ஆப்பிரிக்கச் சிறுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆப்பிரிக்கச் சிறுமான்
Serengeti Impala3.jpg
ஓர் இள ஆண் ஆப்பிரிக்கச் சிறுமான்-தான்சானியாவின் செரங்கெட்டியில்.
Female impala.jpg
பெண் ஆப்பிரிக்கச் சிறுமான்-தான்சானியாவின் மிக்குமி தேசியப் பூங்காவில்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Aepycerotinae
John Edward Gray, 1872
பேரினம்: Aepyceros
Sundevall, 1847
இனம்: A. melampus
இருசொற் பெயரீடு
Aepyceros melampus
(Lichtenstein, 1812)
துணையினம்
Impala.png
சிறுநவ்விகளின் பரவல்
சிவப்பு =A. m. melampus
நீலம் = A. m. petersi

ஆப்பிரிக்கச் சிறுமான் அல்லது இம்பாலா (Impala) என்பது நடுத்தர அளவுள்ள ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் இரலை மானினம். இம்பாலா என்ற பெயர் சுலு மொழியில் இருந்து பெறப்பட்டது. இது ஆபிரிக்காவில் உள்ள புல்நிலங்களிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது.

தோற்றம்[தொகு]

நன்கு வளர்ந்த ஓர் ஆண் சிறுநவ்வி-மிக்குமி தேசியப்பூங்கா, தன்சானியா

இதன் உயரம் 75 செ. மீ. முதல் 95 செ. மீ. வரை இருக்கலாம். ஆண் சிறுநவ்வி 40 முதல் 80 கிலோ எடை வரையும் பெட்டைகள் 30 முதல் 50 கிலோ எடை வரையும் இருக்கும். பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து 'M' போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்குக் கொம்புகள் உண்டு. 90 செ. மீ. நீளம் வரை வளரும். பெட்டைகளுக்குக் கொம்புகள் கிடையாது. ஆபிரிக்காவில் மிகச்சில இடங்களில் காணப்படும் கறுப்புச் சிறுநவ்வி மிகவும் அரியது.

இயல்பு[தொகு]

குதித்துத் தாவும் சிறுநவ்வியொன்று

வறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும்.

மிரண்ட நிலையில் சிறுநவ்விகள் தாவிக்குதித்துச் சென்று கொன்றுண்ணிகளைக் குழப்பமடையச் செய்கின்றன. இவற்றால் பத்து மீட்டர் நீளம் வரையும் 3 மீட்டர் உயரம் வரையும் குதித்துத் தாவிச் செல்ல இயலும். மேலும் இவற்றைக் கொல்லும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவற்றால் மணிக்கு 90 கி. மீ. கதியில் ஓட இயலும்.


சிறுத்தைகள், சிங்கங்கள், காட்டு நாய்கள் முதலிய விலங்குகள் சிறுநவ்விகளை இரையாகக் கொள்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aepyceros melampus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் Version 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of least concern