உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் ஆரியபட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் ஆரியபட்டா (Aryabhata II, கிபி 920கள் – 1000கள்) என்பவர் இந்திய கணிதவியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் மகா சித்தாந்தம் என்ற நூலை எழுதினார்.

மகாசித்தாந்தம்

[தொகு]

ஆர்யபட்டரின் மிகச் சிறந்த ஆக்கம் மகாசித்தாந்தம் ஆகும். பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த ஆய்வு சமக்கிருதத்தில் வசன வடிவத்தில் எழுதப்பட்டது. முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் கணித வானியல் தொடர்பானவை. ஏனைய தலைப்புகள் அக்காலத்தில் இந்திய கணிதவியலாளர்கள் ஏற்கனவே ஆராய்ந்த தலைப்புகளை உள்ளடக்குகின்றன. முதல் பன்னிரண்டு அத்தியாயங்களில் கோள்களின் நிலநிரைக்கோடுகள், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், கிரகணங்களின் கணிப்பு, சந்திர பிறை, கோள்களின் மறைவு மற்றும் உதயம், கோள்கள் தமக்கிடையேயும் மற்றும் விண்மீன்களுடனுமான தொடர்புகள் போன்றவை எழுதப்பட்டுள்ளன.

மகாசித்தாந்தத்தின் அடுத்த ஆறு அத்தியாயங்களில் கோள்களின் நிலநிரைக்கோடுகளைக் கணக்கிட பயன்படுத்தப்படும் வடிவவியல், புவியியல் மற்றும் இயற்கணிதம் போன்ற தலைப்புகள் எழுதப்பட்டுள்ளன. by = ax + c என்ற தேராச் சமன்பாட்டைத் தீர்க்கும் விதிகளை விபரமாக விளக்கியிருக்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • O'Connor, John J.; Robertson, Edmund F., Aryabhata II, MacTutor History of Mathematics archive, University of St Andrews.

மேலதிக வாசிப்புக்கு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஆரியபட்டா&oldid=4004705" இலிருந்து மீள்விக்கப்பட்டது