ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று
Australian Open
ஆஸ்திரேலிய ஓப்பன்
200px
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம் மெல்பேர்ண்
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
கூடும் இடம் மெல்பேர்ண் பூங்கா
தரை Plexicushion
ஆண்கள் தேர்வு 128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு 128S / 96Q / 64D
பரிசுப் பணம் A$23,140,000[1]
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்

ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும். இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகிறது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.

ஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

ஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.

பொதுவாக இச்சுற்றுப் போட்டிகளை மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்ப்பர். 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்[2]. ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன[3].

[தொகு] மேற்கோள்கள்

  1. "Pay increase for AO winners". Australian Open (11 January 2009). பார்த்த நாள் 2009-01-17.
  2. Australian Open 2009 - the final word
  3. Sydney plans Australian Open bid
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்