குப்பூர்
Appearance
குப்பூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636704 |
குப்பூர் (Kuppur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 284 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1335 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5453 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2598 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2855 என்றும் உள்ளது. ஊரின் மொத்த எழுத்தறிவு விகிதம் 61.7 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.