கந்தன் மாறன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கந்த மாறன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர்கந்தமாற வேள்
குடும்பம்செங்கண்ணர் சம்புவரையர், மணிகேகலை
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு


கந்தமாறன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் சம்புவரையர் குல சிற்றரச கதாப்பாத்திரம் ஆவான். இவன் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகனான வந்தியத்தேவன் என்பவனின் நண்பனாய் இருந்து பின் சந்தேகத்தால் இருவரும் பிரிந்தது போல் புதினப்படுத்தப் பட்டிருக்கிறது. இவனின் தங்கை மணிமேகலை.

சங்ககால எதிரிகள்[தொகு]

இப்புதினத்தின் படி இவன் வழிமுறையான சம்புவரையர் குலம் வல்வில் ஓரி என்ற சங்ககால குறுநில மன்னனின் வம்சத்தின் வழி வந்தவனாக சித்தரிக்கப்பட்டது. இந்த ஓரி மன்னன் காரி என்னும் மன்னனால் கொல்லப்பட்டான். இப்புதினத்தில் வரும் மலையமான் என்னும் கதப்பாத்திரம் இக்காரி மன்னனின் வம்சத்தில் வந்தவன். இதனால் சம்புவரைய மன்னர்களுக்கும் இக்காரி குடும்பத்திற்கும் உட்புகைச்சல் இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது.