சங்கர வாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் குரு பரம்பரை

சங்கர வாரியார் (Shankara Variyar) (பிறப்பு:1500-இறப்பு:1560[1]) கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். இவரது குடும்பத்தினர் தற்கால பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே உள்ள கோயிலுக்கு உதவியாளராக பணி செய்தவர்கள்.[2]

கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி பரம்பரை[தொகு]

கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் குருகுலம் முறையில் பயின்ற சங்கர வாரியாருக்கு நீலகண்ட சோமயாஜி (1444–1544) மற்றும் ஜேஷ்டதேவர் (1500–1575) கல்வி கற்றுக்கொடுத்தனர்.

படைப்புகள்[தொகு]

  • யுக்தி-தீபிகா - தந்திரசம்காரம் குறித்த விளக்க உரை
  • லகு-விருத்தி - தந்திரசம்காரம் குறித்த உரைநடையில் விளக்க உரை.
  • கிரியாகிரமகாரி - இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய லீலாவதி எனும் நூலுக்கு நீண்ட உரைநடை விளக்கம்
  • வானவியல் விளக்கம், கிபி 1529
  • வானவியல் கையேடு, 1554

மேற்கோள்கள்[தொகு]

  1. Joseph, George Gheverghese (2009), A Passage to Infinity: Medieval Indian Mathematics from Kerala and Its Impact, SAGE Publications India, p. 21, ISBN 9788132104810.
  2. Plofker, Kim (2009). Mathematics in India. Princeton: Princeton University Press. பக். 220, 324. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_வாரியார்&oldid=3793248" இலிருந்து மீள்விக்கப்பட்டது