தீக்கோழி
தீக்கோழி புதைப்படிவ காலம்:Pleistocene–present Pleistocene to Recent | |
---|---|
![]() | |
male (left) and female ostriches | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
துணைத்தொகுதி: | முள்ளந்தண்டுளி |
வகுப்பு: | பறவை |
பெருவரிசை: | Paleognathae |
வரிசை: | Struthioniformes |
குடும்பம்: | Struthionidae |
பேரினம்: | Struthio |
இனம்: | S. camelus |
இருசொற் பெயரீடு | |
Struthio camelus கரோலஸ் லின்னேயஸ், 1758[2] | |
துணையினம் | |
S. c. australus Gurney, 1868[2] | |
![]() | |
Distribution |
தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி (Ostrich, Struthio camelus) வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது.
இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்காலத்திலும் அறிந்தவரை மிகப்பெரிய பறவையான, இன்று அழிந்துபோன எபியோர்னிக்ஸ் (Aepyornis) என்பவையாகும். தீக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை.[3]
தீக்கோழிகள் இயற்கையில், ஆபிரிக்காவின் பூமத்திய ரேகைக் காட்டு வலயங்களில், வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளிலுமுள்ள சவான்னாக்கள், அரைப் பாலைவனங்களில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு இனமான எஸ். சி. சிரியாக்கஸ் இப்பொழுது அழிந்துவிட்டது.
தீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காக உபயோகப்பட்டு வந்தன. சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். இதனால் வட ஆபிரிக்காமற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன.
சுவீடன் போன்ற குளிர்ப் பிரதேசங்களிற் கூட இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இறைச்சி கொழுப்பற்ற மாட்டிறைச்சி போன்ற சுவை கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.
ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது. இத்தகைய நடைமுறையைக் காட்டும் அவதானிப்புப் பதிவுகள் எதுவும் இல்லையெனினும், எதிரி விலங்குகள் அண்மையிலுள்ளபோது, தான் தெளிவாகக் காணப்படாமலிருப்பதற்காகத், தீக்கோழி, தனது கழுத்தையும், தலையையும் நிலத்தில், படுக்கை நிலையில், வைத்துக்கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்துக் கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது.
தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது.
தீக்கோழிகளில் கூட்டுக் கூடமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. பல பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன. தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும்.
உசாத்துணை[தொகு]
- ↑ "Struthio camelus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 3.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 17 Feb 2011. BirdLife International (2012). "Ostrich Struthio camelus – BirdLife Species Factsheet". Data Zone. பார்த்த நாள் 17 Feb 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;SN
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Davies
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை