தேவராளன் (கதைமாந்தர்)
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தேவராளன் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
முதல் தோற்றம் | பொன்னியின் செல்வன் |
உருவாக்கியவர் | கல்கி |
தகவல் | |
பிற பெயர் | பாண்டிய ஆபத்துதவிகள், |
தொழில் | வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழ குடும்பத்தினை பழிவாங்குதல். |
தேசிய இனம் | பாண்டிய நாடு |
தேவராளன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். மேலும் பழுவூர் இளயராணி நந்தினி தேவியின் துணையுடன் வீரபாண்டியனின் மரணத்திற்காக சுந்தர சோழரின் குடும்பத்தை பழிவாங்க முயற்சிக்கும் நபராக வருகிறார்.
கதாப்பாத்திரத்தின் இயல்பு
[தொகு]இவரது உண்மைப் பெயர் பரமேச்வரன். சுந்தர சோழர் அரசாங்கத்தில் வேலை பார்த்த இவன் பெரிய பழுவேட்டரையரின் கோபத்துக்கு ஆளாகி அவரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டான். அதனால் கோபம்கொண்டு சோழகுலத்தை அழிக்கச் சபதம் பூண்டவன்.
தேவராளன் ரவிதாசனுடன் இணைந்து கோடிக்கரை வழியாக ஈழத்தினை சென்றடைய எண்ணினான். தியாகவிடங்கரின் மகன் முருகய்யனை படகோட்டி ஈழத்தில் விட அழைத்தான். ஆனால் முருகய்யனுக்கு இதில் ஆர்வமில்லை. ஆனால் நிறைய பணம் தருவதாக கூறி அவனை சம்மதிக்க வைத்தனர். ஈழத்திற்கு சென்று அருள்மொழிவர்மனை கண்டறிய இயலாமல் திரும்பி கோடிக்கரைக்கே வந்தார்கள். அவர்களிடம் வந்தியத் தேவன் மாட்டிக் கொண்டான். இதையறிந்த அருள்மொழிவர்மன் வந்தியத் தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் புயலில் மாட்டிக் கொள்கின்றன. அதிலிருந்து தேவராளனும், ரவிதாசனும் பிழைக்கின்றார்கள்.
பழையாறைக்கு சென்று கொண்டிருக்கும் வந்தியத் தேவனை தேவராளன் அடையாளம் கண்டு கொள்கிறான். அவனைப் பிடித்து நந்தினியிடம் ஒப்படைக்கின்றான். வந்தியத் தேவனை வைத்து சோழ சாம்ராஜ்யத்தில் ஏதேனும் செய்யலாம் என்று நந்தினி அவனை விடுவிக்கின்றாள். அது மட்டுமன்றி தேவராளனையும் வந்தியத் தேவனுக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டாமென கட்டளையிடுகிறாள். சில நாள்கழித்து வந்தியத் தேவன் சுரங்கப்பாதையின் வெளியே தேவராளனிடம் மாட்டிக் கொள்கிறான். நந்தினி தேவியை தான் எஜமானியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி வந்தியத் தேவனை கொல்லத்துணிகிறான். அவன் வணங்கும் காளியே தனக்கும் தெய்வம் என்று வல்லவரையன் கூறுவதால், ஆழ்வார்க்கடியான் நம்பியை காட்டிக் கொடுத்தால் வந்தியத்தேவனை விடுவிப்பதாக கூறுகிறான். வந்தியத் தேவன் நட்புக்கு துரோகம் செய்வதில்லை, அதற்கு பதிலாக தான் மரணத்தினையே தழுவுகிறேன் என்று சொல்லும் போது, தேவராளனை தாக்கிவிட்டு வந்தியத் தேவனை மீட்கிறார், ஆழ்வார்க்கடியான்.
நூல்கள்
[தொகு]தேவராளனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.