இடும்பன்காரி (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடும்பன்காரி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
இடும்பன்காரியிடம் பாண்டிய சைகையை காட்டும் சோமன் சாம்பவன்.
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்பாண்டிய ஆபத்துதவிகள்
தொழில்வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழ வம்சத்தினை பழிவாங்குதல்.
தேசிய இனம்பாண்டிய நாடு

இடும்பன்காரி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

இடும்பன்காரி வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றமைக்காகச் சோழ வம்சத்தினையே அழித்துவிடுவது என்று சபதம் செய்த பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவர். கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சேவகனாக வேடமிட்டு இருக்கிறான். சம்புவரையர் மாளிகையில் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சிற்றரசர்களின் கூட்டம் நடக்கின்றது. அதில் சுந்தர சோழருக்கு அடுத்து மதுராந்த தேவனை மன்னராக்குவது குறித்து ஆலோசனை நடைபெருகிறது. அதை முழுவதுமாகக் கவனித்து வருகிறான் இடும்பன்காரி. சம்புவரையர் மகனான கந்தன் மாறன் வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக் கொண்டு போக சொல்கிறான். அதைப் பயன்படுத்தி மாளிகையிலிருந்து வெளிவருகிறான்.

ரவிதாசன், சோமன் சாம்பவன் போன்ற மற்ற பாண்டியன் ஆபத்துதவிகள் அனைவரும் கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப்படை அருகே சந்தித்துப் பேசுகிறார்கள். இடும்பன்காரி கடம்பூர் மாளிகையில் வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் கண்டதாகக் கூறுகிறான். ஆழ்வார்க்கடியான் ஒற்றன் எனவே அவனைக் கண்டதும் கொன்றுவிடும்படி ரவிதாசன் எல்லோருக்கும் சொல்கிறான். இவை எல்லாவற்றையும் ஆழ்வார்க்கடியான் மரத்தின் பின்னிருந்து அறிந்து கொள்கிறான்.

நூல்கள்[தொகு]

ரவிதாசனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]