தியாகவிடங்கர் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகவிடங்கர்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
Poonguzhali father ponniyin selvan.jpg
தியாகவிடங்கரும் அவர் மனைவியும் ஓவியம்:ஓவியர் மணியம்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்தியாக விடங்க கரையர்
தொழில்கலங்கரை விளக்கில் தீபமேற்றுதல்
தலைப்புபொன்னியின் செல்வன் நாவலின் கற்பனை கதாபாத்திரம்
குடும்பம் ராக்கம்மாள் மந்தாகினி வாணி் அம்மை
பிள்ளைகள்பூங்குழலி முருகய்யன்

தியாகவிடங்கர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற கோடிக்கரை கலங்கரை விளக்கினை பராமரிப்பு செய்கின்றவர். மேலும் பூங்குழலி, முருகய்யன் ஆகியோரின் தந்தையும், ராக்கம்மாளின் மாமனாரும் ஆவார்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தில், கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்கும் பணியின் நிமித்தமாக கோடிக்கரையில் வசிப்பவர் தியாகவிடங்கர். இவர் பூங்குழலி மற்றும் முருகய்யனின் தந்தையாவார். பழுவூர் இளையராணி நந்தினிதேவியின் உத்தரவினால் இருவர் ஈழத்திற்கு செல்வதற்காக முருகய்யனை படகோட்ட அழைத்துச் சென்றுவிட்டனர். அடுத்து பழையாறை இளவரசி குந்தவை நாச்சியாரின் ஓலையுடன் வந்திருந்த வல்லவரையன் வந்தியத்தேவன் ஈழத்திற்கு செல்ல படகோட்டும் நபர்கள் யாருமில்லை. என்பதை அறிகிறான். அப்போது வந்தியத்தேவனிடம் பூங்குழலியைப் போல படகோட்டுபவர் யாருமில்லை, ஆனால் அவள் சம்மதத்தினைப் பெற சிறிது கனிவுடனும் கவனுத்துடனும் அணுக வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் தியாகவிடங்கர். அதன்படியே அவளைச் சம்மதிக்க வைத்து ஈழத்தினை அடைகிறான் வந்தியத் தேவன்.

நூல்கள்[தொகு]

தியாகவிடங்கரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]