அல்பி மோர்க்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பி மோர்க்கல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோனஸ் ஆல்பர்டஸ் அல்பி மோர்க்கல்
பிறப்பு10 சூன் 1981 (1981-06-10) (அகவை 42)
விரீனிகிங், டிரான்ஸ்வல் மாகாணம், தென்னாப்பிரிக்கா
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை மித விரைவு வீச்சாளர்
பங்குசகலத் துறையர்
உறவினர்கள்மோர்னி மோர்க்கல் (சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 304)19 மார்ச் 2006 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 76)பெப்ரவரி 20 2004 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப3 மார்ச் 2012 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்81
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1999–2006கிழக்கு மாகாண துடுப்பாட்ட அணி
2004–டைட்டன்ஸ் துடுப்பாட்ட அணி (squad no. 81)
2008–2013சென்னை சூப்பர் கிங்ஸ்
2008–2010தர்ஹாம் துடுப்பாட்ட அணி
2012சாமர் செட் துடுப்பாட்ட அணி
2013டெர்பிஷயர் துடுப்பாட்ட அணி
2014பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2015டெல்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் முதல்தரத் துடுப்பாட்டம் அ பிரிவு
ஆட்டங்கள் 1 58 77 200
ஓட்டங்கள் 58 782 4,117 3,388
மட்டையாட்ட சராசரி 58.00 23.69 44.26 28.71
100கள்/50கள் 0/1 0/2 8/23 1/16
அதியுயர் ஓட்டம் 58 97 204* 134*
வீசிய பந்துகள் 192 2,073 11,807 7,611
வீழ்த்தல்கள் 1 50 203 206
பந்துவீச்சு சராசரி 132.00 37.98 30.28 30.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/44 4/29 6/36 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 15/– 34/– 48/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, 10 December 2016

ஜோனஸ் ஆல்பர்டஸ் அல்பி மோர்க்கல் (Johannes Albertus Morkel[1] பிறப்பு: சூன் 10, 1981) தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். பலமுனை துடுப்பாட்ட வல்லுனரான இவர் இடதுகை மட்டையாளரான இவர் வலது கை மித விரைவு வீச்சாளர் ஆவார்.[2] இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் ஆறு ஓட்டங்களை அடிக்கும் திறனால் லான்ஸ் க்லூஸ்னருடன் ஒப்பிடப்படுகிறார்.[1] இவருக்கு மோர்னி மோர்க்கல் எனும் சகோதரர் உள்ளார்.[1] அவரும் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர்களின் தந்தையும் தென்னாபிரிக்க மாநில துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 44.0 ஆகவும் பந்துவீச்சு சராசரி 29.0 ஆகவும் உள்ளது.

சர்வதேச போட்டிகள்[தொகு]

இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவரின் முதல் போட்டியில் 48 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் சகோதரரான மோர்னி மோர்க்கலுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினர். இதன்மூலம் துவக்க ஓவர்களை வீசிய முதல் சகோதரர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் வருடத்தில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் இவர் சகலத் துறையராக அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்தத் தொடரின் விளையாடும் அணியில் இவருக்கு நிலையான இடம் கிடைத்தது. ஏனெனில் பந்துவீச்சு மற்றும் மட்டையாளராகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் வெற்றிக்கும் உதவினார். 2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜயுடன் இணைந்து மூன்றாவது இணைக்கு அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின்போது சூப்பர் சிக்ஸ்சில் 105 மீட்டர் அளவில் ஆறு ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தார். நான்காவது பருவ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை தக்கவைத்தது.

ஏப்ரல் 12, 2012 ஆம் ஆண்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 206 ஓட்டங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அனிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின் விராட் கோலி வீசிய ஓவரில் 28 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இவரை 2,40,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. பின் 2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அனி நிர்வாகம் 30,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. ஏப்ரல் 9, 2015 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 8 நான்குகளும், 1 ஆறுகளும் அடங்கும். இறுதியில் சென்னை அணி 1 ஒட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணிக்காக விளையாடினார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Albie Morkel", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-15
  2. "Cricinfo - Statsguru - JA Morkel - ODIs - Innings by innings list", stats.espncricinfo.com, archived from the original on 2016-03-08, பார்க்கப்பட்ட நாள் 2018-05-15

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பி_மோர்க்கல்&oldid=3630749" இலிருந்து மீள்விக்கப்பட்டது