குடந்தை சோதிடர் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடந்தை சோதிடர்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
தொழில்சோதிட வல்லுனர்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

குடந்தை சோதிடர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோதிட நிபுணர் ஆவார். பல்வேறு நாட்டின் அரச குமாரர்கள், அரச குமாரிகளின் ஜாதகங்களை சேர்த்து வைத்திருப்பவர். பழையாறை இளவரசி குந்தவை பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியும் அடிக்கடி ஜோதிடம் பார்க்க குடந்தை ஜோதிடரின் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். அவ்வாறு வருகையில் வந்தியத் தேவன் குந்தவையை முதன்முறை சந்திக்கிறான்.

சோழப் பேரரசின் மதிமந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றனாகவும் அறியப்படுகிறார். ராஜாங்க விசயங்களை தன்னுடைய பேச்சாற்றலால் பிறரிடமிருந்து அறிந்து அநிருத்தரிடம் சொல்வதாக பாண்டிய ஆபத்துதவிகள் நம்புகின்றார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆழ்வார்க்கடியான் நம்பி