பினாகபாணி (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாகபாணி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்மருத்துவரின் மகன்,
தொழில்மருத்துவன்
குறிப்பிடத்தக்க பிறர்நந்தினி தேவி
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

பினாகபாணி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பழையாறை மருத்துவரின் மகன் ஆவார்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

பினாகபாணி பண்டிதன் பழையாறை மருத்துவமனையில் தன்னுடைய தந்தையிடம் மருத்துவத்தினைக் கற்றுக் கொண்டிருந்தான். இளைய பிராட்டி குந்தவைக்கு ஆதித்த கரிகாலனின் ஓலையைக் கொண்டு வந்த வந்தியத் தேவனுக்கு, குந்தவை மீண்டும் ஒரு ஓலை தந்து ஈழத்தில் உள்ள அருள்மொழி வர்மனை பழையாறைக்கு அழைத்துவரச் சொன்னார். ஈழத்திற்குச் செல்வதற்குக் கோடிக்கரை வழியாக செல்லவேண்டும் என்பதால், வழிகாட்ட பினாகபாணியையும் உடன் அனுப்பினார். குந்தவை மீது தான் காதல் கொண்டதை வர்ணித்தப்படியே வந்தியத்தேவனும் பினாகபாணியுடன் பயணித்தான். உலக வாழ்க்கை முறையை அறியாமல் மருத்துவத்திலேயே மூழ்கியிருந்த பினாகபாணிக்கு வந்தியத்தேவன் மீது எரிச்சல் உண்டானது.

கோடிக்கரைக்கு வந்த போது பூங்குழலி பினாகபாணியைப் பரிகாசம் செய்தமையினால் மிகவும் கோபம் கொண்டான். வந்தியத் தேவனைப் பழுவூர் காவலர்களிடம் பிடித்துத்தர திட்டமிட்டான். ஆனால் வந்தியத்தேவனும், பூங்குழலியும் ஈழத்திற்குப் படகில் சென்றுவிட்டார்கள். பழுவூர் வீரர்கள் பினாகபாணியைச் சிறைபிடித்து அழைத்துச் சென்றனர். சிறைக்கு அவனைக் கொண்டு செல்கையில் குந்தவையும், நந்தினி தேவியும் அரண்மனையின் மேலிருந்து பார்த்தார்கள். குந்தவை சென்று பினாகபாணியை விடுவிக்கும் முன்பே, நந்தினி அவனை விடுவித்து அழைத்து சென்றாள். பழையாறைக்குக் குந்தவையைச் சந்திக்க வந்தியத் தேவன் வந்தால் தனக்குத் தகவல் தெரிவிக்கும் படி பினாகபாணியிடம் கூறினாள் நந்தினி. மேலும் ஒற்றர் படையில் சேர்த்துக் கொள்வதாகவும், பெரும் பரிசுகளைத் தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறினாள்.

வந்தியத்தேவனும் நந்தியின் யூகத்தினைச் சரியாக்கும் வகையில் மீண்டும் பழையாறையை அடைந்தான். ஆனால் மதுராந்தகத் தேவனின் நிமித்தக்காரனாக பழையாறைக்குள் வந்ததால், எளிதில் கண்டறிய இயலவில்லை. இருந்தும் பினாகபாணிக்குச் சற்றுச் சந்தேகம் ஏற்பட்டு வந்தியத்தேவனை ஒற்றன் எனக் கூறி பழுவூர் வீரர்களிடம் பிடித்துக் கொடுக்க முயன்றான். அப்போது திருமலை வந்து வந்தியத்தேவனைக் காப்பாற்றிவிட்டான்.

நூல்கள்[தொகு]

பினாகபாணியைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாகபாணி_(கதைமாந்தர்)&oldid=3653935" இலிருந்து மீள்விக்கப்பட்டது