வார்ப்புரு பேச்சு:பொன்னியின் செல்வன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கல்கியின் பொன்னியன் செல்வன் நாவல் வரலாற்றினை தொடர்பு கொண்ட புனைவு என்பதால், இதில் எது வரலாற்று கதாபாத்திரம், எது புனைவு பாத்திரம் எனும் குழப்பம் படித்த மக்களுக்கு வரும். எனக்கும் வந்திருக்கிறது. பூங்குழலி, சேந்தன் அமுதன், நந்தினி ஆகியோர் புனைவு பாத்திரமென கூறுகி்ன்றார்கள். இவ்வாறு எந்த பாத்திரங்கள் புனைவு எனவும், எது வரலாற்றில் வாழ்ந்த மக்கள் எனவும் தெரிவாக இந்த வார்ப்புருவில் குறிப்பிடலாம் என்பது என் யோசனை. மிகச்சரியாக தெரியாதமையினால் யோசனையை விக்கியின் சபைக்கு வைப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஆண் கதாபாத்திரங்கள் ஒன்றாகவும், பெண் கதாபாத்திரங்களை அடுத்தும் தொகுத்துள்ளேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:46, 27 செப்டெம்பர் 2012 (UTC)