பிரனீசு மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரனீசு மலைத்தொடர்
எசுப்பானியம்: Pirineos
பிரெஞ்சு: Pyrénées
மத்திய பிரனீசு
மிக உயர்ந்த புள்ளி
கொடுமுடி அனெட்டோ
உயரம் 3,404 மீ (11 அடி)
ஆள்கூறுகள் 42°37′56″N 00°39′28″E / 42.63222°N 0.65778°E / 42.63222; 0.65778
Dimensions
நீளம் 491 கிமீ (305 மைல்)
பெயரிடல்
பெயர்க்காரணம் பைரீன்
புவியியல்
Pyrenees topographic map-en.svg
இடக்கிடப்பு நிலப்படம்
நாடுகள் பிரான்சு, எசுப்பானியா and அந்தோரா
தொடரின் ஆள்கூறுகள் 42°40′N 1°00′E / 42.67°N 1°E / 42.67; 1ஆள்கூற்று: 42°40′N 1°00′E / 42.67°N 1°E / 42.67; 1
நிலவியல்
காலப்பகுதி 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
பாறை வகை கிரானைட், சுண்ணங்கல்

பிரனீசு (Pyrenees, /ˈpɪrɪnz/; எசுப்பானியம்: Pirineos அல்லது Pirineo, பிரெஞ்சு: Pyrénées) ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் மலைத் தொடர் ஆகும். இது பிரான்சுக்கும் எசுப்பானியாவிற்குமான இயற்கை எல்லையாக விளங்குகிறது. இது ஐபீரிய மூவலந்தீவை ஏனைய ஐரோப்பாவிலிருந்து பிரிக்கின்றது. பிஸ்கே விரிகுடாவிலிருந்து (இகுவர் முனை) நடுநிலக் கடல் (கேப் டெ கிரெயசு) வரை ஏறத்தாழ 491 km (305 mi) தொலைவிற்கு நீண்டுள்ளது.

இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி பிரான்சிற்கும் எசுப்பானியாவிற்குமான எல்லையாக விளங்குகிறது; சிறிய நாடான அந்தோரா இவ்விரு நாடுகளுக்கிடையே நடுவே இடைப்பட்டப் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்றில் அரகோன் மன்னராட்சியும் நவார் இராச்சியமும் இந்த மலைத்தொடரின் இருபுறங்களிலும் விரிவுபட்டிருந்தன; சிறிய வடபகுதி பிரான்சிலும் தெற்குப் பெரும்பகுதி எசுபானியாவிலும் இருந்தன.[1][2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Preamble of the "Charter of the Catalan Language"
  2. Collins Road Atlas of Europe. London: Harper Collins. 1995. பக். 28–29. ISBN 0-00-448148-8. 

மேலும் வாசிக்க[தொகு]

Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரனீசு_மலைத்தொடர்&oldid=1785849" இருந்து மீள்விக்கப்பட்டது