிரிக்காவில் பின்வெளிர்சிவப்புப் பெலிகன் பறவைகளும் (Pink-backed pelican), தட்டைக்கால் நாரைகளும், ரூபெல் பிணந்தின்னிக் கழுகுகளும் அதிக எண்ணிக்கையில், சமவெளி வாழிடங்களைக் கொண்டுள்ளன.
ஆசிய சமவெளிகள்
[தொகு]- தென்மேற்கு ஆசியா சமவெளிகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பனவற்றை கீழே காணலாம்.
- நைனிவேச் சமவெளி (Nineveh Plains) ஈராக்கிய குர்திஸ்தான்
- கூசிசுதான் சமவெளி (Khuzestan Plain) ஈரான்
- முகன் சமவெளி (Mugan Plain), ஈரான், அசர்பைஜான்
- அல்-காஃபுச் சமவெளி (Al-Ghab Plain) சிரியா
- அலிப்போ பீடபூமி (Aleppo plateau), சிரியா
- இசுரேலியக் கடற்கரைச் சமவெளி (Israeli coastal Plain) இசுரேல்
- சிராகிச் சமவெளி (Shiraki Plain) சியார்சியா
- ஆரத்துச் சமவெளி (Ararat Plain) துருக்கி , ஆர்மீனியா
- தெற்கு ஆசியா சமவெளிகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பனவற்றை கீழே காணலாம்.
- புயிகில் சமவெளி (Bhuikhel), நேபாளம்.
- தெராய் சமவெளி, நேபாளம்.
- சிந்து-கங்கைச் சமவெளி , இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான்.
- கிழக்காசியா சமவெளிகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பனவற்றை கீழே காணலாம்.
- மேற்கு சைபீரியச் சமவெளி, உருசியா
- கான்டோச் சமவெளி (Kantō Plain) யப்பான்
- நொய்பீச் சமவெளி (Nōbi Plain), யப்பான்.
- ஒசாகாச் சமவெளி (Osaka Plain), யப்பான்.
- சாரோபிட்சுச் சமவெளி (Sarobetsu Plain), யப்பான்.
- வட சீனச் சமவெளி (North China Plain) சீனா
- சியானன் சமவெளி (Chianan Plain) சீனக் குடியரசு
- பிங்டுங்குச் சமவெளி (Pingtung Plain), தைவான்.
- யெய்லன் சமவெளி (Yilan Plain) (தைவான்)
- டெப்சேங்குச் சமவெளி (Depsang Plains) சீனா
- கேடூச் சமவெளி (Kedu Plain) இந்தோனேசியா
- கேவூச் சமவெளி (Kewu Plain) (இந்தோனேசியா)
- மால்லிக்குச் சமவெளி (Mallig Plains) பிலிப்பீன்சு
- இந்திய சமவெளிகளில் முக்கியமானது, இந்திய கடற்கரைச் சமவெளிகள் ஆகும். கிழக்குக் கடற்கரைச் சமவெளிகளும், மேற்குக் கடற்கரைச் சமவெளிகளும் இந்திய கடற்கரைச் சமவெளிகளில் அடங்குகின்றன. மேற்குக் கடற்கரைச் சமவெளிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. வடக்கில் உள்ள கொங்கன் பகுதி, 2. நடுவில் உள்ள கனராப் பகுதி, 3. தெற்கில் உள்ள கேரளா பகுதி[14] என அழைக்கப்படுகிறது. கிழக்குக் கடற்கரைச் சமவெளியினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை, 1. தமிழ்நாடு கடற்கரைச் சமவெளி, 2. ஆந்திரக் கடற்கரைச் சமவெளி, 3. உத்கல் கடற்கரைச் சமவெளி என அழைக்கப் படுகின்றன. தமிழகக் கடற்கரைச் சமவெளியானது, ஏறத்தாழ நூறு சதுர கிலோமீட்டர்கள் கொண்டதாக உள்ளது. மொத்தத் தமிழக கடற்கரைப் பகுதி (1,076 கி. மீ)[15] யில், இது பத்து சதவீதம் எனலாம்.
