கருத்திருமன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருத்திருமன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்கரிய திருமால்
பால்வரலாற்று கதைமாந்தர்
தேசிய இனம்சோழ நாடு

கருத்திருமன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணி அம்மையை திருமணம் செய்துகொண்டவர் ஆவார்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

கரிய திருமால் என்னும் பெயரைக் கொண்ட கருத்திருமன் கோடிக்கரைக்கு அருகேயுள்ள தோப்புத்துறை என்னும் ஊரினைச் சார்ந்தவர். அவ்வூரிலிருந்து ஈழத் தீவுகளுக்குப் படகோட்டி கொண்டு வாழ்பவர். ஒரு முறை ஈழத்திலிருந்து தோப்புத்துறைக்குப் படகோட்டிக் கொண்டு வரும் போது, பெரும் புயலில் சிக்கிக் கொண்டார். படகு கவிழாமல் காத்துக் கோடிக்கரை அருகே வரும் போது மந்தாகினி தேவி கடலில் மிதப்பதனைப் பார்த்தார். அவளைக் காப்பாற்றி, திருமறைக்காடு எனும் ஊருக்கு அருகே படகைக் கரையேற்றி்னார். அப்போது அவள் பேசும், கேட்கும் திறனற்றவள் என்பதை அறிந்தார்.

மந்தாகினியை ஈழத்திலிருக்கும் தீவொன்றில் விட்டுவிட கருத்திருமன் மீண்டும் பயணப்பட்டபோது, வீரபாண்டியனையும் கடலிலிருந்து காத்து ஒரு தீவில் விட்டார். அங்கிருந்த ஒரு மனிதர், மந்தாகினியை அடையாளம் கண்டு, அவளைத் தன் மகளென்று கூறினார். வீரபாண்டியன் இலங்கை மன்னனுக்கு கருத்திருமனிடம் ஓலை கொடுத்தனுப்பினான். பின்பு ரோஹண நாட்டிற்கு கருத்திருமனும், வீரபாண்டியனும் சென்று, இலங்கை அரசனுடன் பல இடங்களுக்குச் சென்றார்கள். இறுதியாக ஒரு பள்ளத்தாக்கொன்றில் பாண்டிய மன்னர்களின் மணி மகுடமும், இரத்தின ஹாரமும், அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்களும், விலை மதிப்பில்லாத ஆபரணங்களும் இருந்தன.

வீரபாண்டியன் சில பொற்காசுகளைக் கருத்திருமனிடம் அளித்து மந்தாகினியை கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். மீண்டும் ஈழத்தீவிற்குக் கருத்திருமன் வந்த போது மந்தாகினியையும், அவள் தந்தையையும் காணாமல் திகைத்தான். கோடிக்கரைக்குச் சென்று பார்த்தபோது, தியாக விடங்கரின் வீட்டில் மந்தாகினி இருந்தாள். அவளுடன் இருந்த வாணி அம்மையை கருத்திருமன் திருமணம் செய்து கொள்ள எண்ணினான். அதற்குள் குழகர் கோவிலுக்கு வந்த செம்பியன் மாதேவி இரு சகோதரிகளையும் பழையாறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். எனவே பழையாறைக்கு கருத்திருமன் சென்ற போது, அங்கே வாணி அம்மை ஒரு குழந்தையைப் புதைக்கப் பள்ளம் தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு, குழந்தை உயிருடன் உள்ள செய்தியைத் தெரிவிக்கிறார். அதை அறி்ந்த வாணி அம்மை திகைக்கிறார். பின் இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை வளர்க்க முடிவு செய்து பழையாறையை விட்டு புறப்படுகின்றார்கள்.

தஞ்சை பாதாள சிறையில் பைத்தியமாகக் கருத்திருமன் அடைபட்டுக் கிடக்கின்றார். பாதாளச் சிறையில் பக்கத்து அறையில் சேந்தன் அமுதன் சிறையில் இருக்கும் போது, அவனிடம் தனக்குப் பாண்டிய மணிமகுடம் இருக்கும் இடம் தெரியுமென்றும், அதற்குப் பதிலாக பாடலொன்றைத் தனக்கு கற்றுத் தரும்படியும் கூறுகிறார். இந்த செய்தியைப் பினாகபாணியும் அறிகிறான். வந்தியத்தேவன் சிறையில் இருக்கும் போது, இருவரும் பேசி அங்கிருந்து தப்புகின்றார்கள். பழையாறையில் உள்ள குடிசையில் சேந்தன் அமுதன் நோயுற்று கிடப்பதை அறிந்து தப்பிச் செல்லும் முன் அவனைக் காண விழைகின்றார்கள். அங்கு மதுராந்தகத் தேவனிடம் அவன் பாண்டியனின் மகன் என்ற உண்மையைக் கருத்திருமன் கூறி, இலங்கைக்குச் சென்று உதவி பெற யோசனை கூறுகிறான். இருவரும் இலங்கைக்குப் போகும் வழியில் பினாகபாணியின் துணையுடன் வருகின்ற கந்தன் மாறனிடமிருந்து கருத்திருமன் தப்புவதோடு இக் கதாப்பாத்தரத்தினைக் கல்கி முடித்துக்கொள்கின்றார்.

நூல்கள்[தொகு]

கருத்திருமனை கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]