உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். டீ. சௌலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதமன் சௌலா
Sarvadaman Chowla
பிறப்பு(1907-10-22)அக்டோபர் 22, 1907
இலண்டன், இங்கிலாந்து
இறப்புதிசம்பர் 10, 1995 ( 1995 -12-10) (அகவை 88)
லராமி, வயோமிங், ஐக்கிய அமெரிக்கா
துறைகணிதம்
பணியிடங்கள்Institute for Advanced Study
கான்சாஸ் பல்கலைக்கழகம்
கொலராடோ ப்லகலைக்கழகம்
பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜான் லிட்டில்வூட்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜான் பிரீட்லாண்டர்
விருதுகள்பத்ம பூசன்

சர்வதமன் டி. எஸ். சௌலா (Sarvadaman D. S. Chowla, அக்டோபர் 22, 1907 - டிசம்பர் 10, 1995) கணிதத்தில் எண் கோட்பாட்டில் இருபதாவது நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்து உலகப்புகழ் பெற்ற ஒரு இந்திய-அமெரிக்க கணிதவியலர்.

பிறப்பும் கல்வியும்

[தொகு]

பிறப்பு: 22 அக்டோபர் 1907 இங்கிலாந்தில். தந்தை: கோபால் சிங் சௌலா. கணித வியலர். லாஹூர் அரசுக்கல்லூரியில் பேராசிரியர்.

சிறுவயதிலேயே சர்வதமன் கணிதத்தில் சிறந்து விளங்கினார். கல்லூரியில் இளநிலை வகுப்பில் படிக்கும்போதெ இந்தியக் கணிதக்கழக ஆய்வுப் பத்திரிகையின் (Journal of the Indian Mathematical Society) 'கணக்குகள்' பிரிவுக்கு பல கணக்குகள் வழங்கி வந்தார். 1928இல் லாஹூர் அரசுக்கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தந்தை அவரை மேல்படிப்பிற்கு 1929 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டு அதே ஆண்டு பாரிசில் காலமானார். தந்தை இறந்தது சர்வதமனுக்கு ஒரு பேரிடியாக இருப்பினும் அதை சமாளித்துக்கொண்டு தன் ஆராய்ச்சி வேலையில் மூழ்கினார். பேராசிரியர் ஜே. ஈ. லிட்டில்வுட்டின் இயக்கத்தின் கீழ் Analytic Theory of Numbers என்ற பிரிவில் Thesis ஒன்றை தன் கைப்பட எழுதி 1931 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்

[தொகு]
  • 1931-32 செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரி, தில்லி
  • 1932-33 வாராணசி இந்து பல்கலைக்கழகம்
  • 1933-36 ஆந்திரா பல்கலைக்கழகம், வால்டேர்.
  • 1936-47 அரசுக்கல்லூரி, லாஹூர். இக்காலகட்டத்திலேயே அவர் இந்தியாவின் சிறந்த கணிதவல்லுனர்களில ஒருவராக எண்ணப்படத் தொடங்கினார்.
  • 1947: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட அமளியால், சௌலா குடும்பம் இந்தியாவுக்குக்குடிபெயர்ந்தது.
  • 1948 அமெரிக்காவில் பிரின்ஸ்டனிலுள்ள Institute for Advanced Studies இன் அழைப்பின்பேரில் அங்கு சென்று பணி புரிந்தார்.
  • 1949 - 52 கான்சாஸ் பல்கலைக்கழகம்.
  • 1952 - 63 பேராசிரியர், கொலராடோ ப்ல்கலைக்கழகம்.
  • 1963 - 76 பேராசிரியர், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்.
  • 1976 - 83 Institute of Advanced Studies, Princeton.

சாதனைகள்

[தொகு]
  • சர்வதமன் சௌலாவின் ஆய்வுகள் (ஏறத்தாழ 350 ஆய்வுக் கட்டுரைகள்) 1417 பக்கங்கள் கொண்ட புத்தகமாகப் [1] பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
  • அவருடைய ஆய்வுகளால் சிறப்புபெற்ற கணித வகைப்பாடுகளின் பட்டியல்:
    • எண் கோட்பாடு (வாரிங் பிரச்சினை, எண் பிரிவினைகள்);
    • ரீமான் ஜீட்டா சார்பு
    • இருபடிய அமைப்புகள்
    • பெர்னோவிலி எண்கள்
    • டயோஃபாண்டஸ் சமன்பாடுகள்
    • லாடின் சதுரங்கள், முதலியவை
  • அவர் கூட்டாக இணைந்து பிரசுரித்த மற்ற கணித வல்லுனர்களின் பட்டியல்:
    • Harold Davenport, Emil Artin, Atle Selberg, Helmut Hasse, Louis Mordell, Thoralf Skolem, Paul Erdős, Marshall Hall, Goro Shimura, Hans Zassenhaus, Richard Brauer.
  • சௌலாவின் பெயரை ஏற்ற புகழ்பெற்ற கணிதத் தேற்றங்கள்:
    • பிரக்-ரைஸர்-சௌலா தேற்றம்
    • சௌலா-மார்டெல் தேற்றம்
    • சௌலா-ஸெல்பர்க் வாய்பாடு
  • அவர் இயற்றிய ஓர் அரிய நூல்: The Riemann Hypothesis and Hilberts Tenth Problem. Routledge, New York 1965.

பரிசுகள், விருதுகள், முதலியவை

[தொகு]
  • Member, Indian Nationsl Science Academy
  • பத்மபூஷன் (இந்திய அரசாங்கம்)
  1. Chowla, James Huard, Kenneth Williams (Herausgeber): Collected Papers of S. Chowla. Montreal 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._டீ._சௌலா&oldid=2378410" இலிருந்து மீள்விக்கப்பட்டது