ஐரோப்பிய சமவெளிகள்
[தொகு]ஐரோப்பிய நில அமைவுகளில் மிகப்பெரியதாக இருக்கக்கூடியவைகளில், இப்பெருஞ்சமவெளியும் ஒன்று.[17] இதன் தொடக்கம், 491 கிலோமீட்டர் நீளமுள்ள பனி சூழ்ந்த பிரனீசு மலைத்தொடரிலிருந்து, மேற்கில் பிரான்சு கடற்கரைப் பகுதியான பிஸ்கே விரிகுடா வரையும், கிழக்கில் இரசியாவின் உரால் மலைகள் வரையும் அமைந்துள்ளது.[18] வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளான நோர்டிக் நாடுகள், நோர்வே, சுவீடன், சுவல்பார்டு, வடக்கு இங்கிலாந்து, போலந்து, டென்மார்க், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, வட பிரான்சு செக் குடியரசு ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க நாடுகளில், இச்சமவெளி அமைந்துள்ளது. இதன் குறுகிய பகுதி ஏறத்தாழ 320 கி.மீட்டர்களாகவும், அகன்ற பகுதி ஏறத்தாழ 3200 கி.மீட்டர்கள் கொண்டதாகவும் விளங்குகின்றன. மேலும், கடல் மட்டத்தில் இருந்து, 450 மீட்டர்களல் அமைந்துள்ளது. மிகவும் குளிர்ச்சியும், வெதுவெதுப்பான கோடைகாலமும் கொண்ட தட்ப வெப்பத்தைக் கொண்டிருக்கிறது. பல நாடுகளிலும் ஓடும், லுவார் ஆறு, ரைன் ஆறு, விசுத்துலா(Vistula) ஆகிய முதன்மை ஆறுகளால், இந்த பெருஞ்சமவெளி பிரிக்கப்பட்டுள்ளது. இச்சமவெளி தவிர, சிறிய அளவிலான சமவெளிகளும் உள்ளன. அனைத்து ஐரோப்பிய சமவெளிகளிலும், அகன்ற இலைக் கொண்ட மரங்கள் அதிகமாகவும், பிற கலப்பின வன வளங்களையும் கொண்டு, ஒரு நிலையான உயிரினம் வாழும் பகுதிகளாத் திகழ்கின்றன.
அமெரிக்கச் சமவெளிகள்
[தொகு]அமெரிக்கச் சமவெளிகள், அமெரிக்காக்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் வளம் செழித்து காணப்படுபவைகளின் பெயர்களும், அச்சமவெளி அமைந்துள்ள நாடுகளின் பெயர்களும், கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அ) வட அமெரிக்காவில் உள்ள, கீழ்கண்ட சமவெளிகள் குறிப்பிடத்தக்கவையாகக் கருதப் படுகின்றன.
- உயர் சமவெளி (Great Plains) அமெரிக்க ஐக்கிய நாடு ; கனடா : 4,300 கிமீ நீளமுள்ள கனட நாட்டின் ராக்கி மலைத்தொடர் தொடங்கி, தெற்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நடுப்பகுதி முழுவதும் பரந்துள்ள மிகப்பெரிய சமவெளியாகும்.
- உட்சமவெளிகள் (Interior Plains – United States and Canada)
- அட்லாண்டிக் கடற்கரைச் சமவெளி (Atlantic coastal plain) அமெரிக்க ஐக்கிய நாடு.
- வளைகுடா கடற்கரைச் சமவெளி (Gulf Coastal Plain), அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ.
- கரிசோச் சமவெளி (Carrizo Plain) கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு.
- உயரேரி தாழ்நிலச் சமவெளி (Lake Superior Lowland) விஸ்கொன்சின், அமெரிக்க ஐக்கிய நாடு.
- லாராமிச் சமவெளி (Laramie Plains) வயோமிங்.
- மிசிசிபி வண்டல் சமவெளி (Mississippi Alluvial Plain]] மிசிசிப்பி.
- ஆக்சுநாடு சமவெளி (Oxnard Plain]] Ventura County, கலிபோர்னியா.
- பாம்பாற்றுச் சமவெளி (Snake River Plain) ஐடஹோ
ஆ) நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், கீழ்கண்ட சமவெளிகள் முக்கியமானவைகள் ஆகும்.
- காரேனிச் சமவெளி (Caroni Plain]] டிரினிடாட் மற்றும் டொபாகோ.
- லாசு லோனாசுச் சமவெளி (Los Llanos (தென் அமெரிக்கா) வெனிசுவேலா, கொலம்பியா.
- பேம்பசு சமவெளி (Pampas)அர்கெந்தீனா, உருகுவை, பிரேசில்.
- வெனிசுவேலாச் சமவெளி (Venezuelan Llanos]] வெனிசுவேலா.
ஓசியானியாச் சமவெளிகள்
[தொகு]ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். இச்சொல்லானாது, பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[19][20][21]. இவற்றில் முக்கியமானது ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் சமவெளிகள் ஆகும்.
- ஆத்திரேலியாவில் போகோங்குச் சமவெளி(Bogong High Plains), சிட்னியில் காணப்படும் கும்பர்லாந்துச் சமவெளி (Cumberland Plain), மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் எசுபிரேன்சுச் சமவெளிகள்(Esperance Plains), ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் உள்ள மொலாங்லோச்(Molonglo) சமவெளி, பேர்த்தில் உள்ள அன்னக்கடற்கரைச்(Swan Coastal) சமவெளி ஆகியன, அந்நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இடங்களாகத் திகழ்கின்றன.
