நீல. பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீல.பத்மநாபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நீல.பத்மநாபன் (பிறப்பு: ஜூன் 24, 1938) தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, என சகல துறைகளிலும் எழுதுபவர்.

தமிழ்நாடு, திருவனந்தபுரத்தில் நீல.பத்மநாபன் பிறந்தார். 2007 ஆம் ஆண்டு சாகித்ய அகதமி விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.

முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ள நீலபத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவரின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன. "கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது.இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான் , என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்" என்று நீல.பத்மநாபன் தன்னைப்பற்றி குறிப்பிட்டதுண்டு.

[தொகு] படைப்புகள்

நாவல்கள்

  • தலைமுறைகள் - 1968
  • பள்ளிகொண்டபுரம் - 1970
  • பைல்கள் - 1973
  • உறவுகள் - 1975
  • மின் உலகம் - 1976
  • நேற்று வந்தவன் - 1978
  • உதய தாரகை - 1980
  • பகவதி கோயில் தெரு - 1981
  • போதையில் கரைந்தவர்கள் - 1985

சிறுகதைகள்

  • மோகம் முப்பது ஆண்டு - 1969
  • சண்டையும் சமாதானமும் - 1972
  • மூன்றாவது நாள் - 1974
  • இரண்டாவது முகம் - 1978
  • நாகம்மா - 1978
  • சத்தியத்தின் சந்நிதியில் - 1985
  • வான வீதியில் - 1988

கவிதைகள்

  • நீலபத்மநாபன் கவிதைகள் - 1975
  • நா காக்க - 1984

கட்டுரைகள்

  • சிதறிய சிந்தனைகள் - 1978

இலக்கிய பார்வைகள்

  • திரட்டு நூல் - குரு சேத்திரம் - 1976
  • தற்கால மலையாள இலக்கியம் தமிழ் - 1985

மலையாளம்

  • பந்தங்கள் - 1979
  • மின் உலகம் - 1980
  • தலைமுறைகள் - 1981
  • பள்ளிக்கொண்டபுரம் - 1982
  • கதைகள் இருபது - 1980
  • எறும்புகள் - 1987
"http://ta.wikipedia.org/w/index.php?title=நீல._பத்மநாபன்&oldid=863299" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி