மலையமான் (கதைமாந்தர்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மலையமான் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
குடும்பம் | சுந்தர சோழர் வானமா தேவி |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
பேரன்கள் | ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் |
பேத்திகள் | குந்தவை |
மலையமான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ சிற்றரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற மலையமான் வம்சத்தில் ஒருவரை சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
பொன்னியின் செல்வனில்
[தொகு]திருக்கோவிலூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்ட மலைநாட்டினை ஆளும் சிற்றரசராக மலையமான் சித்தரிக்கப்படுகிறார். சுந்தர சோழரை மணந்து சோழப்பேரரசியாக இருக்கும் வானமா தேவியின் தந்தையாகவும், ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன், ஆகியோரது தாத்தாவாகவும் மலையமான் வருகிறார். ஆதித்த கரிகாலனோடு காஞ்சியில் தங்கியிருக்கும் மலையமான். பார்த்திபேந்திரன், ஆதித்த கரிகாலனோடு அவ்வப்போது உரையாடுகிறார். சுந்தர சோழர், வானமாதேவி திருமணத்தையும், ஆதித்த கரிகாலன் திருக்கோவிலூர் அரண்மனையில் பிறந்தையும், அவனுக்கு கரிகால் வளவன் என்றும், இராஜாதித்தியர் என்று பெயர் வைக்க பெரும் சண்டை நடந்ததையும் ஆதி்த்த கரிகாலனிடம் விவரிக்கிறார் மலையமான். இராஜாத்தித்தரின் போர்களை பற்றி மலையமான் வியந்து கூறிக் கொண்டிருக்கும் போது ஆதித்த கரிகாலன் ஒரு காட்சியைச் சுட்டிக் காட்டுகிறான்.
இராஜாளி ஒன்று தன் கால் நகங்களில் ஒரு புறாவைக் கொத்தித் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், இன்னொரு புறா அந்த இராஜாளியுடன் பாயப் போவது போலவும் தத்ரூபமாக அமைக்கப்பட்ட சிற்பத்தினை இருவரும் காண்கிறார்கள். ஆதித்த கரிகாலன் அந்த சிற்பத்தினைச் செய்த சிற்பி வன்மம் நிறைந்தவனாக இருக்ககூடும் என்று விவரிக்கிறான். அவனுக்கு வீரபாண்டியனைக் கொல்லும் போது தடுக்க முயன்ற நந்தினியின் ஞாபகம் வருகிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் இருந்தாலும் எதிரியைக் கொல்வேன் என்று மலையமான் கூறுகிறார். தன்னுடைய மகள் வானமாதேவி அவ்வாறு எதிரியிடம் கெஞ்ச மாட்டாள் என்றும் உறுதியாக தெரிவிக்கிறார். கடம்பூரை ஆண்டுகொண்டிருக்கும் சம்பபுவரையர் வம்சத்திற்கும் மலையமான் வம்சத்திற்குமான நெடும் பகையைக் கல்கி விவரித்துள்ளார்.
ஆதித்த கரிகாலன் சம்புவரையர் மாளிகைக்குச் செல்ல நினைக்கும் போது, மலையமான் முதலில் தடுக்கின்றார். பின்பு ஆதித்த கரிகாலனை நண்பர்களின் துணையோடு அனுப்பி விடுகிறார். சோழப் பேரரசனாக ஆதித்த கரிகாலன் திகழச் சம்புவரையர் மகள் மணிமேகலையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நம்புகிறார். பெரும் படைதிரட்டி கடம்பூர் மாளிகைக்கு அருகிலேயே இருக்கிறார். ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட அன்றிரவு அவனைக் கட்டியணைத்து அழுகிறார். தன்னுடைய படைகளை விட்டு மாளிகையைத் தரைமட்டம் ஆக்கும்படி கட்டளையிடுகிறார். ஆனால் அதற்கு முன்பே மாளிகையில் தீ பரவிவந்ததால், ஆதித்த கரிகாலன் உடலைத் தஞ்சைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்.