உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கண்ணர் சம்புவரையர் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கண்ணர் சம்புவரையர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் ஒருவராவர். கடம்பூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யும் சிற்றரசராகவும், மணிமேகலை, கந்தன் மாறன் தந்தையாகவும் பொன்னியின் செல்வனில் வருகிறார்.

கதைமாந்தர் இயல்பு

[தொகு]

கடம்பூர் மாளிகைக்கு வந்தியத் தேவன் வந்து கலகம் செய்து உள்நுழைகிறான். அந்த சப்தம் கேட்டு செங்கண்ணர் மாளிகை மேலிருந்து பார்க்கிறார். தன் மகன் கந்தன் மாறனை என்ன பிரட்சனை என்று பார்க்க சொல்கிறார். வந்திருப்பது தன் நண்பன் வந்தியத்தேவன் என்று செங்கண்ணரிடம் அறிமுகம் செய்கிறான் கந்தன் மாறன். ரகசிய கூட்டம் நடக்கும் நேரத்தில் வந்தியத் தேவன் வராதிருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார் செங்கண்ணர். அத்துடன் வந்தியத் தேவனை விரைவாக உறங்கவும் சொல்கிறார்.

சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகனை மன்னாக்க நினைக்கும் சிற்றரசர்களில் செங்கண்ணர் சம்புவரையரும் ஒருவர். தன்னுடைய மகளான மணிமேகலையையும் மதுராந்தகனுக்கு திருமணம் செய்விக்க எண்ணுகிறார். ஆனால் மதுராந்தகனை மணிமேகலைக்கு பிடிக்காத காரணத்தினால் ஆதித்த கரிகாலனை திருமணம் செய்விக்கலாம் என்று தன் மனதினை மாற்றிக் கொள்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]