வானமா தேவி (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மொழிவர்மன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
வகைவரலாற்று கதைமாந்தர்
தொழில்சோழர்குல அரசி
துணைவர்(கள்)சுந்தர சோழர்
பிள்ளைகள் ஆதித்த கரிகாலன் இளைய பிராட்டி குந்தவை அருள்மொழிவர்மன்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

வானமா தேவி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல அரசியாவார். இவர் சுந்தர சோழரின் மனைவியும், ஆதித்த கரிகாலன் இளைய பிராட்டி குந்தவை அருள்மொழிவர்மன் ஆகியோரது அன்னையும் ஆவார்.

சுந்தர சோழர் நோயுற்று படுக்கையிலிருந்த போது நொடியும் அவரைப் பிரியாது, அவருக்குத் துணையாக இருக்கிறார். இரவு பகலாக அவரைக் கவனித்து வருகிறார். மலையமான் என்கிற சிற்றரசரின் மகளானவர். மந்தாகினி தேவி சுந்தர சோழரை காண வருகின்ற போது, சகோதரியாக பாவிக்கிறார். மந்தாகினியின் தோற்றத்தினைக் கண்டு சுந்தர சோழர் பயம் கொள்கிறார் என்று அவரின் மனம் அறிந்து குந்தவையிடம் மந்தாகினியை அலங்கரிக்கும் படி கூறுகிறார். சிறிது நேரத்தில் மந்தாகினியைக் காணவில்லை என்று அந்தப்புரத்துப் பெண்கள் தெரிவிக்கும் போது, அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கம் கொண்டு அவர் சென்றிருப்பார் எனத் தெரிவிக்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]