இந்தியக் கணிதவியலாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய கணிதவியலாளர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1987, வியன்னாவில் இந்திய கணிதவியலாளர் கொமரவேலு சந்திரசேகர்.

கணித இயலுக்கு அரும் பங்களித்த புகழ் பெற்ற இந்திய கணித அறிஞர்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் ஒருகாலத்தில் பரவியன என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணிதவியலாளர்கள், இட-மதிப்பீடு, அளவுகோல், மற்றும் பூச்சியத்தின் கருத்தாக்கம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பினைக் கணிதத்திற்கு அளித்துள்ளனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத் தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.[1]

கி.மு.[தொகு]

கி.பி. 1-1000[தொகு]

கி.பி. 1000-1800[தொகு]

 • பிரம்மதேவர் கி.பி. 1060-1130
 • சிறீபதி, கி.பி. 1019-1066
 • கோபாலர் - பிபனாச்சி எண்கள் வரிசையைப் பற்றி ஃபிபனாச்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
 • ஏமச்சந்திரர் - இவரும் பிபனாச்சி எண்கள் வரிசையைப் பற்றி ஃபிபனாச்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
 • இரண்டாம் பாஸ்கரர் - நுண்கணிதம் பற்றி கருத்துக்கள் தந்தவர்.
 • கணேச உபாத்தியாயா 13 ஆம் நூற்றாண்டு ஏரணர் (Logician), மிதிலா குழுவினர்.
  • பக்ஷாதாரா, கங்கேஷாவின் மகன், தருக்கநூல் வல்லுநர், மிதிலா பள்ளி
 • ஷங்கரா மிஷ்ரா, தருக்கநூல் வல்லுநர், மிதிலா பள்ளி
 • நாராயண பண்டிதர் 1340-1400, கேரள (சேர நாட்டு) அறிஞர். கணித கௌமுடி என்னும் நூலை ஆக்கியவர். பொறுக்கல் கணக்கை (combinatorics) எதிர்பார்த்தவர்.
 • மாதவர் கி.பி. 1350-1425 கேரள (சேர நாட்டு) அறிஞர். நுண்கணிதத்தில் பல கருத்துக்களை விதைத்தவர். கணிதவியல் பகுப்பாய்வின் (mathematical analysis) தந்தை எனப் புகழப்படுபவர். கேரள வானவியல் மற்றும் கணிதப் பள்ளியைத் தோற்றுவித்தவர்.
 • பரமேசுவரர் கி.பி.1360 -1455, கேரள (சேர நாட்டு) அறிஞர். வானவியல், வடிவவியலில் பங்களிப்பு. மாதவரின் கேரளப் பள்ளி.
 • நீலகண்ட சோமயாஜி, கி.பி. 1444-1545 கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் தந்திர சங்கிரகா என்னும் நூலையும், ஆர்யபாட்டிய பாசியம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி.
 • மகேந்திர சூரி 14 ஆம் நூற்றாண்டு. யந்திரராஜா என்னும் நூலை எழுதியவர். வானவியல் பற்றிக் கணக்கிடும் விண்மீன்கணித்தட்டு (astrolobe) பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார்.
 • சங்கர வாரியார் சுமார் கி.பி. 1530. நீலகண்ட சோமயாஜியின் எழுதிய தந்திர சங்கிரகா என்னும் நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார்.
 • வாசுதேவ சர்வபாவ்மர், 1450-1525, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
 • ரகுநாத ஷிரோமணி, (1475-1550), தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
 • ஜயேஷ்டதேவர் கி.பி. 1500-1610, கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் யுக்திபாஷா என்னும் நுண்கணிதம் பற்றிய முதல் நூலை எழுதியவர். மாதவரின் கேரளப் பள்ளி.
 • அச்சுத பிஷாரடி, கி.பி.1550-1621, கேரள (சேர நாட்டு) அறிஞர். வானவியல், கிரகணக் கணக்கீடு ஆகியவற்றில் பங்களித்துள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி.
 • மதுரநாதா தர்காவகிஷர், நூ. 1575, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
 • ஜகதீஷ தர்கலாங்காரர், நூ. 1625, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
 • கடதாரா பட்டாச்சார்யர், நூ. 1650, தருக்கநூல் வல்லுநர், நவத்விப பள்ளி
 • முனீசுவரர் 17 ஆம் நூற்றாண்டு
 • கமலாகரர் (1657)
 • சகன்னாத சாம்ராட் (1730)

கி.பி. 1800களில்[தொகு]

கி.பி. 1900 களில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-07-08 அன்று பார்க்கப்பட்டது.