உள்ளடக்கத்துக்குச் செல்

மங்காத்தா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்காத்தா
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்பு
கதைவெங்கட் பிரபு
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புகே. எல். பிரவீன்
என். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்கிளௌட் நயன் மூவீஸ்
விநியோகம்கிளௌட் நயன் மூவீஸ்
சன் பிக்சர்ஸ்
அயங்கரன் (உலகளவில்)
ராடான் மீடியாவொர்க்ஸ் (தமிழ்நாடு திரைப்பட வினியோகிஸ்த உரிமை)
வெளியீடுஆகத்து 31, 2011 (2011-08-31)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்75 கோடி[சான்று தேவை]

மங்காத்தா (Mankatha) 2011 ஆகஸ்ட் 31 ல் வெளியான ஒரு தமிழ் அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். இப்படம் அஜீத் குமாரின் 50 ஆவது படம் ஆகும். தயாநிதி அழகிரியின் கிளௌட் நயன் மூவீஸ் கலையகம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. மங்காத்தா படம் தமிழில் வெளிவந்ததை அடுத்து, விரைவில் கேம்ப்ளர் என்ற பெயரில் தெலுங்கில் வர இருக்கிறது. மலையாளத்திலும் இப்படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படம் 2007-ல் வெளியான பில்லா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[1][2][3]

கதைச் சுருக்கம்

[தொகு]

அஜித் நாற்பது வயது நிரம்பிய பணியிடை நீக்கம் ஆகியிருக்கும் காவல் அதிகாரி. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரி. கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் காதலர்கள். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜீன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் குழுவுடன் களமிறங்குகிறார்.

ஜெயப்ரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகின்றனர். பணியிடை நீக்கம் ஆன காவல் அதிகாரி அஜித்தும் த்ரிஷா மூலம் ஜெயப்ரகாசை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்ரகாஷ் குழுவினர் அதிக கவனத்துடன் பணத்தை பாதுகாக்கிறார்கள். திருட திட்டம் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை திருடுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜூன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்ரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது?. திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குழுவிற்கா, காவல்துறைக்கா. என்பது தான் கதை.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா ஆவார்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "விளையாடு மங்காத்தா"  கங்கை அமரன், சுசரிதா (இந்தி), யுவன் சங்கர் ராஜா (ஆங்கிலம்)யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித், சுசரிதா, அனிதா, பிரேம்ஜி அமரன் 6:02
2. "நீ நான்"  நிரஞ்சன் பாரதிஎஸ். பி. பி. சரண் மற்றும் பவதாரிணி 4:07
3. "வாடா பின் லேடா"  வாலிபென்னி தயாள், கிரிஷ், சுசரிதா 4:29
4. "மச்சி ஓப்பன் தி பாட்டில்" (ஒருங்கிணைத்தவர் பிரேம்ஜி அமரன்)வாலிமனோ, பிரேம்ஜி அமரன், ஹரிசரண், திப்பு மற்றும் நவீன் 4:46
5. "நண்பனே"  வாலிமதுஸ்ரீ மற்றும் யுவன் சங்கர் ராஜா 5:02
6. "பல்லே லக்கா"  கங்கை அமரன்கார்த்திக், விஜய் யேசுதாஸ் மற்றும் அனுசா துரை தயாநிதி 5:15
7. "தீம் இசை"   3:04
8. "விளையாடு மங்காத்தா (Extended Dance Mix)" (மறு மீளுருவாக்கம் பிரேம்ஜி அமரன்)கங்கை அமரன், சுசரிதா (இந்தி), யுவன் சங்கர் ராஜா (ஆங்கிலம்)யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித், சுசரிதா, அனிதா, பிரேம்ஜி அமரன் 6:05
மொத்த நீளம்:
38:51

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்காத்தா_(திரைப்படம்)&oldid=4160471" இலிருந்து மீள்விக்கப்பட்டது