கிரமவித்தன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரமவித்தன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்பாண்டிய ஆபத்துதவிகள்,
தொழில்வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழ குடும்பத்தினை பழிவாங்குதல்.
தேசிய இனம்பாண்டிய நாடு

கிரமவித்தன் அல்லது ரேவதாச கிரமவித்தன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். மேலும் பழுவூர் இளயராணி நந்தினி தேவியின் துணையுடன் வீரபாண்டியனின் மரணத்திற்காக சுந்தர சோழரின் குடும்பத்தைப் பழிவாங்க முயற்சிக்கும் நபராக வருகிறார்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

கிரமவித்தன் பொன்னியன் செல்வன் புதினத்தின் ஐந்தாம் பாகத்தில் அறிமுகமாகிறான். இவனது மகள் ராக்கம்மாள் நாகப்பட்டினம் புத்த விஹாரத்திலிருந்து வெளிப்பட்ட பொன்னியின் செல்வனைக் கொல்லும் பணி ரவிதாசனால் இவனுக்கு அளிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் ஏறிச்செல்லவிருக்கும் யானையின் உண்மைப் பாகனைக் கடத்திச் சென்று கட்டிப்போட்டு விட்டு விஷம் தடவிய அங்குசத்துடன் யானைப்பாகனைப் போல் கிரமவித்தன் யானையிடம் செல்கிறான். ஆனால் இவனது துர்நோக்கைப் புரிந்துகொண்ட யானை அருகில் சென்றதும் இவனைத் தூக்கி எறிந்து விடுகிறது. பொன்னியின் செல்வனைக் கொல்வதற்கு ரவிதாசன் தீட்டிய திட்டம் நிறைவேறாமல் போனது.

நூல்கள்[தொகு]

ரேவதாச கிரமவித்தனைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]