உள்ளடக்கத்துக்குச் செல்

மயில் ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயில் ஆட்டம்

மயில் ஆட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.

மயில்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.கரகாட்டத்தின் துணையாட்டமாகவும், கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_ஆட்டம்&oldid=3628366" இலிருந்து மீள்விக்கப்பட்டது