கே. நாராயணன்
கே. நாராயணன் (K. Narayanan) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், தொகுப்பாளரும், கலை இயக்குநருமாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். 1953ல் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ்மொழித் திரைப்படங்களைத் தொகுத்துள்ளார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் 1933ல் திருச்சூர் அருகேயுள்ள நந்திபுரத்தில் திக்கட் ஹவுஸில் பிறந்தார். இவரது பெற்றோர் கண்ணன் நாயர் மற்றும் கல்யாணியம்மா ஆவர். இவரது தந்தை இந்திய இரயில்வேயில் பணிப்புரிந்ததால் இவர் தனது குழந்தைப் பருவத்தில் சென்னையில் இருந்தார். இவர் எட்டாம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தினார். இவரது மனைவி சரோஜினி என்பவராவார்.
திரைப்பயணம்
[தொகு]நாராயணன் 1947ல் சங்கர் என்பவரிடம் உதவியாளராக இருந்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படத் தொகுப்பாளராக சதாரமே என்ற கன்னடத் திரைப்படத்தில் தொகுப்பாளராக அறிமுகமானார். மலையாளத்தில் இவரது முதல் திரைப்படம் ஆஷாதீபம் ஆகும். இது தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் ஆசை மகன் என்ற பெயரில் வெளி வந்தது. [2] கேரள மாநிலத்தில் சிறந்த திரைப்படத் தொகுப்பாளருக்கான விருதை நான்கு முறை பெற்றவர்.
திரைப்படப்பட்டியல்
[தொகு]தமிழ்
[தொகு]- சிவகெங்கைச் சீமை
- பாத காணிக்கை
- பணத்தோட்டம்
- ஏழை பங்காளன்
- ஆண்டவன் கட்டளை
- அன்புக்கரங்கள்
- கௌரி கல்யாணம்
- அரச கட்டளை
- குடியிருந்த கோயில்
- கல்லும் கனியாகும்
- மாட்டுக்கார வேலன்
- நான் ஏன் பிறந்தேன்
- அன்னமிட்ட கை
- பட்டாம்பூச்சி
- குப்பத்து ராஜா
- அலாவுதீனும் அற்புத விளக்கும்
- ஒரே வானம் ஒரே பூமி
- பகலில் ஒரு இரவு
- திசை மாறிய பறவைகள்
- காளி
- குரு
- கோலங்கள்
மலையாளம்
[தொகு]- ஆசை மகன் (1953)
- மூலதனம் (1969)
- கள்ளிச்செல்லம்மா (1969)
- அம்பலப்புரா (1970)
- சீக்ஷா (1971)
- இன்பதாகம் (1978)
- சுமையுந்து (1980)
- அகிம்சை (1982)
- நாணயம் (1983)
- கைகேயி (1983)
- பூமிகா சாவ்லா (1991)
- நீலகிரி (1991)
- இன்ஸ்பெக்டர் பலராம் (1991)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "കെ.നായായണൻ". m3db.com. മലയാളം മൂവി & മ്യൂസിക് ഡാറ്റബേസ്. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2019.
- ↑ "K Narayanan" (in மலையாளம்). MSI. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.