- நியூசிலாந்தில் அமைந்துள்ள அவாருவாச்(Awarua) சமவெளி சௌத்துலாந்திலும், கான்டெர்பர்ரி சமவெளியும், ஒடாகோப் பகுதியில் காணப்படும் அவுராக்கிச்(Hauraki) சமவெளியும், மனியோடோடோ (Maniototo) சமவெளியும், தையிரிச்(Taieri) சமவெளியும், அந்நாட்டின் முக்கிய சமவெளிகள் ஆகும்.
காட்சியகம்
[தொகு]-
தென்னாப்பிரிக்காவின் தொல்லியற்களமான மலாபாப் பகுதி, 2011
-
பாலைவனச் சமவெளி, இசுரேல், 2010
-
கடற்கரைச் சமவெளி, புளோரிடா, 2015
-
ஆராத் பெருமலைச் சமவெளி, ஆர்மீனியா,
-
பனியாற்றுச் சமவெளி நகரம், ஆர்மீனியா
-
காக்கேசியா-ஐரோப்பாவும், ஆசியாவும் சந்திக்கும் பகுதி
-
வெள்ளச் சமவெளி, மங்கோலியா, 2014
-
சமவெளி நகரமைப்பு, தைவான், 2011
-
இங்கிலாந்து, 2008
-
சுவீடன், 2013
-
வெனிசுவேலா, 2007
-
வெள்ளச் சமவெளி, யப்பான், 2012
-
அன்னப்பூர்னா பனிச்சமவெளி, நேபாளம், 2018
-
மலபார் கடற்கரை, கேரளம் ~1630
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rood, Stewart B.; Pan, Jason; Gill, Karen M.; Franks, Carmen G.; Samuelson, Glenda M.; Shepherd, Anita (2008-02-01). "Declining summer flows of Rocky Mountain rivers: Changing seasonal hydrology and probable impacts on floodplain forests". Journal of Hydrology 349 (3–4): 397–410. doi:10.1016/j.jhydrol.2007.11.012. http://www.sciencedirect.com/science/article/pii/S0022169407006920.
- ↑ Geoff C. Brown; C. J. Hawkesworth; R. C. L. Wilson (1992). Understanding the Earth (2nd ed.). Cambridge University Press. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-42740-1. Archived from the original on 2016-06-03.
- ↑ Gornitz, Vivien (ed.). 2009. Encyclopedia of Paleoclimatology And Ancient Environments. Springer: Dordrecht, p. 665.
- ↑ Powell, W. Gabe. 2009. Identifying Land Use/Land Cover (LULC) Using National Agriculture Imagery Program (NAIP) Data as a Hydrologic Model Input for Local Flood Plain Management. Applied Research Project, Texas State University.
- ↑ Ritter, Dale F., R. Craig Kochel, & Jerry Russell Miller. 1995. Process geomorphology. Dubuque, IA: Wm C. Brown, p. 349.
- ↑ "Pediplain". Encyclopedia Britannica.
- ↑ Migoń, Piotr (2004). "Planation surface". Encyclopedia of Geomorphology. 788–792.
- ↑ Jones, David K.C. (2004). "Denudation chronology". Encyclopedia of Geomorphology. 244–248.
- ↑ "Glossary of Landform and Geologic Terms". National Soil Survey Handbook—Part 629. National Cooperative Soil Survey. April 2013. Archived from the original (PDF) on 22 October 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ United States. Department of Conservation. Division of Geology. Glacial Sluceways and Lacustrine Plains of Southern Indiana. By William D. Thornburry. Bloomington: n.p., 1950. Web. <"Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)>. - ↑ "Lava Plateaus". Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
- ↑ "Wild Animal Park Exhibit: Asia and Africa Field Exhibits". sandiegozoo.org. Zoological Society of San Diego. Archived from the original on 24 August 2006.
- ↑ "Wild Animal Park Exhibit: Journey into Africa Tour". sandiegozoo.org. Zoological Society of San Diego. Archived from the original on 24 August 2007.
- ↑ "Kerala. Encyclopædia Britannica". Encyclopædia Britannica Online. 26 மே 2018.
- ↑ "Cape Comorin". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
- ↑ https://www.britannica.com/place/European-Plain
- ↑ Geographical depiction of Europe Encyclopædia Britannica
- ↑ "European Plain". Encyclopædia Britannica. britannica.com. 10 January 2010. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2018.
- ↑ "கனடா - உலகம் - கண்டங்கள் - நிலவரை". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2018-05-26.
- ↑ "கண்டங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள்" (PDF). Archived from the original (PDF) on 2002-02-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "என்கார்ட்டா மெக்சிக்கோ "ஓசியானியா"". Archived from the original on 2009-11-01. பார்க்கப்பட்ட நாள் 2018-05-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)