காத்தியாயானர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காத்தியாயனர் (சமஸ்கிருத மொழி:कात्यायन) (கிமு 3-ஆம் நூற்றாண்டு) [1][2][3] பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத மொழி இலக்கண அறிஞர், கணிதவியலாளர் மற்றும் வேதகால ஆச்சாரியர் ஆவார். பதஞ்சலி முனிவரின் கூற்றுப்படி, காத்தியாயானர், தென்னிந்தியாவில் வாழ்ந்தவர். மேலும் பதஞ்சலி மகரிஷியும் யதாலௌகிகவைதிகேஷு என்று கூறினார். இது காத்தியாயனரின் வார்த்திகமாக கருதப்படுகிறது. காத்தியாயானர் வரருசியுடன் பலரால் இணைக்கப்பட்டுள்ளார். இவர் பிராகிருதம் மொழியியலின் அடித்தளமாகக் கருதப்படும் "பிரகிருத பிரகாஷத்தின்" ஆசிரியராகக் கருதப்படுகிறார்.

தோற்றம்[தொகு]

சில புராணங்களின் படி, காத்தியாயானர், வேத கால முனிவரான விசுவாமித்திரர் பரம்பரையில் பிறந்தவர். கதாசரிதசாகரம் எனும் சமஸ்கிருத நூல், வரருசியின் மற்றொரு பெயராகக் காத்தியாயானர் எனக்குறிப்பிடுகிறது. சிவபெருமானின் ஞானம் அல்லது சிவனைப் பின்பற்றுபவரான புஷ்பதந்தரின் மறு அவதாரமாக காத்தியாயானர் கருதப்படுகிறார். சிவபெருமானின் மகன் கார்த்திகேயனிடம் இருந்து இலக்கணம் கற்றுக்கொண்டதாக கதை குறிப்பிடுகிறது. இது கருட புராணத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருட புராணத்தில் கார்த்திகேயனை குமாரன் என்றும் அழைக்கப்படுவான். காத்யாயானருக்கு இலக்கண விதிகளை குழந்தைகளால் கூட புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கற்பிக்கிறார். [4][5]

காத்யாயினி தேவியின் உறவு[தொகு]

உண்மையில் அவரது முழுப்பெயர் வரருசி காத்யாயானர் என இருக்கலாம்.[5] காத்தியாயினி தேவியின் காளிகா புராணம் போன்ற நூல்களில், அவர் காளையை தனது மகளாகப் பிறக்க காத்தியாயினி தேவியை வழிபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே அவர் காத்தியாயனி அல்லது நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் வழிபடப்படும் "காத்தியாயினியின் மகள்" என்று அழைக்கப்பட்டார்.[6] [7]

வாமன புராணத்தின் படி, ஒருமுறை தேவர்கள் மகிசாசூரன் என்ற அரக்கனின் அட்டூழியங்களைப் பற்றி விவாதிக்க கோபத்துடன் ஒன்று கூடினர். அவர்களின் கோப ஆற்றல் கதிர்களின் வடிவத்தில் வெளிப்பட்டது. அக்கதிர்கள், காத்தியாயானர் தவத்தில் படிகமாக்கப்பட்டது. காத்தியாயானர் அப்படிகத்திற்கு சரியான வடிவம் கொடுத்தார். எனவே அவள் காத்தியாயனி என்றும் அழைக்கப்படுகிறாள்.

படைப்புகள்[தொகு]

சமஸ்கிருத மொழி அறிஞரான பாணினியின் அட்டாத்தியாயி இலக்கணத்திற்கான விளக்க உரை மற்றும் பதஞ்சலியின் மகாபாஷ்யத்திற்கான விளக்க உரைக்காக காத்தியாயானர் பெரிதும் அறியப்படுகிறார்.

காத்தியாயானர் பிற்கால சுல்பசூத்திரங்களில் ஒன்றையும் இயற்றினார். அது பலிபீட கட்டுமானங்களின் வடிவியல், செவ்வகங்கள், வலப்பக்க முக்கோணங்கள், ரோம்பஸ்கள் போன்றவற்றைக் கையாளும் ஒன்பது நூல்களின் தொடராகும்.[8] காத்தியாயானர் ஐந்திர இலக்கணப் பள்ளியைச் சேர்ந்தவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தியாயானர்&oldid=3410796" இருந்து மீள்விக்கப்பட்டது